Thursday, December 3, 2009
சில கவிதை(கிறுக்கல்)கள் -1
-------------------------------
முதல் முறையாக
வெற்றியின் சுவை
கசப்பு..,
எதிரணியில் என்னவள்..!
-------------------------------
கட்டம் கட்டமாய்
ஜன்னல்கள் - அதில்
வட்ட வட்டமாய்
முகங்கள்..,
நவீன பாடசாலை..!
------------------------------
கோடிட்ட இடங்களை
நிரப்பும் மாணவன் போல
அவள் பார்வை படும் இடங்களை
நிரப்ப துடிக்கிறது
என் காதல்..!
--------------------------------
தன் முகம் காண
பிடிக்காமல் தான்
இறைவன்
ஏழைகளை சிரிக்க விடுவதே இல்லை..!
-----------------------------------
நான்கு சுவர்களுக்கு நடுவில்
நாங்கள் கொடுத்துக்கொண்ட முத்தத்திற்கு
நாங்களே சாட்சி இல்லை,
மூடியிருந்தன கண்கள்..!
----------------------------------
நனைவதற்கென்றே பிறந்த குடைகள்
நனையாமல் கடைக்குள்ளே,
நனைந்தபடி வெளியே நான்..!
----------------------------------
Labels:
கவிதை,
கிறுக்கல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//நனைவதற்கென்றே பிறந்த குடைகள்
நனையாமல் கடைக்குள்ளே,
நனைந்தபடி வெளியே நான்..!
//
இது ரொம்ப நல்ல இருக்கு...
நன்றி பேநா மூடி.
நல்ல ஹைகூ கவிதைகள்.
நன்றி தமிழ் உதயம். அடிக்கடி வாங்க.
/ தன் முகம் காண
பிடிக்காமல் தான்
இறைவன்
ஏழைகளை சிரிக்க விடுவதே இல்லை..! //
சிந்திக்க வைத்த கற்பனை.
காலையில் எழுந்தவுடன் படித்த முதல் கவிதைகள்.
முழு மண நிறைவுடன் இனறய நாளை தொடங்குகிறேன்.
நன்றி
முதல் முறையாக
வெற்றியின் சுவை
கசப்பு..,
எதிரணியில் என்னவள்..!
நான்கு சுவர்களுக்கு நடுவில்
நாங்கள் கொடுத்துக்கொண்ட முத்தத்திற்கு
நாங்களே சாட்சி இல்லை,
மூடியிருந்தன கண்கள்..!
ரொம்ப நல்லா இருக்கு...
@ பழனி : நெசமாத்தான் சொல்றீங்களா? ரொம்ப நன்றி பழனி. நாள் எப்படி இருந்திச்சு?
@ கமலேஷ் : நன்றி கமலேஷ். மீண்டும் வாங்க.
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!