Wednesday, December 9, 2009

சில கவிதை(கிறுக்கல்)கள் - 2














ன்னுடைய வேண்டுதல்கள் அனைத்தும்
உனக்கானதாகவே இருக்க,
கடவுள் என் எதிரில் தோன்றி
எனக்காக ஏதாவது கேட்க சொன்னார்.
நான் உன்னைக்காட்டியதும்,
பதிலேதும் கூறாமல் மறைந்துவிட்டார்..!

--------------------------------------------














விதையென கிறுக்கி
பின் கசக்கி எறிந்த காகிதங்களிலேல்லாம்
தெளிவாய் தெரிந்தது
அவள்மேல் கொண்ட காதல்..!

--------------------------------------------














ஹைக்கூ,
மரபு,
பின்நவீனம்,
என்று
ஏதேதோ சொல்கிறார்கள்
கவிதைகளில் - ஆனால்
எனக்கு தெரிந்ததெல்லாம்
உன் பெயர் மட்டும்தான்..!

--------------------------------------------














தையாவது எழுத
விரல் துடிக்க,
எல்லாமும் நீயாய்
என் மதி மறைக்க,
உன்னைப்பற்றி மட்டுமே எழுதிவிட்டு
அதைக்
கவிதையென சொல்லித்திரிகிறேன்..!

--------------------------------------------














ண்களை மூடி
இதழ்களைத் திறந்தாள்
அவள் - காதல்..!
இதழ்களை மூடி
கண்களைத் திறந்தேன்
நான் - காமம்..!

--------------------------------------------
















னக்கும் எனக்குமான உறவை
நான் இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
வார்த்தைகளில்..!

--------------------------------------------

3 comments:

கலையரசன் said...

//கண்களை மூடி
இதழ்களைத் திறந்தாள்
அவள் - காதல்..!
இதழ்களை மூடி
கண்களைத் திறந்தேன்
நான் - காமம்..!//

எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!

தமிழ் உதயம் said...

இப்ப என்ன கவிதை வாரமா. யார் பதிவுக்கு போனாலும் ஒரே கவிதையா இருக்கு. ஆனா எல்லாம் நல்லா இருக்கு

அறிவு GV said...

@ கலையரசன் : காதல் மட்டுமா..? ;) வருகைக்கு நன்றி கலையரசன்.
@ தமிழுதயம் : எல்லாம் உரையாடல் போட்டி படுத்தும் பாடு. நன்றி தமிழ்.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails