Tuesday, December 14, 2010

தோழிக்காக..!

ன் நட்பெனும் வானத்தில்
நட்சத்திரங்கள் பல..,
ஆனால் நிலா ஒன்றுதான் - அது
நீ மட்டும் தான்..!
வளர்ந்தாலும் தேய்ந்தாலும் - அது
என் வானத்தில் தான்..!

************************

ன்னுயிர் தோழியே,
என் இறப்பு என்பது
உனக்கு இழப்பு - ஆனால்
உன் இழப்பு என்பதே
எனக்கு இறப்பு..!

************************

தோற்பது என்
தோழியிடம் தான் என்றால்
நான் எவ்வளவு வேண்டுமானாலும்
தோற்கத் தயார் - அந்த
தோல்வியில் வென்றுவிடுவது
என் நட்பு என்பதால்..!

************************

ண்களில் துயருடன் தோழி நிற்க,
துடைக்க வழியின்றி - நான்
திரும்பி நிற்க,
எனை உணர்ந்தவளாய்
கண்களை மறைத்தபடி - அவள்
கண்ணீரைத் துடைக்கிறாள்
ஆனால்
கண்களை மறைக்கத் தெரிந்த அவளுக்கு
தன் காதலை மறைக்க தெரியவில்லையே....!

************************

கையிரண்டில்
ஐயிரண்டு
விரல் கொண்டிருந்தும்,
கைகட்டி நின்றிருந்தேன் - தோழியின்
கண்ணீர் துடைக்க வழியின்றி..!


************************ண்ணீர்..,
தோழியின் கண்ணீருக்கு
என்னால் தரமுடிந்த
ஒரே ஆறுதல்..!

************************

Monday, November 15, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 6

கண்களை மூடியதேன்னவோ நீ!
ஆனால்
இருண்டதடி என் உலகம் ..!

************************

காலனுக்கும்
மரணம் வரும்..,
காதலில் விழுந்தால்..!

************************

பலமுறை பிரிந்திருந்தாலும்
புதிதாய் வலிக்கிறதடி எனக்கு
ஒவ்வொரு முறையும்..!

************************

ஆமை நுழைந்த இல்லமாய்
ஆகிவிட்டது என் உள்ளம்
அவள் நுழைந்த பிறகு..!

************************

நாமே மறந்துவிட்ட
நம் காதலை
பாவம் - அந்த கள்ளி
இன்றும் சுமந்துகொண்டிருக்கிறது..!

************************

Saturday, October 2, 2010

விடுதலைபுசித்துவிட்ட மேகமதன்
ஊண்கிழித்து வெளிவருமாம்
நிலவுதனைப் போல..,
என்னுயிர் குலைத்தவள்
மோகமதன்
வேரறுத்து வெளிவரும்
எம்மனததன் மகிழ்வந்த
முழுநிலவினை ஒத்திருக்கும்...!

------------------------------------------
-

Monday, August 9, 2010

நிலாக்காலம் :


நெருங்கி வராததால் தான்
இன்னமும்
அழகாய் தெரிகிறார்கள்
நிலவும், அவளும்...!

********************************நிலவை அடைவேன் என்றெண்ணி
நான் செய்த முயற்சிகளனைத்தும்
என் வீட்டு
மொட்டை மாடியிலேயே
முடிந்துவிட்டன...!

********************************நீ தந்த முத்தங்களை
எண்ண மறந்ததால்
இப்போது எண்ணிக்கொண்டிருக்கிறேன்
வானில் நட்சத்திரங்களை,
தனிமையில் அமர்ந்து...!

********************************பிடிக்க முடியாத நிலவைக் காட்டி
பிடித்துத் தருவேன் எனச்சொல்லி,
குழந்தைக்கு சோறூட்டும்
அன்னையைப் போல,
உன்னைக்காட்டி என் மனதிற்கு
கவிதைகளை ஊட்டுகிறேன் நான்...!

********************************


Saturday, August 7, 2010

இதோ வந்துட்ட்ட்ட்...டேன்...!


லையுலக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள்...! கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது நான் இந்த பக்கம் வந்து. சில பல மன கசப்புகளால் வலைப்பக்கத்தில் எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டதே அதன் காரணம். எழுதுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் எழுதாமல் தவிர்த்துவிட்டேன். இந்த மூன்று மாதங்களில் ஏகப்பட்ட அனுபவங்கள், பயணங்கள், திரைப்படங்கள், மொக்கைகள், இப்படி பல 'கள்'கள் நிகழ்ந்துவிட்டன.

துவரைக்கும் எழுதி கிழிச்சது ஒன்னும் இல்ல, இதுக்கு மேலயும் ஏதும் கிழிக்கப் போறதில்லை. இருந்தாலும், நானும் 'ரௌடி' தான்யானு சொல்லி வான்ட்டடா வண்டில ஏறிட்டு இப்டி திடீர்னு 'U' அடிச்சுட்டனேனு நெனைக்கும்போது கொஞ்சம் பீலிங்கா இருக்கு. அதுமட்டுமில்லாம நான் திரும்ப எழுதுற வரைக்கும் எதுவும் சாப்பிட மாட்டோம்னு சொல்லி ஊர்ல பலபேர் உண்ணாவிரதம், போராட்டம்னு ஆரம்பிச்சுட்டாங்களாம். நேத்து கூட அமெரிக்கால ஒருத்தர் தீக்குளிக்க முயற்சி பண்ணினதா கேள்விப்பட்டேன். என்னாலதான் தீவிரவாதம் பரவுறதா அமெரிக்க உளவுத்துறை எனக்கு போன் போட்டு கெஞ்சுறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு. என் எழுத்து மேல மக்கள் எவ்ளோ பாசம் வெச்சிருந்தா இப்படியெல்லாம் பண்ணுவாங்க..? இவங்களுக்கு நான் என்ன செய்ய போறேன்..? நாலு பேர்க்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதனால, நல்லா யோசிச்சு இந்த முடிவுக்கு வந்துட்டேன். என்ன முடிவா..? அதாங்க, நான் திரும்பவும் என் எழுத்துப் பணியை தொடரப்போகிறேன். இனியும் என்னால மக்கள் கஷ்டப்படறத வேடிக்கை பார்த்துகிட்டு சும்மா இருக்கமுடியாது.

"நீ இதுவரைக்கும் எழுதி கிழிச்சதே போதும், அப்டியே ஓடிடு"ங்குற உங்க மைன்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன். பட், ஒரு இந்திய குடிமகனா, தீவிரவாதத்தை ஒழிக்குற பொறுப்பு எனக்கும் இருக்கு. ஸோ, என்ன யாரும் தடுக்காதீங்க..!து என்னோட 50 வது பதிவு. கொஞ்சம் டெஸ்ட் மாட்ச் மாதிரி ஆய்டுச்சு. இனிமே ஒன் டே ஆட முயற்சி பண்றேன். மீண்டும் சந்திப்போம்...!


- அறிவு GV.


Related Posts with Thumbnails