Wednesday, December 30, 2009

(காதல் + காமம்) சில நொடிகள் மட்டும்



மூடித் திறந்த என் தனிமை அறைக்குள்
பெண்ணுருவில் நுழைந்தது ஒரு தென்றல்..!

தறவைக்கும் அழகு இல்லையென்றாலும்,
பார்க்கவைக்கும் அழகு..!

மேலிருந்து கீழ், கீழிருந்து மேல்,
இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என
அவள் மீது
குறுக்கெழுத்துப் போட்டியை நடத்தின என் கண்கள்..!

ன் தனிமைகளை இனிமையாக்க
இவள் தான்
ஆண்டவன் படைத்த படைப்போ..,

னும் என் எண்ணத்தை
முகம் நோக்கி உணர்ந்தவளாய்
என் அருகே நகர்ந்தவள்..,

ன் கரம் பிடித்திழுத்து,
இறுக்கி கட்டியணைத்தாள்..!
கண்கள் மூடியபடி நான்
மேலே பறக்க ஆரம்பித்தேன்..!

குறுக்கெழுத்துப் போட்டி கட்டங்களில் பதிலாய்
என் முகத்தில் முத்தங்களை நிரப்பினாள்..!

திடீரென்று ஒரு சத்தம்
எனை யாரோ உலுக்கியது போலிருக்க
கண்களை திறந்தேன் - அவள் என்
எதிரிலே தான் நின்றுகொண்டிருந்தாள்..!

த்தனையும் கனவா என்று
என்னிலை அறிகையில்,
மீண்டும் தயாரானவள் - திறந்துவிட்டிருந்த
மின்தூக்கிக் கதவுகள் வழியே வெளியேறிவிட்டாள்..!

காதலோ,
காமமோ,
என்ன கருமமோ,
அத்தனையும் கற்பனையே
என்றுணர்த்தியவள் சட்டென்று மறைந்துபோக,

மூடப்பட்ட கதவுகளுடன்
மீண்டும் தொடர்கிறேன்
என் தனிமைப் பயணத்தை..!




சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

6 comments:

Unknown said...

கலக்குறிங்க தல...

அறிவு GV said...

நன்றி பேநா மூடி.

கமலேஷ் said...

மேலிருந்து கீழ், கீழிருந்து மேல்,
இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என
அவள் மீது
குறுக்கெழுத்துப் போட்டியை நடத்தின என் கண்கள்..!

மிகவும் அழகாக இருக்கிறது...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

//மேலிருந்து கீழ், கீழிருந்து மேல்,
இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என
அவள் மீது
குறுக்கெழுத்துப் போட்டியை நடத்தின என் கண்கள்..!
//

இந்தவரிகள் இனி அவ்வப்பொழுது ஞாபகம் வரும்...

நல்லா சிந்திச்சிருக்கீங்க அறிவு....!

சுகுணாதிவாகர் said...

படிக்கும் போதெ எனக்கு வந்துவிட்டது, நான் அந்த பெண்ணாக பிறந்திருக்ககூடாதா என ஏக்கமாக உள்ளது.
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நல்ல ரசனை உங்களுக்கு.வாழ்த்துக்கள்

அறிவு GV said...

நன்றி கமலேஷ், வசந்த் மற்றும் திவாகர். :-)

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails