Thursday, February 25, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 4


னி கிடைக்குமோ
கிடைக்காதோ என்றெண்ணி
முழுமையாய் சுவைத்துவிட
எத்தனித்த நேரம்,
முடிந்துவிட்டிருந்தது
அவளின் இறுதி முத்தம்...!

-----------------------------------------------------


ன்றோ
விட்டுவிட்டு போனவள் மீது
இன்றும்
குற்றம் கூறமுடியாமல் தவிக்கும்போது
உணர்கிறேன்,
இன்னும் அவள் மீதுள்ள (மீதமுள்ள) காதலை...!

-----------------------------------------------------


ண் விழித்து
கண்ணாடி பார்க்கும்போதெல்லாம்
என் காதோரம் நரைத்துள்ள
முடிகள் காட்டிக்கொடுக்கின்றன,
நான்
காதலில் தோற்றவன் என்று...!
-----------------------------------------------


ன் கனவுகளை
வேறோருவனிடத்தில் இழந்துவிட்டு
தவித்துக்கொண்டிருக்கும் நேரம்
அவளிடமிருந்து வந்தது
ஒரு குறுஞ்செய்தி,
'நான் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய்..?'
-----------------------------------------------
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!

Wednesday, February 24, 2010

சாதனை நாயகன் சச்சினின் அடுத்த உலக சாதனை



மது சாதனை நாயகன் சச்சினின் அடுத்த உலக சாதனை. ஒருநாள் ஆட்டங்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளார், அதுவும் 200*. முதல் முறையாக இரட்டை சதம் அடித்த பெருமையும் இவரை சேர்ந்துவிட்டது. தான் தான் கிரிக்கெட் உலகின் முடிசூடிய ராஜா என்று மீண்டும் அழுத்தமாக நிரூபித்துவிட்டார் இன்று.

லக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த ஒரு விஷயம், யார் முதலில் இரட்டை சதம் அடிப்பார் என்பது. சச்சினால் மட்டுமே இது முடியும் என்பதும் அதில் பலரது நம்பிக்கை. அதை இன்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் ஒருநாள் போட்டியில் இனிதே நிறைவேற்றியுள்ளார் அதிரடியாய், அதுவும் 147 பந்துகளில், கடைசி வரை ஆட்டமிழக்காமல்.

ட்டையில் பட்ட பந்துகள் அனைத்தும் பவுண்டரிகளுக்கு அனுப்பி பந்துவீச்சாளர்களின் வாய், வயிறு, மூளை என அனைத்திலும் புளி கரையவிட்டுவிட்டார். அவரது அதிகபட்ச ஸ்கோரான 186 யை தாண்டியதும் உற்சாகமும் மகிழ்ச்சியும் பீறிட்டது. எங்கள் ஆபீசில் மேட்ச் ஓடாததால் (TV யே இல்லை..!) கீழ் ப்ளோரில் இருந்த வேறொரு ஆபீசிற்கு சென்று நண்பர்களுடன் மேட்சை பார்த்தேன். கண்டிப்பாக 200 நிச்சயம் என்று முடிவு செய்து ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்தோம். ஆனால் இறுதியில் நம் வயிற்றில் புளியை கரைத்தது, காரணம் தோனி. அவர் தன் சிறப்பான ஆட்டத்தால் பந்துகளை கபளீகரம் செய்ய, ஒரு கட்டத்தில் 199 லேயே சச்சின் வெகுநேரம் காத்திருந்தார்.

ன்னதான் தோனி சிக்ஸ்சும், ப்போருமாக அடித்தாலும் எங்கள் வாயிலிருந்து பல கேட்ட வார்த்தைகளைத்தான் வாங்கி கட்டிக்கொண்டார். ஓவர் முழுக்க ஆடிவிட்டு, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் வந்தார், ஆம்லா. தனது சிறப்பான பீல்டிங் மூலம் தோனி அடித்த இறுதி ஓவரின் இரண்டாவது பந்தை Four செல்லாமல் தடுத்து நம் மக்களிடத்தில் கைத்தட்டு வாங்கினார். அடுத்த பந்திலே தான் சச்சின் அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். 199 லிருந்து ஒரு சிங்கிள் எடுத்து 200 வது ரன்னை அடைந்து உலக சாதனை நிகழ்த்தினார். கைத்தட்டல்களும், விசில்களும், உற்சாக வாழ்த்துக்களும் அந்த ஏரியாவையே உலுக்கியது. நங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்டிப்பாக நீங்களும் அதே மனநிலையில் தான் இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

ன்னும் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆரம்பிக்கவில்லை. நமது அணியின் மொத்த ஸ்கோரான 401 ஐ அவர்கள் துரத்திப்பிடிப்பது கடினமே என்றாலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்கள் அதை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைந்துவிட்டது. அதற்கு முழுக்காரணமும் நமது மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சினையே சேரும்.

ந்திய மக்கள் சார்பாகவும், உலக கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாகவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சச்சின்...! நீங்கள் செய்யாத ஒரே பணி, இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுப்பதுதான். அதுவும் அடுத்த வருடம் நிறைவேறும் என்பதில் நம்பிக்கையும், ஆவலும் வைத்து காத்திருக்கிறோம்...!



டிஸ்கி : ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...!





வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!

Tuesday, February 16, 2010

மரணம் சுவைத்த நண்பன்


வீழ்ந்து கிடந்த நண்பனைப் பார்த்து
வீரிட்டு அழ முடியவில்லை என்னால்..!
மனம் மகிழ்ச்சியில் இருக்கும்போது
எத்தனைமுறை மிதித்திருக்கிறேன் அவனை..,
மன வேதனையில் இருக்கும்போது
எத்தனைமுறை உதைத்திருக்கிறேன் அவனை..,
துயரத்தில் இருக்கும்போது தோள் கொடுத்தானே..,
துவண்டு விழும்போது தூக்கி நிறுத்தும்
எண்ணங்களை வளர்த்தானே..,
இல்லத்திலேயே இருந்து - என்
இன்ப துன்பங்களைப் பகிர்ந்தானே..!
எத்தனை முறை என்
கண்ணீர்த்துளிகள் அவனை முத்தமிட்டிருக்கும்..,
அத்தனைக்கும் தோள் கொடுத்த அவனுக்கு
எவரும் தோள் கொடுக்காததால்
துவண்டு விழுந்துவிட்டானே..!
துண்டு துண்டாய் பிரிந்துவிட்டானே..!
அவனிடத்தில் வேறொருவன் வரலாம்,
ஆனால்
அவன்போல் வருவானா..?
அவன்..,
அன்று பெய்த கடும் மழையில்
இன்று மாண்டுகிடக்கும்
என் வீடு பின் மதில்சுவர்..!



டிஸ்கி :

2005-ம் வருட மழைக்காலத்தில் எங்கள் வீட்டு back compound சுவர் இடிந்து விழுந்துவிட்டது. நெஜமாவே அது எனக்கு நல்ல ப்ரண்டுங்க...! இடிஞ்சு கிடந்தத பாக்கும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது. அப்போ எழுதின கவிதை(?!) இது...!



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Friday, February 5, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 3

தோழிக்கும் ஒருபடி
மேல் - நீயெனக்கு,
தோழனுக்கும் ஒருபடி
கீழ் - நானுனக்கு..!
தெரிந்தும் சொல்லிக்கொள்கிறோம்
நாமிருவரும் தோழர்கள் என்று...!

-------------------------------------------------------


நீயறியாமல்
நானுனக்குத் தரும்
முத்தங்களனைத்தையும் உன்னிதழ் சேர்க்காமல்,
பிறர் அறியாமல்
திருடிக்கொள்கிறது காற்று...!

-------------------------------------------------------

ன்னைத் தவிர
ஆண்கள் அனைவரும்
தவறானவர்களாகவே தெரிகிறார்கள்
நீ என்னை விட்டுத் தனியே
வெளியில் செல்லும்போது மட்டும்...!

-------------------------------------------------------


வெளிப்படுத்திய அன்புக்கே
விலையில்லாத பொது,
புதைத்து வைத்திருக்கும் அன்பை
புரிந்துகொள்ளவில்லை என்று
வருத்தப்படுவதில்
பொருளேதும் இல்லை ...!

-------------------------------------------------------


தயத்தை துளைக்கும்
வார்த்தைகள் தான்
என்றாலும் ரசிக்க தான் செய்கிறேன்,
உதிர்ந்தவை
அவள் இதழ்களில் இருந்தல்லவா ...!
-------------------------------------------------------
.சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

அசல் : திரை விமர்சனம்


ஜித்....! இவருக்காகவே எழுதப்பட்ட கதை, பின்னப்பட்ட திரைக்கதை, தயாரிக்கப்பட்ட படம்..., அசல்..!

யுத வியாபாரியான அப்பா அஜித்துக்கு லீகல் வாரிசுகள் சம்பத், ராஜீவ் இருவரும். இல்லீகல் வாரிசு இன்னொரு அஜித். நம் தமிழ் சினிமா வழக்கப்படி இதற்குமேல் கதை எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அஜித் நல்லவராக இருக்க, அது பிடிக்காமல் அவர்கள் இருவரும் வெறுக்க, ஒரு சுபயோக தினத்தில் அப்பா அஜித் இறக்க, உயிலில் சொத்துக்கள் அனைத்தும் மகன் அஜித் பெயரில் இருக்க, அவர்களுக்கு நல்லதே செய்தாலும், சொத்துக்காக அஜித்தை போட்டுத்தள்ள இருவரும் முயற்சிக்க, அவரை காப்பாற்றி காதலிக்க இரண்டாவதாய் ஒரு லூசு கதாநாயகி (பாவனா) வர, அவர்களுக்கு மகன் அஜித்தின் சிறுவயது கார்டியன் பிரபு உதவி செய்ய, கடைசியாக வருகிறது க்ளைமாக்ஸ். அதுவும் வழக்கமானது தான். அதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வித்தியாசம், அனைத்து பிரான்சில்..!

ஜித் மிக ஸ்டைலாக இருக்கிறார். அதுவும் அந்த 'சிகர்' அடித்துக்கொண்டு நடக்கும்போதும், சண்டை காட்சிகளின் போதும். தன் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார், கூடவே கதை, திரைக்கதை, வசனமும். ஆனால் பாடல்களில் தான் எப்போதும் நடப்பார், இம்முறை படத்திலும் பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறார். படம் முழுக்க 'கோட்' டிலேயே வருவது நன்றாக இருந்தாலும் சில இடங்களில் அது அவர் உருவத்தை பெரிதாக காட்டுவது மட்டுமின்றி, குளிர் ஜுரம் வந்தவர் போல தோற்றமளிக்கிறது. இன்னும் பில்லா சாயல்போகவில்லை.

மீரா, பாவனா இரு நாயகிகளும் அழகு...! வருகிறார்கள், பேசுகிறார்கள், பாடலில் ஆடுகிறார்கள். அதற்குமேல் நாம் எதிர்பார்க்க முடியாது. 'டொட்டடய்ங்' பாடல் படமாக்கப்பட்ட விதமும், அதில் பாவனாவும் அருமை. பிரபு பத்தி சொல்லனும்னா, என்ன கொடும சார் இது...! சுரேஷ் வரும் ஒவ்வொரு சீனிலும் தானொரு பிரெஞ்ச் போலிஸ் என்பதை மீண்டும் மீண்டும் கூறி, அந்த ஊர் போலீசும் நம்ம ஊர் மாதிரி தானா, வேற வேலை இருக்காதா என்று நம்மை யோசிக்கவைக்கிறார். சம்பத், ராஜீவ் இருவரும் பாவம், கத்துவதை தவிர வேறு வேலை இல்லை இப்படத்தில். இவர்களின் மாமாவாக 'கஜினி' வில்லன், ஒன்னும் எடுபடவில்லை. யூகி சேது, சில இடங்களில் சிரிக்கிறார், பல இடங்களில் கடிக்கிறார். இவருடைய கேரக்டரை விவேக் மட்டும் வடிவேலு பல படங்களில் கிழித்து தொங்கவிட்டுவிட்டதால் இவரை பார்க்கும்போது அவர்களில் ஒருவர் தான் கண்முன் தெரிகின்றனர், குறிப்பாக 'படிக்காதவன்' விவேக்.

பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்தின் எடிட்டர் ஆண்ட்டனி, ஒளிப்பதிவாளர் பிரசாந்த் மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் மூவரும் தான். பிரான்சின் அழகு, சேசிங், சண்டை காட்சிகளின் தரம், வேகம் அனைத்தையும் அருமையாக திரையில் கொண்டுவந்துள்ளனர். இசை (மீண்டும்) பரத்வாஜ். பாடல்கள் சுமார், பின்னணிஓகே.

'மோதி விளையாடு' என்ற மிகப்பெரும் மொக்கை படத்திற்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இயக்கி இருக்கிறார் சரண். ஸ்டைலாகத்தான் வந்திருக்கிறது. ஆனால், முதல் பாதியிலேயே முக்கியமான வில்லனை (கெல்லி) போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் யாரும் சிக்காததால் கத்தியை நம் கழுத்தில் வைத்துவிட்டார். அவ்ளோ பெரிய வில்லனை பொசுக்குன்னு முடிச்சிடீங்களே சார். இரண்டாம் பாதியில் எங்களை மிரட்ட ஆளில்லாமல் போய்விட்டதே. அப்பா அஜித்துக்கு ஒரு பிளாஷ்பேக் போட்டுவிடுவார்களோ என பயமாக இருந்தது, நல்லவேளை இல்லை.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு, ஆக்க்ஷன், ஸ்டைல் அனைத்தும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அப்போதே வந்திருந்தால் கொடுத்த காசிற்கு கொஞ்சம் திருப்தி இருந்திருக்கும்...! நீங்கள் அஜித் ரசிகரை இருந்தால், கட்டாயம் பார்க்கலாம். இல்லையென்றால் அஜீத்துக்காக ஒருமுறை பார்க்கலாம்...!



டிஸ்கி : யாருப்பா சொன்னது, 'தல'க்கு படத்துல பில்ட்-அப்பே கிடையாதுன்னு...? போங்கப்பா, பொய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க...!




சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Tuesday, February 2, 2010

ஒகேனக்கல் : படங்கள்

சென்ற பதிவில் ஒகேனக்கல் அனுபவம் பற்றி சொல்லியிருந்தேன். அங்கே படங்களை இணைக்காமல் விட்டதால், படங்கள் மற்றும் காணோளிக்காக இந்தப் பதிவு. ஒகேனக்கலின் அழகைக்கண்டு மகிழுங்கள். குறிப்பாக சிறுவனின் சாகசம்..!


தொங்கு பாலத்தின் இடது பக்கம்


தொங்கு பாலத்தின் வலது பக்கம்


பாலம் கடந்து சினி பால்ஸ் செல்லும் வழி


ழியில் ஒரு சிறிய அருவி


தொங்குபாலத்தின் வலதுபுறம் உள்ள அருவி. பின்னால் தொங்குபாலம்




View Point மேலிருந்து, தமிழக பகுதி


ரு பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் கலக்குமிடம்


ரிசல் பயணம். ஆற்றின் இடப்பக்கம் தமிழ்நாடு, வலப்பக்கம் கர்நாடகா. கடைசியாக பரிசில்கள் நிற்குமிடம் மணல்மேடு


நாம் பயணம் செய்யும் பரிசல்


ரிசலுடன் ஒரு படகோட்டி


திரும்பிச் செல்லும்போது என்னை வழியனுப்பிவைத்த தேவதை




கேனக்கல் காவிரி ஆற்றின் காணொளி



சிறுவன் ஆற்றில் குதிக்கும் காணொளி


ற்றொரு சிறுவனின் சாகசம்



நன்றி : என்னுடைய Sony Ericsson T715 கைப்பேசிக்கு.



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Monday, February 1, 2010

ஒகேனக்கல் : ஒரு பயணம்


சென்ற வருடம் டிசம்பர் மாத இறுதியில் எனது நண்பர்களுடன் ஒகேனக்கல் சென்றிருந்தேன். நான் ஒகேனக்கல் செல்வது இதுவே முதல் முறை என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனேயே சென்றிருந்தேன். அதுமட்டுமின்றி பல நாட்கள் கழித்து என் கல்லூரி நண்பர்களுடனான இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது மட்டுமன்றி என் கல்லூரி நாட்களை கண்முன் கொண்டுவந்தது. இதைப்பற்றி வேறு பதிவில் கூறுகிறேன்.


ப்போது ஒக்கேனக்கல் பற்றி,



  • கேனக்கல் சென்றடையும் வழி நன்றாக இருக்கிறது.

  • ரோட்டோரத்திலோ, ஹோட்டல் வாசலிலோ நாம் நிறுத்தப் போகும் காருக்கு, ஊருக்குள் நுழைந்தவுடனே பார்க்கிங் சார்ஜ் 20-25 வாங்கிக்கொள்கின்றனர்.

  • கார் கதவை திறந்து காலை கீழே வைக்கும்முன்பே நம்ம சுற்றி 7-8 பேர் சூழ்ந்துவிடுவர். சாப்பாடு, ஹோட்டல், ஆயில் மசாஜ் மற்றும் போட்டிங் இவற்றிற்கு விலை பெசத்தொடங்கிவிடுவர்.

  • சுமாரான ஹோட்டல்கள் தான் இருக்கின்றன. முன்பே முயற்சித்தால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஹோட்டலில் இடம் கிடைக்கலாம்.

  • ல்ல சாப்பாடு கொஞ்சம் கஷ்டம் தான். தமிழ்நாடு ஹோட்டலில் ஓரளவு பரவாயில்லை. ஆனால் முன்பே ஆர்டர் சொல்லிவிடவேண்டும்.

  • நாம் எங்கு சென்றாலும் கூடவே ஒருவர் அல்லது இருவர் வந்து போட்டிங்காக வந்து நச்சரிப்பார். (அரை நாள் முழுதும் எங்கள் கூடவே ஒருவர் வந்து பிராண்டினார். 1200 இல் ஆரம்பித்து 500 இல் முடித்தோம், நாங்கள் மொத்தம் 6 பேர்)

  • 5 ரூபாய் கட்டணம் கொடுத்து தொங்கு பாலம் வழியே சென்றால் சின்ன சின்னதாக நிறைய பால்ஸ் பார்க்கலாம்.

  • 'சினி பால்ஸ்' என்ற இடத்தில் மட்டுமே குளிக்க முடியும். ஆயில் மசாஜ் என்றால் இன்னும் அருமை. ஆனால் நம்மை விட மசாஜ் செய்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

  • தை தாண்டி சென்றால் ஒரு view point. அதற்கு தனி கட்டணம், 2 ரூபாய். ஒகேனக்கலின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.

  • பிறகு நாம் விரும்பினால் பரிசில் பயணம். ('முதல் மரியாதை' ராதா போல் யாரும் இருக்க மாட்டார்கள்..!). கொடுக்கும் காசிற்கு பரவாயில்லை.

  • பாறை உச்சியிலிருந்து சிறுவர்கள் தண்ணீருக்குள் குதித்து நம்மிடம் 5-10௦ வாங்கிக்கொள்வார்கள். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்..! (தனியே அவர்களுடன் பேசிய பிறகுதான் தெரிந்தது அவர்கள் கஷ்டம்..!)

  • ற்றிலேயே, பிஸ்கட், தண்ணீர் பாட்டில், சிப்ஸ் என அனைத்தையும் சுமந்துகொண்டு, சில பரிசில்கள் இங்குமங்கும் சென்றுகொண்டிருக்கும். வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்.

  • 'ந்தன கடத்தல்' வீரப்பன் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம். அவர் சுற்றித்திரிந்த பகுதி இதுதான் என்பதால்.

  • றுதியாக 'மணல் தீவு' பகுதியில் இறக்கிவிடுவார்கள். கடைகள் மட்டுமே அங்கு உண்டு, வறுத்த மீன்களோடு சேர்த்து சாதமும் கிடைக்கும்.

  • ற்றின் இந்த பக்கம் தமிழ்நாடு, அந்தப்பக்கம் கர்நாடகா மாநிலம். பிரச்சனைக்குரிய பகுதியும் இதுதான்...!

  • ங்கிருந்து கிளம்பி மீண்டும் நம்மை ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிட்டுவிடுவார்கள்.

  • பிறகு நாம் வந்த வழியிலேயே ஹோட்டலுக்கு நடையை கட்டவேண்டியதுதான்...!


துவே பெரிய பதிவாகிவிட்டதால், ஒகேனக்கல் படங்கள் அடுத்த பதிவில்.


ண்பர்களுடன் ஒருநாள் கொண்டாட்டமென்றால் அதற்கேற்ற இடம்...!



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!


Related Posts with Thumbnails