படத்தோட ஹீரோ ரொம்ப சாது. அப்பா அம்மா இல்லாம மாமா, பாட்டிகூட தங்கியிருக்கார். ஒரே ஒரு நண்பர். கொஞ்சம் வெகுளி, நம்மள மாதிரியே. அதனால வழக்கம் போல எல்லோராலும் கலாய்க்கப்படுகிறார். ஸ்கூல் பஸ்ஸ கூட ஒழுங்க பிடிக்கத் தெரியல. ஆனா அவரோட பக்கத்துவீட்டு கம் கிளாஸ் மேட்டான ஹீரோயின ஒரு தலையா லவ் பண்றார். ஒருமுறை எல்லாரும் ஒரு ஆராய்ச்சிக்கூடத்துக்கு போறாங்க. அங்க எல்லோரும் விலங்குகளை கவனிக்க இவர் மட்டும் ஹீரோயினையே கவனிக்கிறார். இவர் இப்படி பராக்கு பாக்கும்போது ஒரு பூச்சி இவரை கடிச்சிடுது. அப்படியே வீட்டுக்கு வந்து தூங்கிடுறார். மறுநாள் எழுந்தா அவர் உடல்நிலைல பல மாற்றங்கள். ஹீரோயினோட பாய்பிரெண்ட அடிக்கிறார், ஒரு பாட்டியை விபத்துல இருந்து காப்பாத்துறார்(??!), செவுத்துல நடக்கிறார், டான்ஸ் ஆடுறார். அவருக்குள்ளே எதோ ஒரு சக்தி வந்திடுது. ஒரு சூப்பர் ஹீரோ உருவாயிட்டார். கெட்டவங்களை அடிச்சி துவம்சம் பண்றார். ஆனால் அதே வெளியே காண்பிக்காமல் அவருடைய புகைப்படங்களை பத்திரிக்கைக்கு அனுப்பி அதன் மூலம் சம்பாதிக்கிறார். ஹீரோ வந்துட்டார், அப்ப ஒரு வில்லன் கண்டிப்பா உருவாகனுமே. அது யார்னு பாத்தா ஹீரோயினோட பாய்பிரண்டின் மாமா. அவரோட ஆராய்ச்சிய மத்தவங்க மதிக்காததால் தன் மேலேயே அதை பரிசோதனை செய்துகொள்ள அவருக்கு ஒருவிதமான சக்தி வருது. அதை அவர் தவறான வழியில் பயன்படுத்த, சின்ன சின்ன தவறுகளையே தட்டிக்கேட்கும் நம்ம ஹீரோ இவர் கூட மொதுறார். பல திருப்பங்களுக்குப் பிறகு தீய சக்தியை அழித்து அமைதியை நிலைநாட்டி ஹீரோயினையும் அடைகிறார் நாம்ம ஹீரோ.
இது spiderman கதை என்று நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இப்படம் spiderman-ன் நூறு சதவிகித உல்ட்டா. அதாவது அதோட 'லொள்ளு சபா' வெர்ஷன். ஆனா ஹீரோ பெயர் Dragonfly. 2008 இல் வெளியாகி 71 மில்லியன் டாலர்களை அள்ளிய இத்திரைப்படத்தின் டைரக்டர் Craig Mazin. ஹீரோ Drake Bell, ஹீரோயின் Sara Paxton. வில்லன் Christopher McDonald. Leslie Nielsen ஹீரோவின் மாமாவாக வருகிறார்.
முழுக்க முழுக்க spiderman படத்தைக் கலாய்த்திருந்தாலும் அதற்கு ஊறுகாய் போல Batman Begins, X-Men, Fantastic Four என்று அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் வம்புக்கு இழுத்திருக்கின்றனர். லேப் காட்சி, ஹீரோவின் பெற்றோர் இறப்பது, மாமா சுடப்படுவது, மற்ற ஹீரோக்களை சந்திப்பது, தன் காதலை சொல்லும் காட்சி, தோல்வியில் தாடி 'வைப்பது', வில்லனிடம் மாட்டுவது, கிளைமாக்ஸ் சண்டை என்று ஒரு சீன் விடாமல் ரௌண்டுகட்டி காமெடி பண்ணியிருக்கிறார்கள். நீங்கள் எந்த மூடில் படம் பார்க்க உற்கார்ந்தாலும் சரி, இப்படம் உங்களை கண்டிப்பாக வயிறு வலிக்க சிரிக்கவைக்கும், அதற்கு நான் கேரண்டி.
Superhero Movie : No logic but comedy magic.

IMDB Rating : 4.3/10 ( தான் :-( )
Snatch (2000) - விரைவில்
.
6 comments:
தல... இந்தப் படத்துக்கு சிரிச்சீங்களா?????
ஆனாலும் உங்களுக்கு வெள்ளை மனசு போங்க! :) :)
தல...
தமிழிஷில் இணைக்கும் போது... செய்திகள்->சினிமாவில் இணைக்கவும்.
அதே மாதிரி.. தமிழ் வார்த்தையையும் இணைக்கவும் (Superhero - சினிமா விமர்சனம்). இல்லைன்னா தெரியாது.
இந்த படம் பாக்கும்போது லொள்ளு சபா பெட்டெர் அப்டின்னு தான் தோனுச்சு..
@ பாலா : என்னவோ தல, எனக்கு புடிச்சிருந்தது. அதான் மத்தவங்களும் சிரிக்கட்டுமேன்னு. :))
///செய்திகள்->சினிமாவில் இணைக்கவும்.///
இனிமே செஞ்சுடுறேன்.
///Superhero - சினிமா விமர்சனம்///
பப்ளிஷ் பண்ண பிறகுதான் தோணிச்சு. ஒன்ஸ் பப்ளிஷ் பண்ணிட்டா மாத்த முடியாதில்ல..?
@ பேநா மூடி : ஆமாங்க பேனா. நன்றி.
செம்ம காமெடி படம் :) பாஸு
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!