Tuesday, December 14, 2010

தோழிக்காக..!

ன் நட்பெனும் வானத்தில்
நட்சத்திரங்கள் பல..,
ஆனால் நிலா ஒன்றுதான் - அது
நீ மட்டும் தான்..!
வளர்ந்தாலும் தேய்ந்தாலும் - அது
என் வானத்தில் தான்..!

************************

ன்னுயிர் தோழியே,
என் இறப்பு என்பது
உனக்கு இழப்பு - ஆனால்
உன் இழப்பு என்பதே
எனக்கு இறப்பு..!

************************

தோற்பது என்
தோழியிடம் தான் என்றால்
நான் எவ்வளவு வேண்டுமானாலும்
தோற்கத் தயார் - அந்த
தோல்வியில் வென்றுவிடுவது
என் நட்பு என்பதால்..!

************************

ண்களில் துயருடன் தோழி நிற்க,
துடைக்க வழியின்றி - நான்
திரும்பி நிற்க,
எனை உணர்ந்தவளாய்
கண்களை மறைத்தபடி - அவள்
கண்ணீரைத் துடைக்கிறாள்
ஆனால்
கண்களை மறைக்கத் தெரிந்த அவளுக்கு
தன் காதலை மறைக்க தெரியவில்லையே....!

************************

கையிரண்டில்
ஐயிரண்டு
விரல் கொண்டிருந்தும்,
கைகட்டி நின்றிருந்தேன் - தோழியின்
கண்ணீர் துடைக்க வழியின்றி..!


************************



ண்ணீர்..,
தோழியின் கண்ணீருக்கு
என்னால் தரமுடிந்த
ஒரே ஆறுதல்..!

************************

Related Posts with Thumbnails