Saturday, January 30, 2010

கோவா : திரை விமர்சனம்


ன்லைனில் டிக்கெட் புக் பண்ணிவிட்டாலும் ஆபீசிலிருந்து கிளம்ப நேரமானதால் சற்று வேகமாகவே சென்று சரியான நேரத்தில் அடைந்துவிட்டேன் காசி தியேட்டரை. நண்பர்கள் யாரும் சிக்காததால் நான் மட்டும் தனியாகவே சென்றிருந்தேன்.

ரண்டுபடிகள் வெற்றிகரமாக ஏறிய வெங்கட் பிரபுவுக்கு இந்தமுறை சற்று தடுமாற்றம் வருமென்றே நினைக்கிறேன். முதல் இரண்டு படங்களான சென்னை 28, சரோஜா இரண்டிலும் இருந்த பல விஷயங்கள் இப்படத்தில் மிஸ்ஸிங். அவை கதை, திரைக்கதை வேகம், லாஜிக், பாடல்கள், இயல்பான நக்கல். இவை அனைத்தும் சேர்ந்து நம்மை படத்தில் ஒன்றவிடாமல் செய்துவிடுகின்றன. ஆரம்பத்திலிருந்தே ஒருவித சினிமாத்தனமான காட்சிகளுடனே நகர்கிறது படம். பல இடங்களில் நம்மை சிரிக்கவைத்தாலும் நம் மனதில் ஒட்டவில்லை. சென்னை 28 நான் மிகவும் ரசித்த படம். சரோஜாவும் கூட. அதிலிருக்கும் வசனங்கள், நகைச்சுவை காட்சிகள் பலவும் என் மனதில் பல நாட்கள் நீங்காமல் இருந்தவை. அதுபோல் இப்படம் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தை என்று சொல்ல எதுவுமே இல்லை. தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில், கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் வாழும் காளைகளாக மூன்று நண்பர்கள். முறையே பிரேம்ஜி, ஜெய் மற்றும் வைபவ். மதுரை செல்லும் மூவருக்கும் ஜெய்யின் நண்பர் மூலமாக வாழ்வில் ஒரு லட்சியம் வருகிறது. அந்த லட்சியம், கோவா சென்று வசதியான வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து வாழ்வில் செட்டில் ஆகவேண்டும் என்பது. மீண்டும் ஊர் திரும்பமுடியாத நிலையில், அந்த லட்சியத்தை நிறைவேற்ற மூவரும் கோவா கிளம்புகின்றனர். அங்கே அவர்களுக்கு கிடைக்கும் நண்பர்கள், எதிரிகள், பிகர்கள், பீர்கள் இவைதான் மொத்த படமே. அப்படி என்னதான் நடந்தது, இறுதியில் மீண்டும் தங்கள் கிராமத்திற்கு திரும்பினார்களா, அவர்கள் லட்சியம் என்னவாயிற்று என்பவற்றை திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது படத்தில். அது போதாதென்று ஒருவர் மட்டும் பல வேடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறார். காரணம் தெரியவில்லை. இறுதியாக 3 நடிகர்களின் சிறப்புத் தோற்றம் வேறு. பிரேம்ஜிக்கு கொஞ்சம் அதிக பொறுப்பு, சரியாகவே செய்துள்ளார். சில பெரிய நடிகர்களை இமிடேட் செய்துள்ளார். சம்பத்-அரவிந்தின் நட்பு(??!) நம் தமிழ் சினிமாவிற்கு புதிது. ரசிக்க முடியல்லை. ஆனால் சம்பத்தின் உடல் மொழி அருமை. பிறரின் நடிப்பு..., ஓகே...! அனைவராலும் ரசிக்கப்பட்ட இரண்டு படங்களை எடுத்த வெங்கட் பிரபு இம்முறை அதை செய்யவில்லை. கண்டிப்பாக பெரியவர்கள் மற்றும் பெண்களால் இப்படத்தை ரசிக்க முடியாது என்பது என் கருத்து.

சையை பொறுத்தவரை கிராமத்துப் பாடல்கள் நன்றாக உள்ளது. மற்ற பாடல்கள் அனைத்திலும் இசை மட்டுமே கேட்கிறது. இறுதியில் மிஞ்சுவது தலைவலிதான். என்ன ஆச்சு யுவன்..? கேமரா அருமை. கோவாவின் எழிலை செழிப்பாக நம் கண்முன் காட்டுகிறது. இரண்டரை மணி நேரம் பல இடங்களில் சிரிக்கவைத்து, பல இடங்களில் நெளிய வைத்து, யூத்துகளுக்காக மட்டுமே படம் எடுத்துள்ளார் வெங்கட் பிரபு. ஆனால் எங்களாலேயே ரசிக்கமுடியவில்லையே வெங்கட் சார்...!! (நம்புங்க, நான் நெசமாவே யூத்து தான்..!). உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம், கைவிட்டுவிடாதீர்கள்..!



கோவா : Just for Guys...!



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Monday, January 25, 2010

மீண்டும் அவள் முத்தங்கள்


தூண்டினாள்..,
தாண்டினேன்..,
ஒதுக்கினாள்..,
ஒதுங்கினேன்..,
இதழ் கேட்கிறது...,
மீண்டும் அவள் முத்தங்கள்..,
கேட்டால் எனைக்
காமன் என்றெண்ணிவிடுவாளோ..?!
சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Thursday, January 21, 2010

உங்கள் ஒட்டு கண்டிப்பாக தேவை. தயவுசெய்து உதவுங்கள்...!


தோழர்களே..,


லகின் தலைசிறந்த 'அறக்கட்டளை' அமைப்புக்கான ஓட்டெடுப்பை 'Chase Community' அமைப்பு 'FaceBook' பயன்பாட்டாளர்கள் மூலம் நடத்திவருகிறது. இதில் முதலாவதாக வரும் அமைப்பிற்கு $1,000,000 (1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கிடைக்கும். உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன், இதில் நமது நாட்டின் 'Isha Foundation' தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்றே ஒட்டு போட கடைசி நாள். முதலிடம் வர மேலும் பல ஓட்டுக்கள் தேவைப்படுவதால், உங்கள் ஒவ்வொரு ஓட்டும் மதிப்புமிக்கதாகிறது. இதுவரை நீங்கள் ஓட்டளிக்கவில்லை என்றால் தயவுசெய்து இன்றே, இப்போதே ஒட்டு போடுங்கள். புதிதாக 'Facebook ' Account ஆரம்பித்தாவது போடுங்கள். நீங்கள் ஒரு பைசா செலவு செய்ய வேண்டாம். ஒரே ஒரு ஒட்டு போதும். பலர் வாழ்க்கை மாறும்.

ஓட்டளிக்க முகவரி : http://apps.facebook.com/chasecommunitygiving/charities/1111517

காணொளி : http://www.youtube.com/watch?v=_5zACWGXduk




மேலும், ஒட்டு போட்டவர்கள், போடாதவர்கள் அனைவரும் இதை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அலுவலர்கள், எதிரிகள் அனைவருக்கும் எடுத்துக்கூறுங்கள். இதில் வென்றால் பயனடையப் போவது நமது நாட்டு ஏழைக் குழந்தைகள், மக்கள்...! முழுக்க முழுக்க அவர்களின் கல்வி, உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்காக மட்டுமே செலவு செய்யப்படும். கண்டிப்பாக சத்குரு அவர்கள் அரசியல்வாதி கிடையாது. நம்மால் செய்ய முடியாததை மற்றொருவர் செய்கிறார், அதற்கு உதவியாவது செய்யலாமே.


ன்றே கடைசி நாள்.....! இப்போதே ஒட்டு போடுங்கள்....!


உங்கள் ஒரு ஒட்டு = ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகளின் கல்வி + வாழ்க்கை.


தயவுசெய்து உதவுங்கள்...! உதவ செய்யுங்கள்...!
தயவுசெய்து உதவுங்கள்...! உதவ செய்யுங்கள்...!
தயவுசெய்து உதவுங்கள்...! உதவ செய்யுங்கள்...!



தாழ்மையுடன்,

அறிவு GV.


.

Tuesday, January 19, 2010

என்று வரும் மீண்டும் ஒரு பொங்கல் தினம்...!


ற்று குளியல்
அழகாய் பிரார்த்தனை
கறிக் குழம்பு
கையில் கரும்பு
கயிற்றுக் கட்டில்
வெப்ப மரம்
வெட்டிப் பேச்சு
குட்டித் தூக்கம்
மாலையில் உரியடி
இரவில் கபடி
உடல் முழுக்க வலி
மனம் நிறைய மகிழ்ச்சி..,
என்று வரும்
மீண்டும் ஒரு பொங்கல் தினம்...!


பி. கு : மீண்டும் அலுவலகம் வந்த பிறகுதான் தெரிந்தது பொங்கல் கொண்டாட்டத்தின் சிறப்பு. இந்தவருடம் பொங்கல் கொண்டாட்டம் மிக இனிமையாக இருந்தது எனக்கு...! :)
உங்களுக்கும் அப்படியே அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்த பொங்கல் விடுமுறையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...!




சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Sunday, January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன் : திரைப்பட விமர்சனம்



ணக்கம்...! அனைவரும் பொங்கல் கொண்டாட்டங்களை இந்நேரம் முடித்துவிட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். நாளை முதல் மீண்டும் பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் என வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்புவதை எண்ணினால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. இந்தமுறைபொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன் , குட்டி, நாணயம் மற்றும் போர்க்களம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் முதல் படத்தைப்பற்றி இங்கே பார்ப்போம். முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டாலும் அன்றே பதிவு போட இயலாததால் இன்று போடுகிறேன்.

டத்தின் ட்ரைலர் வந்ததிலிருந்தே நமது B.P எகிறியிருந்தாலும், வழக்கம்போலவே இயக்குனர் செல்வராகவனின் இந்தப்படமும் கால தாமதமாகத்தான் வெளிவந்திருக்கிறது. படத்தின் முதல் பாதி சில ஆங்கிலப்படங்களில் பார்த்தைப்போலிருந்தாலும், தீபாவளி ராக்கெட்டாய் சீறிச்சென்று இரண்டாம் பாதியில் மீண்டும் கீழே இறங்கிவிடுகிறது. இதுதான் படம் பார்த்த பலரின் விமர்சனம். ஆனால் என்னைக்கேட்டால் தமிழ் சினிமாவின் இன்றைய காலகட்டத்தில் இப்படம் மிகவும் வித்தியாசமான முயற்சி என்பேன். அதற்காகவே இப்படத்தினை நான் ஆதரிக்கிறேன்.

கதைச்சுருக்கம் :

சுமார் 800 வருடங்களுக்கு முன் பாண்டியர்களிடமிருந்து அவர்களின் குலதெய்வ சிலையை அபகரித்து வருகின்றனர் சோழர்கள். அதை சோழர்குல கடைசி இளவரசனிடம் கொடுத்து பாதுகாக்கச்சொல்லி, அவரை நாடுகடத்திவிடுகின்றனர். எவ்வளவு போராடியும் பாண்டியர்களால் சோழ இளவரசனையும், அந்த சிலையையும் கண்டுபிடிக்க இயலவில்லை. இன்றைய தினம் அதைப்பற்றிய தகவல்களுடன் ஆராய்ச்சி செய்ய கிளம்பிச்சென்ற ஆண்ட்ரியாவின் தந்தை பிரதாப் பொத்தான் திரும்பி வராமல் போகவே, அவரைக் கண்டுபிடிக்க ரீமா சென் தலைமையில், ஆண்ட்ரியாவின் துணையுடன் வியட்நாம் அருகே உள்ள தீவிற்கு கிளம்புகிறது ஒரு படை. அவர்களுடன் செல்லும் உதவிக்குழுவின் தலைவன் கார்த்தி. காட்டுவாசிகள், காவல் படை, சர்ப்பம், புதைகுழி, தாகம், பசி மற்றும் கிராமம், இப்படி சோழர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏழு ஆபத்துக்களையும் தாண்டினால் சோழர்கள் வாழ்ந்த இடத்தை அடையலாம் என ஒரு குறிப்பு சொல்ல, அங்கு கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா மூவரும் எப்படி செல்கின்றனர், கிராமத்தை அடைய அவர்கள் படும் கஷ்டங்கள், அடைந்தபின் அவர்கள் அடையும் மாற்றம் இவற்றோடுவிறுவிறுப்பாக முடிகிறது படத்தின் முதல் பாதி.

ரண்டாம் பாதியில் தான் இருக்கிறது தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத ஒரு முயற்சி. இடைவேளையின்போது நீங்கள் என்னதான் கற்பனை செய்திருந்தாலும் அது செல்வராகவனின் கற்பனையை ஈடு செய்யாது. அது, அந்த சோழ பரம்பரை இன்னும் அங்கே வாழ்வதுதான். அதன் தற்போதைய மன்னனாக பார்த்திபன். அவன் ஆட்சியில் பஞ்சத்தின் உச்சத்தில் வாழும் சோழ நாட்டு பிரஜைகள். ஒரு பெண் தன் வறுமையை மன்னனுக்கு உணர்த்தும் காட்சியை என்னவென்று விவரிப்பது...! தூதுவன் எப்போது வருவான், தன் மக்களை திரும்ப சோழ நாட்டிற்கு எப்போது அழைத்துச் செல்வது என துடிக்கும் அரசனுக்கும், அவனையே நம்பியிருக்கும் மக்களுக்கும் ரீமா சென் ரூபத்தில் வருகிறது முடிவிற்கான ஆரம்பம். தான் தான் அந்த தூதுவன், இன்னும் சில தினங்களில் நாம் அனைவரும் சோழ நாட்டிற்கு திரும்ப சென்றுவிடலாம் என்று அனைவரையும் நம்பவைக்கும் ரீமா சென் உண்மையில் பாண்டிய இளவரசி. சோழ வம்சத்தை முற்றிலும் ஒழித்துவிட துடிக்கும் ரீமா, இன்னும் பிற பாண்டிய வம்சாவழியினரின் உதவியோடு சொழப்படையை தாக்க, உண்மையான தூதுவனான கார்த்தி பார்த்திபன் பக்கம் சேர்ந்து போராட, முடிவு, இந்த உலகமே அறிந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை கண்முன் காட்டுகிறது. அதைப் பற்றி இங்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நீங்களே திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். முடிவில் நம் மனதை பாரமாக்கிவிட்டு இன்னும் தொடரும் என்று முடிகிறது.

செல்வராகவன் படம் என்றாலே கிளுகிளுப்பு தான் என்றாலும் இந்த முறை அதையும் தாண்டி தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய வாசலை திறந்துவிட்டிருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். முதல் பாதி வேண்டுமானால் நீங்கள் ஏற்கனவே பார்த்தது போலிருக்கலாம். ஆனால் இரண்டாம் பாதி, முற்றிலும் நமக்கு புதியது. இயக்குனரின் உழைப்பு இங்கே தான். பலர் சொல்வதுபோல் சில லாஜிக் மீறல்கள், நீளமான காட்சிகள் இருந்தாலும் இப்படிப்பட்ட முயற்சி கட்டாயம் பாராட்டப்பட/ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. நான் எதிர்பார்த்தபடியே சில காட்சிகள் அதன் ஆழம் மற்றும் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்டுவிட்டன.

டிப்பில் பார்த்திபன் மற்றும் ரீமா சென் இருவருக்குமே நல்ல வாய்ப்பு. சிறப்பாக செய்திருக்கின்றனர். பார்த்திபன், இவரின் நடிப்பு, உணர்ச்சிகளின் வெளிப்பாடு அனைத்தும் அருமை. அதிலும் இவரின் அறிமுக காட்சி, தூள்...! ரீமா, முதல் பாதியில் அதிரடி, கவர்ச்சி, பின் பாதியில் நயவஞ்சகம் என தன் நடிப்பில் முத்திரை பதித்துவிட்டார். கார்த்தி ஆரம்பத்தில் கலக்கினாலும் இறுதியில் நெஞ்சில் நிற்பது இந்த இருவர் மட்டுமே. முன் பாதியில் கார்த்தி பல இடங்களில் சிரிக்கவைக்கிறார். ஓரிடத்தில் மட்டும் நம் அனைவரின் வயிற்றிலும் நெருப்பை அள்ளி கொட்டுகிறார். புரியும்னு நினைக்கிறேன். பின் பாதியில் இவருக்கு அதிகம் வேலை இல்லை. ஆண்ட்ரியா, சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

சையமைப்பாளர் G.V பிரகாஷ். ஆயிரத்தில் ஒருவன் ரீமிக்ஸ் பாடல், மற்ற இரண்டு பாடல்களின் காட்சியமைப்பு, பார்த்திபன் பாடும் பாடல் அனைத்தும் அருமை. பின்னணி இசையில் இரைச்சல் கொஞ்சம் ஜாஸ்தி என தோன்றுகிறது. மேலும் படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, கலை இயக்குனர் சந்தானம் மற்றும் கிராபிக்ஸ் குழு.

டம் சுமார் தான் கதை சரியில்லை, கிராபிக்ஸ் சரியில்லை, லாஜிக்கே இல்லை என்று நீங்கள் சொன்னால், அவதாரும் ஒரு மொக்கை படம் தான். கிடைத்த பணத்தில் என்ன செய்யமுடியுமோ அதைத்தான் செல்வராகவன் செய்துள்ளார். இதை ஆதரியுங்கள், விரைவில் ஹாலிவுட் தரத்தில், உலக சினிமாக்கள் நம் தமிழ் மொழியிலே உருவாகும். அதை விட்டுவிட்டு, இதையும் ஆதரிக்க மாட்டேன், மசாலா படங்களையும் ஓடவிடமாட்டேன் என்று சொல்பவர்கள் தாங்களே ஒரு நல்ல படம் எடுத்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்டாயம் என் ஆதரவு அதற்கும்இருக்கும்...!



ஆயிரத்தில் ஒருவன் : செல்வராகவன்...!
இன்னும் கொஞ்சம் கவனமாக தீட்டியிருந்தால் வைரம் நன்றாக ஜொலித்திருக்கும்.



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Wednesday, January 13, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா : பாடல் விமர்சனம்


(வலைச்சரத்தில் எனது கவிதைகளை அறிமுகப் படுத்திய நண்பர் 'இரும்புத்திரை' அரவிந்துக்கு என் நன்றி.)


நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம A.R ரஹ்மான் இசையமைத்து தமிழில் வெளிவந்திருக்கும் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கடைசியாக 2008-இல் வெளிவந்த தமிழ் படம் சக்கரகட்டி. இதில் பாடல்கள் ஹிட் என்றாலும், அனைத்தும் ரஹ்மானின் பழைய டியூன்கள். 2007-இல் சூப்பர் ஸ்டாரின் 'சிவாஜி' க்கு அடுத்து வந்த இளைய தளபதியின் 'அழகிய தமிழ் மகன்' தான் ரஹ்மான் கடைசியாக இசையமைத்த தமிழ் படம். பிறகு ஹிந்தி, ஹாலிவுட் என பிஸியாகிவிட்டார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் அவரை தமிழுக்கு கொண்டுவந்திருப்பவர் கௌதம் மேனன். இவரின் இசை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. தான் ஒரு இசைப் புயல் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் ரஹ்மான். இப்புயலில் சிக்கி மற்ற படப் பாடல்கள் காணாமல் போவதை நீங்களே அறிவீர்கள்.


ப்போது படத்தின் பாடல்களுக்கு வருவோம். எனக்கு பிடித்தபடி வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

1. அன்பில் அவன் : தேவன் ஏகாம்பரம், சின்மயி

து ஒரு ஜாலி டூயட் பாடல். வார்த்தைகள் தெளிவாக புரியும்படி இசை அமைந்துள்ளதால் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறது. இரண்டாம் முறை கேட்கும்போது நம்மை அறியாமலே நாமும் பாட ஆரம்பித்துவிடுகிறோம். சற்று கவனித்தால் கிருஸ்துவ இசை மற்றும் இந்து மங்கள இசை இரண்டும் கலந்து வருவதை உணரலாம்.

2. ஹொசன்னா : விஜய் பிரகாஷ், சுசானே, ப்ளாசீ

ரம்பமே சொல்லிவிடுகிறது இது காதல் தோல்வி/பிரிவு பாடல் என்பதை. நடுவில் வரும் ஹம்மிங் நம் மனதை என்னவோ செய்கிறது. பலரும் முனுமுனுக்கக்கூடிய பாடலாக இது அமையும். ஆங்கில ராப் கலக்கல். சோக பாட்டு இப்படியும் இருக்குமா..?

3. மன்னிப்பாயா : A.R.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல்

காதலனைத் தவிக்கவிட்டுச் செல்லும் காதலியின் பாடல். அருமையான சோக கீதம். கண்டிப்பாக இது உங்கள் பழைய நினைவுகளைக் கிளறிவிடும். ரஹ்மான் பாடியிருப்பது தனிச்சிறப்பு. இடையில் சேர்க்கப்பட்டுள்ள திருக்குறள், ரஹ்மானிடமிருந்து முழு திருக்குறளும் பாடலாக வராதா எனும் ஏக்கத்தை தருகிறது. எதிர்பார்க்கிறோம் இசைப் புயலே...!!!

4. ஓமனப் பெண்ணே : பென்னி தயாள், கல்யாணி மேனன்

காதலியின் புகழ் பாடும் பாடல். அனைத்துக் காதலனுக்கும் பிடிக்கும் என்றாலும், கேரளத்துக் கண்மணிகளை ரசிப்பவர்கள் கட்டாயம் ரசித்துப் பாடுவார்கள். (என்னை மாதிரி..., ஹி ஹி ஹி..!).

5. ஆரோமலே : அல்போன்ஸ்

ருமையான கிட்டார் இசையுடன் ஆரம்பிக்கும் இது ஒரு மலையாளப் பாடல். அர்த்தம் முழுமையாகப் புரியாவிட்டாலும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. 'ஆரோமலே' எனும் வார்த்தை பாடல் முழுக்க பின்னணியில் உச்சரிக்கப்படுவது அருமை. 'ஆரோமலே' என்றால் 'செல்லம்' என்று அர்த்தமாம். (அப்ப அது த்ரிஷா தான்...!).

6. விண்ணைத்தாண்டி வருவாயா : கார்த்திக்

காதலிக்காக ஒரு ஏக்க பாடல். கிட்டார்+பியானோ மட்டுமே பின்னணி இசை. பின்னியிருக்கிறார் இசைப் புயல். அமைதியாக வரும் இப்பாடல் படத்தில் bit / background song ஆக வரும் என யூகிக்கிறேன்.

7. கண்ணுக்குள் : நரேஷ் ஐயர்

ருதலைக் காதல் / காதல் வேண்டி பாடும் பாடல். இதுமட்டுமே கொஞ்சம் பாஸ்ட் பீட், ரஹ்மானின் வழக்கமான இசை. மற்றபடி புதிதாக ஏதும் இல்லையென்றாலும், பாடல் ஓகே.



ரு சில படங்களின் பாடல்களை கேட்கும்போதே அது எந்த இடத்தில், எந்த சூழ்நிலையில் வரும் என்பதை கூறிவிடலாம். உதாரணம் சொல்லி கலகம் விளைவிக்க விரும்பவில்லை. இப்படத்தின் பாடல்களை கேட்கும்போது கண்டிப்பாக இது 100% இளமை துள்ளும் காதல் கதை என்பதை தவிர மேலொன்றும் யூகிக்க முடியவில்லை. ஆனால் இப்பாடல்களைவைத்து நான் செய்த ஆராய்ச்சியில், 'என் செல்லம்' த்ரிஷா மலையாளப் பெண்ணாக வருகிறார் என்று கண்டுபிடித்துள்ளேன். ..! பட ஸ்டில்களில் வேறு அருமையாக இருக்கிறார். ஹ்ம்ம்..., படம் எப்போ வருமோ..?!

  • காதுகளை பதம் பார்க்காமல், இதம் சேர்க்கும் இசைக்காக ரஹ்மானுக்கு பெருசாய் ஜே...!
  • A.R ரஹ்மானிடமிருந்து இப்படிப்பட்ட பாடல்களை வாங்கியதற்காக கெளதம் மேனனுக்கு ஒரு ஜே..!

----------------------------------------------------
டிஸ்கி 1 : மேலும் ராவணா, சுல்தான், இந்திரன் என பல படங்கள் ரஹ்மான் இசையில் இந்த வருடமே வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

டிஸ்கி 2 : பொங்கல் கழித்து மீண்டும் சந்திப்போம். அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!
----------------------------------------------------



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Saturday, January 9, 2010

2010 -இன் புது மாதிரியான நாள்காட்டி

எல்லோருக்கும் வணக்கம். நிறைய மேட்டர் இருந்தும் என்னால ஏரியா பக்கம் கொஞ்ச நாளா வரமுடியல. சில பல ஆணிகள் திடீர்னு நம்ம கையில சிக்கிட்டதால 2010 ஆரம்பமே அதிரடியா ஆரம்பிச்சுருச்சு. இருந்தாலும் இனிமே தொடர்ந்து எழுத முயற்சி செய்றேன். ஆனா, என்னதான் 2010 கொஞ்சம் சந்தோஷமான விஷயங்களோட ஆரம்பிச்சிருந்தாலும், 2009 கொஞ்சம் திகிலோட தாங்க முடிஞ்சுது. அதைப்பத்தி கூடிய சீக்கிரம் சொல்றேன்.


இப்போ, கீழே இருக்கும் படத்தை கிளிக் பண்ணி பெருசா பாருங்க. அது 2010 -இன் புது மாதிரியான நாள்காட்டி.




  • 12 மாதங்களும் 12 விதமான வர்ணங்களில்.
  • திங்கள், செவ்வாய், புதன் என ஒவ்வொரு வட்டமும் ஒவ்வொரு நாள்.
  • கடைசி வெளி வட்டத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரம், மொத்தம் 53.

எனக்கு மெயிலில் வந்த இந்நாள்காட்டியை உருவாக்கியவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் அருமையான கற்பனை மற்றும் வடிவமைப்பு. பாராட்டப்பட வேண்டிய செயல். எப்படியெல்லாம் யோசிக்குறாங்க...! இவங்களுக்கு மட்டும் எப்டிதான் தோணுதோ..?!

அதை விடுங்க, நானும் "செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்காக ஒரு சிறுகதை எழுதலாம்னு ரொம்ப நாளா மண்டைய கொடஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒண்ணுமே சிக்க மாட்டீங்குது. 'சொக்கா, எனக்கில்ல.., எனக்கில்ல.., 1500-ம் போச்சே..!' அப்டின்னு 'திருவிளையாடல்' பட நாகேஷ் மாதிரி பொலம்பிகிட்டு இருக்கேன். அவருக்கு சிவபெருமான் உதவின மாதிரி, எனக்கு யாராவது கதை எழுதி கொடுத்தீங்கன்னா ரொம்ப புண்ணியமா போவும். அப்படியே கொண்டுபோய் கொடுத்துட்டு, கிடைக்குற பணத்துல ஹமாரா 50, துமாரா 50. என்ன டீல் ஓகேவா..? சீக்கிரம் சட்டு புட்டுன்னு யோசிச்சு ஆளுக்கொரு கதைய அனுப்பிவைங்க. I'm waiting...!




சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Friday, January 1, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



மலர்ந்துவிட்ட ரோஜா மொட்டாய் 2010
புதுப் புது இதழ்களால் உள்ளம் கவர்ந்து
உதிரும்வரை தங்கள் வாழ்வில் மணம்வீச
மழைத்துளியாய் தூவுகிறேன் என் வாழ்த்துக்களை...!



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..!



மகிழ்வுடன்,

அறிவு GV.


Related Posts with Thumbnails