Tuesday, November 24, 2009

எங்கள் தளபதியும் - உங்கள் ஆசையும்

"Dr.விஜய் கெட்டப்ப மாத்தி நடிச்சதே கிடையாது, புதுசா எதுமே ட்ரை பண்ண மாட்டாரு, அவரெல்லாம் ஒரு நடிகரா?" அப்டின்னு நேத்து பொறந்த குழந்தைல இருந்து நாளைக்கு சாகப்போற(படம் பாத்தான்னு கேக்காதீங்க..!) பெருசுங்க வரைக்கும் எங்க தளபதிய பத்தி அவதூறு பேசுனீங்களே, அப்படியே கொஞ்சம் scroll down பண்ணி பாருங்க.


"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"இப்ப தெரியுதா..! உங்களையெல்லாம் கொடுமைப்படுத்த வேண்டாம்னு தான் இவ்ளோ நாளா ஒழுங்கா இருந்தார். இப்ப உங்க தொல்ல தாங்காம, 'கெட்டப்ப' மாத்தியிருக்கார். இதையும் பாத்துட்டு தளபதிய கலாய்ச்சீங்கன்னா வீட்டு வாசல்ல ஆட்டோ நிக்கும் (தியேட்டருக்கு கூட்டிட்டுப்போக..!).

டிஸ்கி :

"தன்வினை தன்னைச் சுடும்னு" பெரியவங்க அன்னைக்கே சொல்லியிருக்காங்க. ஆசைப்பட்டீங்கல்ல..., அனுபவிங்க..!


Monday, November 23, 2009

நான் வாரிய சில்லறைஇந்த, சில்லறை வாருறது சில்லறை வாருறதுன்னு ஒன்னு நீங்கல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்க தானே. வெறும் கேள்வி ஞானமாகவே இருந்த எனக்கு அதோட அனுபவ அறிவு போன சனிக்கிழமை கெடச்சிடுச்சுங்க. அதுவும் அதிகாலை 2 மணிக்கு. இந்த வாய்ப்ப எனக்கு வழங்கின தரமணி ரோட்டுக்கும், அரசுக்கும் ரொம்ம்ம்...ப நன்றி.

நான் இருக்கிறது வேளச்செரிலங்க. வெள்ளிக்கிழமை ராத்திரியே என் நண்பன் போன் பண்ணி மச்சான் நைட்டு ஊருக்கு வர்றேன், திருவான்மியூர்ல வந்து பிக் அப் பண்ணிக்குடான்னு சொன்னாங்க. சரிடான்னு சொல்லிட்டு நானும் தூங்கிட்டேன். காலைல வருவான்னு பாத்தா அவன் நைட்டு 1.45 கே உடுக்கை அடிச்சிட்டான். சரின்னு எழுந்திரிச்சு கிளம்பி போனேங்க. போகும்போதே ஒரு லாரிக்காரன் ஹெல்மட் இல்லாமையே இவ்ளோ தைரியமா என் பின்னாடி வர்றியான்னு வயிறெரிஞ்சு ரோட்டுல இருக்குற மண்ணையெல்லாம் வாரி என் மூஞ்சில இறைச்சுகிட்டே முன்னாடி போனான். ஹ்ம், ஹெல்மட்டோட அருமை அப்போ தெரிஞ்சுது. என்னதான் நான் Apache'ல போனாலும் எனக்கு ஊட்டில குதிரை சவாரி பண்ற மாதிரியே இருந்திச்சு. எல்லாம் இந்த ரோட்டோட மகிமை தான்னு உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒருவழியா நண்பனைக் கூட்டிக்கிட்டு திரும்ப குதிரை சவாரியை கண்ட்டினியு பண்ணினேன்.

நமக்கு பகல்லயே பசுமாடு தெரியாது, இருட்டுல எரும மாடு தெரியவா போகுதுன்னு பொறுமையா தான் ஓட்டிகிட்டு வந்தேன். வர்ற வெள்ளிக்கிழமை அவனுக்கு கல்யாணம், அதைப்பத்தி பேசிக்கிட்டு வந்தேன். என் பைக், நான் தினமும் யூஸ் பண்ணுற இந்த ரோடு ரெண்டுபேர்மேலையும் எனக்கு கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. ஆனா இவங்க ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சனையோ கடைசில என்ன கவுத்துட்டாங்க. சின்ன பள்ளம்னு நெனச்சு வண்டிய இறக்குனா அது யானையே முழுங்கிடும்போல. அப்பறம் என்ன, குட்டிக்கரனமெல்லாம் அடிக்காம அப்படியே கீழ விழுந்தோம். ஹையா, ரொம்ப அடி படலையேன்னு எழுந்து தலைய தூக்கி பாத்தா ஒரு லாரி பிரேக் அடிச்சு நின்னுது. அப்படியே அப்பீட்டு..! தப்பிச்சோம்டா சாமின்னு அப்டியே வண்டிய எடுத்துக்கிட்டு கொஞ்ச தூரம் வந்த பிறகுதான் அந்த லாரிய திரும்பி பாத்தேன். என்னென்ன திட்டினானோ..? வண்டிய ஓரமா நிறுத்திட்டு ரெண்டுபேரும் மீசைல மண்ணு ஒட்டிருக்கான்னு பாத்தோம், நல்லவேளை வண்டியோட பம்பர்ல தான் ஒட்டியிருந்துது. ரைட் பூட் ரெஸ்ட காணோம். இதோட தப்பிச்சொமேன்னு சிரிச்சுகிட்டே வீடு வந்து சேர்ந்தோம்.

கொஞ்ச நாளாவே இந்த ரோட்டை பத்தி எழுதனும்னு நெனச்சிகிட்டிருந்தேன். ஆனா இப்டி எழுதுவேன்னு நெனைக்கவே இல்லை. கீழ விழுந்திருந்தாலும் இதுவரை இப்படி சில்லறை வாரியதில்லை(கலக்சன் கம்மிதான்). பரவாயில்லை, பெரிய அடி ஏதும் இல்லாம தப்பிச்சொமே..! மத்தவங்களையும் காப்பாத்திடுப்பா ஆண்டவா..!

டிஸ்கி :

நண்பனுக்கு அடி பட்டிருச்சேன்னு அன்னைக்கு கொஞ்சம் பீலிங்க்ஸ் ஆய்டுச்சுங்க, கொஞ்ச நாள்ல கல்யாண மாப்ளை வேற. சாரிடா மச்சான்..!

Justify Full

என்னைக் கவர்ந்த பதிவர்கள்

நான் இந்த உலகத்துக்கு புதுசு, கொழந்த மாதிரி. அதனால நான் என்ன பேசினாலும் சும்மா கத்துற மாதிரி தான் இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க, சீக்கிரமா வளர்ந்திடுரேன்(complan, horlicks எல்லாம் வாங்கி வெச்சுட்டேன்..!). So, என்னைப்பத்தி சொல்றதுக்கு எதுவும் இல்லாததுனால, எனக்கு புடிச்ச சில பதிவர்கள் பத்தி இங்க சொல்லியிருக்கேன்.

ஹாலிவுட் பாலா :

முழுக்க முழுக்க ஆங்கில திரைப்படங்கள் பத்தின விமர்சனங்கள் மட்டுமே. என்னுடைய ஆங்கில (சினிமா) அறிவை வளர்த்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவரின் முதல் பதிவு வெளியான நாளிலிருந்து இவரின் தீவிர விசிறி நான். இவருடையஎழத்து நடையும், கதையின் கருவை மட்டும் சொல்லி படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவதும், அதிலுள்ள டெக்னிகல் விஷயங்களை பிரித்து மேய்வதும் இவரிடம் மட்டுமே உள்ள திறமை. பாரத மாதா கவிதையும், pixar வரலாறும் என்னைக் கவர்ந்தவை.

கேபிள் ஷங்கர் :

இவர் சினிமா துறையிலேயே உள்ளவர். அதனால் அந்த துறையைப் பற்றிய பல விஷயங்களை இவர் பதிவுகள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். விமர்சனம் என்று வந்துவிட்டால் இவருக்கு மொழி பாகுபாடு கிடையாது. தமிழ், தெலுங்கு,ஹிந்தி, ஆங்கிலம் என பழமொழி விமர்சனங்களைக் காணலாம். இவருடைய விமர்சனம் படித்த பிறகுதான் அந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்பவர்கள் பலர். சமூக கருத்துக்களுக்கும் இவரிடம் பஞ்சம் இருக்காது. கொத்து பரோட்டாவும், நிதர்சன கதைகளும் என்னைக் கவர்ந்தவை. (சமீபத்தில் தனது தந்தையை இழந்து வாடும் கேபிள் ஷங்கருக்கு இப்பதிவின் மூலம் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்).

இரும்புத்திரை :

"எழுதுவதெல்லாம் நக்கல், நக்கலைத்தவிர வேறொன்றுமில்லை". மிக மிக இயல்பாக வரும் நக்கல் அரவிந்தோட ஸ்பெஷாலிட்டி. யாரையாவது வம்பிளுக்கலன்னா இவருக்கு தூக்கமே வராது போல. இவருடைய சினிமா விமர்சனங்கள் சற்று வித்தியாசமான பார்வையில்இருக்கும். வேற என்ன சொல்றது இவரபத்தி. நம்ம எப்படிப்பட்ட மூட்ல இருந்தாலும் சரி, இவர் ப்ளாக் பக்கம் வந்தோம்னா ஒரே மூடோட தான் திரும்பி போவோம், அது .....! நீங்களே ட்ரை பண்ணி பாருங்க.

வெட்டிப்பயல் :

பெயரிலேயே இருக்கு இவருடைய ப்ளாக்கின் சிறப்பு. சிறந்த பொழுதுபோக்கு வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இவருடைய பதிவுகளில் வெட்டிப்பேச்சு மட்டுமின்றி அழகிய கருத்துக்களும் இருக்கும். உங்களுக்கு தமிழ் சிறுகதைகள் மெயிலில் வந்திருந்தால் அது 80% இவருடையதாகத்தான் இருக்கும். இவருடைய மிக அருமையான சிறுகதைகளுக்கென்று தனி ரசிகர் வட்டாரமே உண்டு. கொல்ட்டி, கல்லூரிப்பயணம், தூறல் என அனைத்தும் என்னைக் கவர்ந்தவை. மகளின் சுட்டித்தனத்தில் பிசியாக இருக்கும் இவருக்கு என் வாழ்த்துக்கள். உங்க ப்ளாக்கும் ஒரு குழந்தை மாதிரி தான் வெட்டிப்பயல் சார், அப்பப்போவந்துபோங்க.

ஜொள்ளுப்பேட்டை :

வாயிலிருந்து வரும் வாட்டர் பால்சை ஒரு சொட்டு கூட வேஸ்ட் பண்ணாமல் இவர் ப்ளாக்கில் கொட்டிவிடுகிறார். இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள், அறிவுரைகள், டிப்ஸ்கள் என அனைத்தும் ஜொள்ளும் ஜொள்ளு சார்ந்தவையுமே. இந்த ஒரு சொல் மட்டுமே இவரின் அனைத்து பதிவுகளின் கருவும். ஆனால் ஆபாசம் இல்லாமல் எழுதுவது இவரின் சிறப்பு. எப்பவாச்சும் தான் ப்ளாக் பக்கம் வந்துபோறார். கொஞ்சம் அடிக்கடி பேட்டை வாங்க 'ஜொள்ளு' சார். உங்கள் சேவை எங்களுக்கு ரொம்ப தேவை.

கவிதைகளைப் பொறுத்தவரை பிரியன், நிலா ரசிகன், யாத்ரா, வெண்ணிறஇரவுகள் , மண்குதிரை, நந்தாவிளக்கு, நேசமித்ரன் என ஒரு பட்டியலே என்னிடம் உண்டு. அனைவரின் கவிதைகளும் ஒவ்வொரு வகையில் சிறந்தவை.

இவர்கள் தவிர, உண்மைத்தமிழன், வண்ணத்துப்பூச்சியார், அகநாழிகை, சர்வேசன், போஸ்டன் ஸ்ரீராம், அதிஷா, ஐந்தறைப்பெட்டி, கீதப்பிரியன், மச்சான்ஸ் இன்னும் பெயர் குறிப்பிடப்படாத பலருடைய வாசகன் நான். நீண்ட நாட்களாக வலைப்பூ வாசகனாக இருந்தும் இதுவரை யாருக்கும் பின்னூட்டம் இட்டதில்லை (முடியாம தாங்க). இனி கண்டிப்பாக உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என உறுதி கூறுகிறேன். அனைவரைப்பற்றியும் எழுத ஆவல் இருந்தாலும், நீளம் கருதி இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

டிஸ்கி :

இவங்க எல்லாருமே என்ன ஏகலைவன் ஆக்கின(இன்னும் ஆகுலீங்கன்னா..!) துரோணருங்க. அதனால இந்த பதிவு இவங்க அனைவருக்கும் சமர்ப்பணம்.


நான் ரசித்த பாடல்கள் 2009 - விரைவில்.

Friday, November 20, 2009

தேவதைகளின் தேவதை


நழுவி விழுந்த நட்சத்திரமொன்று தரையினில்..!தேவதைகள் என்ன சாப்பிடும்..?அழகுக்கு அர்த்தம் சொல்பவர்கள் இவளை என்னவென்று சொல்வார்கள்..?வளையாமல் ஒரு வானவில்..!அறிவியல் கண்டிடாத அதிசயப் பூ..!என்ன தவம் செய்தனவோ, இன்று மோட்சமடைந்துவிட்டன இம்மலர்கள்..!விரல்விட்டு எண்ணிடலாம் இறைவனின் படைப்பில் சிறந்தவற்றை..!இவள் சிரிப்பில் கூடுகிறது நம் ஆயுள்..!இவளை இங்கே விட்டுவிட்டு இறைவனுக்கு மேலே என்ன வேலை..?இவள் நடந்தால் மட்டும் இதமாய் இருக்கிறதாம் பூமித்தாய்க்கு..!எட்டாவது அதிசயம் எப்படி இருக்குமோ, ஆனால் இவள் ஒரே ஒரு அதிசயம் தான்..!


இவள் : சம்யுக்தா

என்னுடைய தோழியும், சகோதரியும் போன்றவரின் செல்ல தேவதை. என்று நேரில் காண்பேன் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.


Thursday, November 19, 2009

ஆசைகள்

தலை சாய்க்க தோள் வேண்டாம்
மடி போதும்
விரல் கோர்க்க கரம் வேண்டாம்
கூந்தல் போதும்
கதை பேச செவி வேண்டாம்
இதழ் போதும்
முகம் பார்க்க கண்ணாடி வேண்டாம்
கண்கள் போதும்

நனைந்திட இனி மழை வேண்டாம்
உன் வியர்வை போதும்
காய்ந்திட இனி தீ வேண்டாம்
உன் வெப்பம் போதும்
இரவினில் இனி தூக்கம் வேண்டாம்
உன் ஏக்கம் போதும்
துயில் களைந்திட இனி ஓசை வேண்டாம்
உன் கிள்ளல் போதும்

நடை பயில இனி பாதை வேண்டாம்
உன் நினைவு போதும்
நான் ரசிக்க இனி பாடல் வேண்டாம்
உன் சிணுங்கல் போதும்
இரவினில் இனி நிலா வேண்டாம்
உன் முகம் போதும்
எனை வெல்ல இனி படை வேண்டாம்
உன் இடையே போதும்

எனை மயக்க இனி மலர் வேண்டாம்
உன் மணம் போதும்
நன் சிலிர்க்க இனி தென்றல் வேண்டாம்
உன் சுவாசம் போதும்
பசியெடுக்க, உணவில்லாத போதும்
அழகே..,
அது அடங்கிட இனி நீயே போதும் - எப்போதும்...!

Wednesday, November 18, 2009

கனவுக் கொடுமை : 1

போன ஞாயித்துக்கிழமை ஈவ்னிங்லேர்ந்து நைட் வரைக்கும் மழைல நனைஞ்சுகிட்டே நம்ம சென்னை டிராபிக்ல வீர சாகசமெல்லாம் செஞ்சு வீட்டுக்கு வந்தேங்க. முழுக்க நனைஞ்சப்பரம் முக்காடு எதுக்குன்னு ஹெல்மட்ட கூட கழட்டி கைல வெச்சுகிட்டு தாங்க வந்தேன். அதனால வீட்டுக்கு வந்த பிறகும் ஒரே குளிர். சரி இந்த குளுகுளுப்புலையும் கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கட்டுமேன்னு நல்லா இழுத்து பொத்திகிட்டு படுத்தேங்க. அன்னைக்குன்னு பாத்து வந்துது பாருங்க கனவு... (படிக்கும்போதே கற்பனை பண்ணிகோங்க. அப்பத்தான் நல்லா புரியும்).

என் நண்பர் கம் ரூம்மேட் என்னை அவரோட ஆபீஸ்க்கு கூட்டிட்டு போறாரு. அது ஒரு டபுள் பெட்ரூம் வீடு மாதிரி இருக்குங்க . பக்கத்துல பெரிய தண்ணீர் தொட்டியெல்லாம் இருக்கு. அந்த ஏரியாவுக்கே சப்ளை பண்ணுவாங்க போல. ஆபீஸ்குள்ள போனா அங்க ஒருத்தர் சாத்துக்குடி ஜூஸ் போட்டுகிட்டிருக்கார். சரி எனக்கும் கொஞ்சம் கிடைக்கும்னு வெய்ட் பண்ணுனா எல்லாத்தையும் அவரே குடிச்சிடுறார். ஜூஸ் போச்சென்ற காண்டுல நான் ஒரு பாட்டில் தண்ணிய அப்டியே குடிக்க, அவருதான் மேனேஜர்'னு எனக்கு அறிமுகப்படுத்தினார் என் நண்பர். பிறகு வீட்ட சாரி ஆபீஸ சுத்தி காட்டினார், இன்னும் 2 , 3 பேர் அங்க இருந்தாங்க. பேசிக்கிட்டிருக்கும்போது எனக்கு மட்டும் திடீன்னு ஒரு கருகுற வாசனை வர, பக்கத்து ரூமுக்குள்ள போனேன். அங்க பாத்தா ஒரு ஜோடி புறாக்கள் நாங்க வர்றதகூட கவனிக்காம உலக சமாதானத்த பத்தி கடலை போட்டுக்கொண்டிருந்தாங்க. என் நண்பர், 'அடப்பாவிங்களா இங்கயுமா?'னு கேக்கும்போது தாங்க அது நடந்துச்சு.

அந்த ரூம் ஜன்னல் வழியா ஒரு கை வருது அதுல முக்கால் அடில ஒரு கத்தி. அது அப்டியே அந்த பொண்ணோட கழுத்துல எறங்குது. அந்த அறை முழுக்க ரத்தம் தெறிக்க, அதை பார்த்த நானும் என் நண்பரும் டர்ராகி கத்திகிட்டே ரூமைவிட்டு வெளியே வந்தா, அங்க அதைவிட பெரிய பயங்கரம். வாசல் கதவு வழியா இன்னும் இரண்டு பேர் வந்து அங்கே இருக்கிறவங்க எல்லாரையும் கண்டபடி வெட்டுறாங்க, குத்துறாங்க. நானும் என் நண்பரும் தப்பிக்க என்ன பண்றதுன்னே தெரியாம இங்கயும் அங்கயும் ஓட, எனக்கு ஜூஸ் கொடுக்காம குடிச்சாரே அந்த மேனேஜர், அவர் அலர்ற சத்தம் கேக்குது. திரும்பி பாத்தா அவரோட வலது கைய ஒருத்தன் கத்தியால அருத்துக்கிட்டிருக்கான். ரெண்டு அடி தள்ளி கெடந்த ஜூஸ் ஜார நனைக்குது அவர் ரத்தம். சிக்குனா நம்மையும் செதச்சிருவாங்கடா கைப்புள்ளங்கற மாதிரி நானும் என் நண்பரும் அந்த ஆபீஸ்சொட முன் கதவ நோக்கி தெறிக்க ஆரம்பித்தோம்...!

இதோட கனவு கலைஞ்சுருச்சுங்க. நான் என்ன Nicole Kidman, Angelina Jolie, Lindsay Lohan அப்படியா கேட்டேன். கிளுகிளுப்பா படுத்தவனுக்கு இப்படி ரணகளமா ஒரு கனவு வந்தா, மனுஷன் டென்ஷன் ஆகாம என்னங்க பண்ணுவான், நீங்களே சொல்லுங்க.

டிஸ்கி :

விழித்தவுடன் உண்மையாகவே தண்ணீர் குடிக்க வைத்துவிட்ட இந்த கனவின் பின்னணி, அதற்கு முதல்நாள் நான் பார்த்த படம். என்னன்னு கேக்குறீங்களா, அடுத்த வரியைப் பாருங்கள்.
Wrong Turn 3: Left for Dead - விரைவில்.


கனவுகள் : அறிமுகம்


ட்டுர்ரிங்
.... கொசுவத்தி சுருள கொஞ்சமா சுத்துங்க ப்ளீஸ்.
சின்ன வயசுல பாட்டிகூட நடந்த சின்ன உரையாடல்.

நான் : பாட்டி, கனவு எப்டி வருது?
பாட்டி : நம்ம என்ன ஆசைப்படுரமோ அது தான் கண்ணு கனவா வரும்
நான் : யாரு இந்த கனவெல்லாம் அனுப்புறது?
பாட்டி : கனவு தேவன்னு ஒருத்தர் இருக்காரு. அவருதான் உனக்கு என்ன கனவு வேணும்னு பாத்து பாத்து அனுப்புவாரு

ட்டுர்ரிங்.... போதும், போதும், நிப்பாட்டிடுங்க. நன்றி.

இப்ப மட்டும் அவரு என் கைல கெடைச்சாரு 'அது ஏன்டா என்ன பாத்து அப்டி கேட்ட..?' அப்டின்னு கௌண்டமணி செந்தில அடிப்பார்ல, அந்த மாதிரி 'அது ஏன்டா எனக்கு மட்டும் இப்டில்லாம் கனவு வருது'ன்னு அவர நாலு அப்பு அப்பனுங்க. என்ன மாதிரி பசங்கல்லாம் ஹாலிவுட்பாலா'வோட 18+ எல்லாத்தையும் பாத்துட்டு த்ரிஷா, நயன்தாரா, நமீதாவ எல்லாம் கண்டுக்காம பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுல கனவு கண்டுகிட்டிருக்காங்க. சரின்னு நானும் டாப்பு, பாட்டம், லெப்ட், ரைட்னு எல்லா பக்கமும் தலைகானி எல்லாம் வெச்சுகிட்டு நம்ம ஆளு கனவுல வரணும்னு பாட்டி சொன்ன அந்த கனவுதேவனை வேண்டிக்கிட்டுதாங்க படுக்கிறேன். ஆனா விடிஞ்சதுக்கு அப்புறம் 'என்ன கொடும கனவுதேவன் சார்?'னு பல்லு விலக்குரதுக்கு முன்னாடியே திட்டற மாதிரி பண்ணிடுராருங்க. 'ஏன் இப்புடின்னு கேட்டா, ' டேய் அறிவுGV, போன ஜென்மத்துல உனக்கே தெரியாம நீ நிறைய பாவம் பண்ணிட்ட. அதான் இப்படில்லாம் கனவு வருது' அப்டின்னார். 'அதுக்கு ஏதும் பரிகாரம் இல்லீங்களா சுவாமி'னு நானும் ரெண்டு கையையும் குறுக்கால கட்டிகிட்டே கேட்டேன். 'இருக்கு பக்தா, உன் கனவையெல்லாம் வெச்சு பதிவுங்குற பேர்ல மொக்க போடு. அப்பறமா அதை படிக்கிறவங்க படுற கஷ்டத்த பாத்தாவது உனக்கு நல்ல கனவா அனுப்புறேன்'னு சொல்லிட்டு புகை போடாமலே மறைஞ்சுடுறாருங்க.

அதனால என்னோட கனவையெல்லாம் ஒன்னொன்னா அப்பப்போ உங்களுக்கு சொல்லப்போறேன் . படிச்சுட்டு(பின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது), இனிமேலாச்சும் இந்த அறிவுGVக்கு 'நல்ல' கனவா கொடுடா கனவுதேவான்னு நீங்களும் எனக்காக கொஞ்சம் ரெகமன்ட் பண்ணுங்க ப்ளீஸ் .

கனவுக் கொடுமை : 1 - விரைவில்.

அறிவு GV.

Monday, November 16, 2009

இயலாமைபின்னிரவில் பெய்ய ஆரம்பித்த மழை

சாலையோர குழந்தையின் உறக்கம் கலைக்க,
அருகிலுள்ள மரத்தடியை அணுகியது அது.
சற்று நேரத்திலெல்லாம் மழை வலுக்க
மரம் தளர்ந்து,
அதன் முகம் நனைக்க ஆரம்பித்தது.
வெளியே வந்து வேறு இடம் தேட,
இடப்பக்கம் தெரிந்தது மூடப்பட்ட ஒரு கடை .
அழகாய் தொங்கியபடி வண்ணமயமாய் குடைகள் உள்ளே,
தரை சேராத விழுதுகள் போல..!
வலப்பக்கமோ பூட்டப்பட்ட ஒரு கோயில்,
நான் தப்பித்தேன் எனும்படி உள்ளே கடவுள்..!
இயலாமல் இருப்பது
குடையோ கடவுளோ அல்ல,
தாம் தான் என்பதை உணராமல்
அவர்களது இயலாமையை எண்ணியபடி,
தன் பிஞ்சுக் கால்களால்
மீண்டும் அம்மரம் நோக்கி நடந்த
குழந்தையின் மனதில் ஒரேயொரு கேள்வி,
எப்போது விடியும்..?


சென்ற வாரம் நான் மழையில் நனைந்தபடி ஊருக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்தபோது தோன்றிய கவிதை(?!) இது. சக்கையா இருக்கா இல்ல மொக்கையா இருக்கான்னு சொல்லிட்டு போங்களேன்.

அறிவு GV .

Saturday, November 14, 2009

The Blair Witch Project (1999)

சமீபத்தில் வெளிவந்த Paranormal Activity பார்த்துவிட்டீர்களா? அமெரிக்காவில் இப்போது சக்கை போடு போடும் இத்திரைப்படத்தின் முன்னோடிதான் இந்த The Blair Witch Project. படம் ஆரம்பிக்கும்போதே கதையை சொல்லிவிடுகிறார்கள் (நம்ம SJ சூர்யா மாதிரி).

கதை என்னன்னா, 1994 October'ல் 3 காலேஜ் பசங்க(Mike, Josh & Heather) Burkittsville ங்குற எடத்துல இருக்க ஒரு காட்டுல வாழுற(அப்டின்னு சொல்றாங்க) சூனியகார கிழவி பத்தி டாகுமெண்டரி எடுக்க போறாங்க. போற வழில அவங்க சந்திக்குற ஆளுங்க கொஞ்சம் terror கிளப்பிவிட, குழந்தையே பயப்படுதுன்னா பாத்துக்கோங்க, இவங்க மட்டும் தைரியமா காட்டுக்குள்ள போறாங்க. நைட் ஆனா ஏதேதோ சத்தமெல்லாம் கேக்குது. விடிஞ்சு பாத்தா அவங்க டென்ட்ட சுத்தி கல்லுங்க அடுக்கியிருக்கு. காதல் கொண்டேன்ல தனுஷ் வெச்ச கல் மாதிரி இல்லங்க, இது கொஞ்சம் மந்திரம் சம்பந்தப்பட்டது. அப்பறம் காட்டோட map காணாம போகுது. அதுக்கு சண்ட போடுறாங்க. வாழ்க்கை மட்டும் வட்டமில்ல, காடுந்தாங்குற மாதிரி வழி தெரியாம கிளம்புன இடத்துக்கே திரும்ப வர்றாங்க. பின்னாடி ஒரு ஆளே காணாம போகுராறு. நைட்ல அவர் அலர்ற சத்தம் மட்டும் கேக்குது. அப்புறம் அவர கண்டுபிடிச்சாங்களா, கடைசியா அவங்களுக்கு என்ன ஆச்சு அப்படிங்கறது தான் மீதி கதை.

1999 இல் வந்த இப்படத்தின் directors Daniel Myrick & Eduardo Sanchez. படம் முழுக்க அந்த 3 பேரோட கேமராவில் ஷூட் பண்ணினத தான் காட்டுறாங்க. என்னதான் Black & Whiteனு மாறி மாறி வந்தாலும் விஷுவல் அருமையா இருக்கு. கடைசில அந்த பொண்ணு கேமராவ பாத்து பேசுற சீன் 'நச்'. திகில் பட ரசிகர்கள் தனியா உக்காந்து பாக்க ஒரு நல்ல படம்.

IMDB Rating : 6.2

Superhero Movie - விரைவில்.

Friday, November 13, 2009

ராதா கானம்

ராதை தானே கிருஷ்ணருக்காக உருகினாங்க. ஒருவேளை கிருஷ்ணர் ராதைக்காக ஏங்கி ஒரு கவிதை எழுதியிருந்தா எப்படி இருந்திருக்கும்..?(நல்லா தான் இருந்திருக்கும்). ஆனா அவர் எழுதினாரான்னு தெரியல. அதனால அவருக்காக நான் எழுதிய ஒரு கவிதை(?!).

ராதையே அடி ராதையே 
உன் கிருஷ்ணன் நானடி

கோதையே பூங்கோதையே
என் உயிரே நீயடி
வெளியே இன்னும் வெளியே
எனைத் தேடுவதேனடி
அருகினில் மிக அருகினில்
நான் வாழ்கிறேன் பாரடி...!

வெண்ணையும் மண்ணையும் விரும்பி உண்டேன்
கோபியர் ஆடை திருடிவைத்து ஆனந்தம் கண்டேன்
அண்ணனோ நல்ல பிள்ளையென பெயரெடுக்க
நானோ அன்னையர்க்கு கள்ளப் பிள்ளையானேன்
கள்வன் தான் நானும் உன்னை காணும்வரை
உள்ளம் களவு போகும்வரை...!

கொன்றையில் குவளை பூத்துவிட்டால்
அதை அதிசயம் என்று ஊர்சொல்லும்
உன் பொன்னிற மேனியும் புன்னகையும்
சேர்ந்துநின்று அதை வெல்லும்
கரிய விழிகளும் கூந்தலும் காற்றிநிலாடி
மயில்தனை மயங்கி ஆடச்செய்யும்...!

தரையினில் களவு புரிந்த எனை
மனச் சிறையினில் கைது செய்தாய்

கரையினில் காதல் புரிந்த எனை
காதலில் கரை புரளவைத்தாய்
கடைக்கண் பார்வையில் இரு கருவிழி போர்வையில்
கண்ணனாய் இருந்த எனை கிருஷ்ணனாய் மாற்றிவிட்டாய்....!

ராதையே அடி ராதையே
உன் கிருஷ்ணன் நானடி
கோதையே பூங்கோதையே
என் உயிரே நீயடி
வெளியே இன்னும் வெளியே
எனைத் தேடுவதேனடி
அருகினில் மிக அருகினில்
நான் வாழ்கிறேன் பாரடி...!

எனக்கு பிடித்த கிருஷ்ணருக்காக நான் எழுதினது. ஏன் பிடிக்கும்னு கேள்விலாம் கேக்கபடாது. கவிதைய(ஒத்துக்கோங்க ப்ளீஸ்) படிச்சுட்டு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களா..?


என்னைக் கவர்ந்த பதிவர்கள் - விரைவில்.

Next மீட் பண்றேன்.
அறிவுGV.

Thursday, November 12, 2009

முதல் வணக்கம்..! அனைவருக்கும்..!

டும் டும் டும் டும்.....

ஆபீஸ்ல புடுங்குறதுக்கு ஆணி இல்லன்னு சொல்லி ப்ளாக் ஆரம்பிச்சு கடப்பாறையையே புடுங்குற பதிவுலக அண்ணன்களே தம்பிகளே, அக்காக்களே தங்கச்சிகளே, பெருசுகளே சிருசுங்களே, நண்டுகளே சிண்டுகளே மற்றும் தல'களே தளபதி'களே....!

இதனால உங்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா, இன்னைக்கு நாங்களும் புதுசா ஒரு கடப்பாற வாங்கிட்டோம். இனிமே கதை, கவிதை, விமர்சனம், வம்பு, வெட்டிபேச்சு, நக்கலு, நையாண்டின்னு கொழா தகராறுலேர்ந்து நிலா தராரு வரைக்கும் நாங்களும் பஞ்சாயத்து பண்ண போறோம். நீங்களும் அடிக்கடி வாய்தா வாங்காம வந்து சாட்சி சொல்லிபுட்டு போகணும்னு ரொம்ப தாழ்மையா கேட்டுகுரோமுங்கோவ்....!

டும் டும் டும் டும்.....
(ஒரு சோடா கெடைக்குமா..?)

டிஸ்கி : (இது இல்லன்னா யாரும் படிக்க மாட்டாங்களே..!)

உங்களுக்கு பதிவு புடிச்சிருந்தா வாழ்த்துங்க..!
இல்லனாலும் வாழ்த்துங்களேன், காசா பணமா, எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு தான்...!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அனைத்து பதிவர்களுக்கும், பதிவுலக நண்பர்களுக்கும் எங்களுடைய பணிவான வணக்கங்களோடு இப்பயணத்தை துவங்குகிறோம். பாதை இனிதே அமைந்திட இறைவன் மற்றும் உங்கள் துணையும் ஆதரவும் என்றும் கிடைத்திடும் என்கிற

நம்பிக்கையுடன்,

அறிவு GV.
Related Posts with Thumbnails