இந்த, சில்லறை வாருறது சில்லறை வாருறதுன்னு ஒன்னு நீங்கல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்க தானே. வெறும் கேள்வி ஞானமாகவே இருந்த எனக்கு அதோட அனுபவ அறிவு போன சனிக்கிழமை கெடச்சிடுச்சுங்க. அதுவும் அதிகாலை 2 மணிக்கு. இந்த வாய்ப்ப எனக்கு வழங்கின தரமணி ரோட்டுக்கும், அரசுக்கும் ரொம்ம்ம்...ப நன்றி.
நான் இருக்கிறது வேளச்செரிலங்க. வெள்ளிக்கிழமை ராத்திரியே என் நண்பன் போன் பண்ணி மச்சான் நைட்டு ஊருக்கு வர்றேன், திருவான்மியூர்ல வந்து பிக் அப் பண்ணிக்குடான்னு சொன்னாங்க. சரிடான்னு சொல்லிட்டு நானும் தூங்கிட்டேன். காலைல வருவான்னு பாத்தா அவன் நைட்டு 1.45 கே உடுக்கை அடிச்சிட்டான். சரின்னு எழுந்திரிச்சு கிளம்பி போனேங்க. போகும்போதே ஒரு லாரிக்காரன் ஹெல்மட் இல்லாமையே இவ்ளோ தைரியமா என் பின்னாடி வர்றியான்னு வயிறெரிஞ்சு ரோட்டுல இருக்குற மண்ணையெல்லாம் வாரி என் மூஞ்சில இறைச்சுகிட்டே முன்னாடி போனான். ஹ்ம், ஹெல்மட்டோட அருமை அப்போ தெரிஞ்சுது. என்னதான் நான் Apache'ல போனாலும் எனக்கு ஊட்டில குதிரை சவாரி பண்ற மாதிரியே இருந்திச்சு. எல்லாம் இந்த ரோட்டோட மகிமை தான்னு உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒருவழியா நண்பனைக் கூட்டிக்கிட்டு திரும்ப குதிரை சவாரியை கண்ட்டினியு பண்ணினேன்.
நமக்கு பகல்லயே பசுமாடு தெரியாது, இருட்டுல எரும மாடு தெரியவா போகுதுன்னு பொறுமையா தான் ஓட்டிகிட்டு வந்தேன். வர்ற வெள்ளிக்கிழமை அவனுக்கு கல்யாணம், அதைப்பத்தி பேசிக்கிட்டு வந்தேன். என் பைக், நான் தினமும் யூஸ் பண்ணுற இந்த ரோடு ரெண்டுபேர்மேலையும் எனக்கு கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. ஆனா இவங்க ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சனையோ கடைசில என்ன கவுத்துட்டாங்க. சின்ன பள்ளம்னு நெனச்சு வண்டிய இறக்குனா அது யானையே முழுங்கிடும்போல. அப்பறம் என்ன, குட்டிக்கரனமெல்லாம் அடிக்காம அப்படியே கீழ விழுந்தோம். ஹையா, ரொம்ப அடி படலையேன்னு எழுந்து தலைய தூக்கி பாத்தா ஒரு லாரி பிரேக் அடிச்சு நின்னுது. அப்படியே அப்பீட்டு..! தப்பிச்சோம்டா சாமின்னு அப்டியே வண்டிய எடுத்துக்கிட்டு கொஞ்ச தூரம் வந்த பிறகுதான் அந்த லாரிய திரும்பி பாத்தேன். என்னென்ன திட்டினானோ..? வண்டிய ஓரமா நிறுத்திட்டு ரெண்டுபேரும் மீசைல மண்ணு ஒட்டிருக்கான்னு பாத்தோம், நல்லவேளை வண்டியோட பம்பர்ல தான் ஒட்டியிருந்துது. ரைட் பூட் ரெஸ்ட காணோம். இதோட தப்பிச்சொமேன்னு சிரிச்சுகிட்டே வீடு வந்து சேர்ந்தோம்.
கொஞ்ச நாளாவே இந்த ரோட்டை பத்தி எழுதனும்னு நெனச்சிகிட்டிருந்தேன். ஆனா இப்டி எழுதுவேன்னு நெனைக்கவே இல்லை. கீழ விழுந்திருந்தாலும் இதுவரை இப்படி சில்லறை வாரியதில்லை(கலக்சன் கம்மிதான்). பரவாயில்லை, பெரிய அடி ஏதும் இல்லாம தப்பிச்சொமே..! மத்தவங்களையும் காப்பாத்திடுப்பா ஆண்டவா..!
டிஸ்கி :
நண்பனுக்கு அடி பட்டிருச்சேன்னு அன்னைக்கு கொஞ்சம் பீலிங்க்ஸ் ஆய்டுச்சுங்க, கொஞ்ச நாள்ல கல்யாண மாப்ளை வேற. சாரிடா மச்சான்..!

2 comments:
என்னங்க இது சீரியசான மேட்டர இப்பிடி சிரிப்பு மேட்டர் மாதிரி சொல்றீங்க.
உங்கள பாத்துதான் பாய்ஸ் படத்துல இந்த லைன் வருமோ...!
// தமன் : மச்சான் ட்ரீட் குட்றா.
சித்தார்த் : எதுக்குடா?
தமன் : விழுந்து வாருனதுக்கு. :) //
உங்க பிரெண்ட் க்கு எவ்ளோ கலெக்சன் ஆச்சு பாஸ். !!! :)
டோட்டல் கலக்க்ஷனே கம்மிதான்னாலும், என்னைவிட அவன் கலக்க்ஷன் ஜாஸ்த்தி தாங்க. ட்ரீட் கேட்டிருக்கேன், கெடச்சா உங்களையும் கூப்பிடுறேன். :) வருகைக்கு நன்றி ஸ்டான்லி. அடிக்கடி வாங்க.
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!