Wednesday, March 31, 2010

அறிவு GV'யும் பிரபல கம்பெனி இண்டர்வியு'வும்னக்கு ப்ராஜெக்ட் போன கதைய போன பதிவுல படிச்சிருப்பீங்க. 2 வாரம் முன்னாடி ஒருநாள் RMG'லேர்ந்து கால் வந்துது. ஆஹா, நமக்கு ஒரு அடிமை சிக்கப்போறான் போல இருக்கேன்னு ஆவலோட போய் அவர பாத்தா, 'நம்ம எம்ப்ளாயீ ஒருத்தருக்கு திடீர்னு ஒடம்பு சரியில்லாததால ICU'ல சேர்த்திருக்கோம், நாளைக்கு நீங்க ப்ரீயா இருந்தா கொஞ்சம் போய் பாத்துக்க முடியுமா'னு கேட்டார். அதாவது, 'நீ வெட்டியா தான இருக்க, இங்க வந்து தேய்க்க வேண்டிய சீட்ட ஹாஸ்பிட்டல்ல போய் தேய்'னு சொன்னார். இந்த மாதிரி சமூக சேவையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு அவர்கிட்ட சொல்லி சமாளிச்சுட்டு, மறுநாள் அந்த ஹாஸ்பிட்டலுக்கு போனேன். அது ஒரு மொக்கை இடம். பில்டிங் தான் பெருசா இருக்கே தவிர, ஒரு நர்ஸ் கூட நல்லா இல்ல. சத்திய சோதனைடா ஜீவின்னு தலைல அடிச்சுகிட்டே வெளிய வந்து வேடிக்கை பாக்கும்போது என் ஆபீஸ் நண்பன் போன் பண்ணினான்.

சும்மா இருந்த சிங்கத்த சொரிஞ்சுவிட்ட கதையா, 'வாடா மச்சான், இந்த வீக்கென்ட் ஒரு இண்டர்வியு போலாம், பெரிய கம்பெனி, நல்ல பேக்கேஜ் கேக்கலாம்'னு கூப்பிட்டான். A,B,C,D'ல எட்டாவது எழுத்து என்னன்னு கேட்டாலே நான் அஞ்சு நிமிஷம் யோசிப்பேன். நமக்கு எண்டா இந்த வம்புனு யோசிக்கும்போது, அவனுக்கு போன் பண்ணின அதே கன்சல்டன்சிலேர்ந்து ஒரு புள்ள போன் பண்ணி 'நீங்க கண்டிப்பா சண்டே வந்து இன்டர்வியு அட்டென்ட் பண்ணனும், இல்லன்னா நான் கோவிச்சுப்பென்'னு ஆசையா கேட்டதினால என் கல் நெஞ்சம் கரைஞ்சுடுச்சு. ஊருக்கு போறதா இருந்த ப்ளான மாத்தி, இண்டர்வியு போக முடிவு பண்ணி, ப்ரிபேர் பண்ண ஆரம்பிச்சேன். கஜினி சூர்யா மாதிரி, படிக்கிறதெல்லாம் பத்து நிமிஷத்துல மறந்து போக, இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, நேரடியா களத்துல சந்திச்சுக்கலாம்னு விட்டுட்டேன். அந்த ஞாயித்துக் கிழமையும் வந்துச்சு. ஏதாவது அதிசயம் நடக்காதான்னு நானும் ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளை வேண்டிகிட்டு நண்பனோட அந்த ஆபீசுக்கு போனேன்.

பீஸ் சுமாரா தான் இருந்துது. எங்க ஆபீஸ் பரவாயில்ல. அங்க நமக்கு முன்னாடியே ஆறு, ஏழு ஜீவிங்க வந்திருந்தாங்க. எங்கள பாத்த உடனே, 'உங்க பிகர நான் உஷார் பண்ணிக்கிட்டு போயிட்டேன்னா உங்க மூஞ்சி எப்டி இருக்கும்?', அந்த மாதிரி வெச்சிகிட்டாங்க. இண்டர்வியு தொடங்குச்சு. 'வெளக்கி வெச்ச அலுமினிய குண்டா' மாதிரி தலையோட ஒருத்தன் இண்டர்வியு பண்ணிக்கிட்டு இருந்தான். அத பாத்து நாங்க காமெடி பண்ண, அதை அவன் பாத்துட்டான். அப்பவே எழுந்து போய்டலாம்னு சொன்னேன், என் நண்பன் கேக்கல. நல்ல வேளையா எங்களுக்கு வேற ஒரு தாய்க்குலம் தான் வந்தாங்க. மொதல்ல என் நண்பன் போனான். நானும் அங்கே இருந்த லைட்டு, சேர், போஸ்டர் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆர்வமா போன நண்பன் 20 நிமிஷம் கழிச்சு காத்துபோன பலூன் மாதிரி தலைய சொறிஞ்சுகிட்டு வரும்போதே என்னோட முடிவும் சேந்து தெரிஞ்சுது. இருந்தாலும், கேள்வி கேக்குறவன் மனுஷன், பதில் தெரிஞ்சவன் வீரன், தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவன் மாவீரன்.., நீ மாவீரன்டா அறிவு GV'னு பெரியவங்க என்னைப்பத்தி சொல்லியிருந்ததால தைரியமா போனேன்.

ந்த அறிவு GV க்கு தற்பெருமை பிடிக்காதுன்னு தெரியாம அவங்க "Tell Me About Yourself"னு கேட்டுட்டாங்க. அதுக்கு நான் சொன்ன பதில வெச்சே அந்தம்மா முடிவு பண்ணிட்டாங்க, இந்த Blog பேர் மாதிரிதான் நானும்னு. அப்பறம் ஒரு கேள்வி கேட்டாங்க. அப்டின்னா என்னான்னு பதிலுக்கு நான் கேக்க, அதே கேள்விய வேற மாதிரி கேட்டாங்க. 'ஓ, அதுவா..!'னு கேட்டு நானும் ஒரு பதில் சொன்னேன். அத கேட்ட உடனே, பாக்கியராஜ் படத்துல ஒரு ஹிந்தி வாத்தியார் வருவாரே, 'ஏக் காவ் மே, ஏக் கிசான் ரஹா தாத்தா'னு சொல்லிக்கிட்டு, அவர மாதிரி அவங்க மூஞ்சி மாறிடுச்சு. திரும்பவும் அதே கேள்விய வேற மாதிரி மாத்தி கேக்க, நானும் நமக்கு தெரிஞ்ச மாதிரியே, 'is, was, that' மாத்திபோட்டு முன்னாடி சொன்ன அதே பதிலை சொன்னேன். அதை கேட்டுட்டு அவங்க கைல வெச்சிருந்த என் ரெஸ்யூம கசக்க ஆரம்பிச்சாங்க. சரி இதுக்கு மேல இங்க இருந்தா, அவங்க கொலை கேஸ்ல உள்ள போக வேண்டியிருக்கும்'னு நெனச்சு 'Thanks for the wonderful opportunity'னு சொல்லிட்டு அங்கேயிருந்து கம்பி நீட்டிட்டேன். வெளிய வந்தபிறகுதான் தெரிஞ்சுது என் நண்பனுக்கும் அதே கேள்வி தான்னு. அவன் என்ன பதில் சொன்னானோ...!!!


டிஸ்கி : இதுலேர்ந்து நம்ம கத்துக்க வேண்டியது என்னன்னா.., கேள்வி கேக்குறது ஈசி. ஆனா, அதுக்கு நம்ம சொல்ற பதில கேக்குறது தான் ரொம்ப கஷ்டம்...!


அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

Tuesday, March 2, 2010

பக்கோடா பாக்கெட் - 1


ணக்கங்க...! யார பாத்தாலும் வாரா வாரம் அவங்கள பாதிச்ச விஷயங்கள ஒரு பதிவா போட்டுடுறாங்க. தலைப்ப கூட கொத்துபரோட்டா, மசால் தோசை, துவையல், கெட்டி சட்னின்னு சாப்பிடுற ஐட்டமா வெச்சுகிறாங்க. அட நம்ம தானை தலைவர் ஹாலிவுட் பாலா கூட 'பிட்ஸ் அண்ட் பைட்ஸ்'னு ஆரம்பிச்சுட்டார். (ஒழுங்கா இருந்த அவரையும் யாரோ கெடுத்துப்புட்டாங்க, பாவி பசங்க. ஹ்ம்ம், நல்லாயிருங்க..!). அதனால நானும் 'பக்கோடா பாக்கெட்' ங்கற பேர்ல உங்ககிட்ட மொக்க போட முடிவு பண்ணியிருக்கேன். அதை படிச்சுட்டு பீல் பண்ணுவீங்களோ.., இல்ல காரி துப்புவீங்களோ, அது உங்க இஷ்டம்...!

2010 நல்லபடியா ஆரம்பிச்சுதுங்க. ஜனவரி மாசம் ரொம்ப நல்லா போச்சு. புது வருஷம், புது ப்ராஜெக்ட், புது மொபைல், 'பொங்கல்' சாகசங்கள் அப்டி இப்டின்னு நானும் சந்தோஷமா இருந்தேன். இது புடிக்காம யார் செய்வினை வெச்சாங்களோ தெரியல, திடீர்னு நியூட்டனோட மூன்றாம் விதி வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு.

கொறஞ்சது ரெண்டு நாளைக்கு ஒரு படமாவது என் சிஸ்டம்ல பார்த்திடுவேன். (அப்ப தான் பாலா, கருந்தேள் எல்லாரையும் ப்பாலோ பண்ண முடியும்). ஆபீஸ கட் அடிச்சிட்டேல்லாம் வந்து படம் படம் பார்த்திருக்கேன்னா பாத்துக்கோங்க. கொஞ்ச நாளா என் CPU பக்கத்துல ஏதாவது சாப்பிடற பொருள் கிடந்துகிட்டே இருந்துது. நானும் என் ரூம்மேட்ஸ திட்டிட்டு விட்டுட்டேன். அப்பறம் அந்த CPU'வ தொறந்து பாத்தா, உள்ள ஒரு எலி..! அப்பப்போ வந்து போகும்னு நெனச்சு விட்டிருந்தா, அது குடும்பம் நடத்தி குட்டியே போட்டிருந்துச்சு. வந்த கோவத்துல அத குடும்பத்தோட அடிச்சி காலி பண்ணிட்டேன். அது பத்தினி எலி போல, அந்த சாபம், ஒரு வாரம் கழிச்சு என் ஹார்ட் டிஸ்க் காலி. பேக்கப் எதுவுமே இல்ல. இத்தன வருஷ போட்டோஸ், மூவீஸ், டாகுமென்ட்ஸ், சாப்ட்வேர்ஸ் எல்லாம் போச்சு. படம் பாக்க முடியாம, பாட்டு கேக்க முடியாம, சாட் பண்ண முடியாம, ரூமுக்கு போனா கடுப்பா வருது.

சின் கல்யாணத்துக்காக ரெண்டு வாரம் முன்னாடி ஊருக்கு போயிருந்தேன். அவருக்கடுத்து கல்யாணத்துக்கு ரெடியா இருக்க மைனர் நான் தான். சீக்கிரமா அதுக்குண்டான வேலைய பாத்திடலாம்னு சந்தோஷமா 'அன்பில் அவன் சேர்த்த இதை'னு பாட்டு பாடிக்கிட்டே, சார்ஜ் போட்டு வெச்சிருந்த என் புது Sony Ericsson மொபைல எடுத்தேன். 'டமால்'னு கீழ விழுததுல டிஸ்ப்ளே காலி.. !அந்த குருட்டு போன வெச்சு ஒரு வாரம் ஓட்டிட்டு, போன வாரம் தான் சர்வீசுக்கு கொடுத்திருக்கேன். அவன் எவ்ளோ தீட்ட போறான்னு தெரியல...!

ரொம்ப நாள் கழிச்சு நம்மள நம்பி(விதி வலியது) ஒரு ப்ரொஜெக்ட்ல போட்டாங்க. அதுலயாவது நம்ம ஒழுங்கா வொர்க் பண்ணி, நானும் 'கில்லி' தான்னு எல்லாருக்கும் நிரூபிக்க கொஞ்சம் 'கஷ்டப்பட்டு(!?)' வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா அந்த அமெரிக்காக்காரன் (client தான்) இத எப்டி கண்டுபுடிச்சானோ தெரியல, திடீர்னு டெமோ குடுக்க சொல்லிட்டான். நானும் என் டீமோட உக்காந்து ஒருவழியா அத ரெடி பண்ணி அவனுக்கு டெமோ குடுத்தோம். அந்த மாங்கொட்டை தலையனுக்கு என்ன புரிஞ்சுதோ, "இனிமே இத நாங்களே பாத்துக்குறோம், உங்க அறிவுக்கும் தெறமைக்கும் எங்க கம்பெனிலையே ப்ராஜெக்ட் இல்ல"னு சொல்லி கதவ சாத்திபுட்டான். 'விடுங்க பாஸ், இந்த அமெரிக்காக்காரனுங்களே இப்படி தான், சீக்கிரமா வேற ஒருத்தன் சிக்குவான்னு' அனுபவஸ்தர்கள் சொன்னதுனால திரும்பவும் வேற ப்ரொஜெக்ட்ல நம்மள போடுவாங்கன்னு நம்பி, 'கதவ திறந்து வெச்சுட்டு காத்திருக்கேன்.., காத்து கூட வரமாட்டீங்குது'..!

'பொங்கல்' சாகசம் பத்தி தனியாவே ஒரு பதிவு போடலாம். அவ்ளோ பெரிய பல்ப் வாங்கிட்டேன். அந்த பதிவு விரைவில்.அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

கோமாளி


ற்றவரை மகிழ்விக்கும்
கோமாளி நான்...!


ன் துயரம் கேட்கும் செவிகள் இல்லை,
கண்ணீர் துடைக்கும் கரமும் இங்கில்லை,
சாய்ந்து அழ தோளும் இல்லை,
சேர்ந்து நடக்கும் கால்களும் இங்கில்லை,
மீண்டும் வேகிறேன் தனிமைத் தீயில்...!

சி தீர்க்க பணமும்,
கவலை தீர்க்க கவிதைகளும்
காதல் தீர்க்க கனவுகளும்,
மட்டுமே என்வசம்..!

ணைக்குள் அடைந்திருக்கும்
ஆற்று வெள்ளமென
விழித்திரைக்குள் தடுத்துவிட்ட
என் கண்ணீர்த் துளிகளோடு,
ல்லோரும் ரசிக்கும் ஒரு புன்னகையை
முகத்தில் மாட்டிக்கொண்டு,

ற்றவரை மட்டும் மகிழ்விக்கும்
கோமாளி நான்...!
என்னை நானே ஏமாற்றிக்கொள்ளும்
ஏமாளி நான்...!


அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!
Related Posts with Thumbnails