கீழே உள்ள படம் எடுக்கப்பட்ட இடம் சென்னை அண்ணா சாலையில் ஹெல்மெட் கடைகள் நிறைந்த ஒரு கட்டிடம்.
குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் :
இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளது. இந்த கட்டிடம் அருகில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம். கட்டிடம் இடிந்து வாகனங்கள் பழுதடைந்தாலும், நிற்பவர்களுக்கு அடிபட்டாலும் நிர்வாகம் பொறுப்பல்ல. (படத்தை கிளிக் செய்து பார்க்கவும்)
இதுபோன்ற சமூக அக்கறை உள்ள நிர்வாகங்களை நாம் பார்ப்பது மிக அரிது. நமக்கென்ன என்று போகும் மனிதர்கள் நிறைந்த இச்சமுதாயத்தில் பிறரின் நலன் மட்டுமின்றி அவர்களின் வாகனங்களின் நலனுக்கும் சேர்த்து அறிவுப்புப் பலகை வைத்துள்ளனர். இவர்களின் சேவை பாராட்டத்தக்கது.
இதுபோன்ற சமூக அக்கறை உள்ள நிர்வாகங்களை நாம் பார்ப்பது மிக அரிது. நமக்கென்ன என்று போகும் மனிதர்கள் நிறைந்த இச்சமுதாயத்தில் பிறரின் நலன் மட்டுமின்றி அவர்களின் வாகனங்களின் நலனுக்கும் சேர்த்து அறிவுப்புப் பலகை வைத்துள்ளனர். இவர்களின் சேவை பாராட்டத்தக்கது.
ஆனால் என்னுடைய கேள்விகள் இவைதான் :
- இவர்களின் சமூக அக்கறை அதே கட்டிடத்தில் இன்றுவரை இயல்பாக இயங்கிவரும் 3-4 கடைகளின் நலனையும், அதனுள் இருப்பவர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்களின் நலனையும் கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டது ஏனோ..?
- ஒருவேளை இவையனைத்தும் ஹெல்மெட் கடைகள், அதனால் ஆபத்தின்போது ஹெல்மெட் அணிந்துகொண்டால் உயிர்சேதம் வராது என்று சிந்தித்திருப்பார்களோ?
- அல்லது இவர்களுக்கு அடிபட்டாலோ, இவர்களின் வாகனங்கள் செதமடைந்தாலோ, அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்டு 'ஏதாவது' செய்யுமா?
- அல்லது ' No Parking ' ஆக பார்த்து வண்டியை நிறுத்தும் நம்போன்றவர்களை பயமுறுத்தவா?
எது எப்படியோ, யாருக்கும் எந்த ஆபத்தும் நேராமல் இருந்தால் போதும். கவனிக்குமா அந்த நிர்வாகம்..?
டிஸ்கி :
இதுதான் தன்னலம் கருதாது பொதுநலம் பேணுவதோ?
.
2 comments:
நல்ல பதிவு... ரொம்ப சிந்திச்ருகீங்க..,
நன்றி பேநா மூடி.
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!