Friday, February 5, 2010

அசல் : திரை விமர்சனம்


ஜித்....! இவருக்காகவே எழுதப்பட்ட கதை, பின்னப்பட்ட திரைக்கதை, தயாரிக்கப்பட்ட படம்..., அசல்..!

யுத வியாபாரியான அப்பா அஜித்துக்கு லீகல் வாரிசுகள் சம்பத், ராஜீவ் இருவரும். இல்லீகல் வாரிசு இன்னொரு அஜித். நம் தமிழ் சினிமா வழக்கப்படி இதற்குமேல் கதை எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அஜித் நல்லவராக இருக்க, அது பிடிக்காமல் அவர்கள் இருவரும் வெறுக்க, ஒரு சுபயோக தினத்தில் அப்பா அஜித் இறக்க, உயிலில் சொத்துக்கள் அனைத்தும் மகன் அஜித் பெயரில் இருக்க, அவர்களுக்கு நல்லதே செய்தாலும், சொத்துக்காக அஜித்தை போட்டுத்தள்ள இருவரும் முயற்சிக்க, அவரை காப்பாற்றி காதலிக்க இரண்டாவதாய் ஒரு லூசு கதாநாயகி (பாவனா) வர, அவர்களுக்கு மகன் அஜித்தின் சிறுவயது கார்டியன் பிரபு உதவி செய்ய, கடைசியாக வருகிறது க்ளைமாக்ஸ். அதுவும் வழக்கமானது தான். அதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வித்தியாசம், அனைத்து பிரான்சில்..!

ஜித் மிக ஸ்டைலாக இருக்கிறார். அதுவும் அந்த 'சிகர்' அடித்துக்கொண்டு நடக்கும்போதும், சண்டை காட்சிகளின் போதும். தன் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார், கூடவே கதை, திரைக்கதை, வசனமும். ஆனால் பாடல்களில் தான் எப்போதும் நடப்பார், இம்முறை படத்திலும் பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறார். படம் முழுக்க 'கோட்' டிலேயே வருவது நன்றாக இருந்தாலும் சில இடங்களில் அது அவர் உருவத்தை பெரிதாக காட்டுவது மட்டுமின்றி, குளிர் ஜுரம் வந்தவர் போல தோற்றமளிக்கிறது. இன்னும் பில்லா சாயல்போகவில்லை.

மீரா, பாவனா இரு நாயகிகளும் அழகு...! வருகிறார்கள், பேசுகிறார்கள், பாடலில் ஆடுகிறார்கள். அதற்குமேல் நாம் எதிர்பார்க்க முடியாது. 'டொட்டடய்ங்' பாடல் படமாக்கப்பட்ட விதமும், அதில் பாவனாவும் அருமை. பிரபு பத்தி சொல்லனும்னா, என்ன கொடும சார் இது...! சுரேஷ் வரும் ஒவ்வொரு சீனிலும் தானொரு பிரெஞ்ச் போலிஸ் என்பதை மீண்டும் மீண்டும் கூறி, அந்த ஊர் போலீசும் நம்ம ஊர் மாதிரி தானா, வேற வேலை இருக்காதா என்று நம்மை யோசிக்கவைக்கிறார். சம்பத், ராஜீவ் இருவரும் பாவம், கத்துவதை தவிர வேறு வேலை இல்லை இப்படத்தில். இவர்களின் மாமாவாக 'கஜினி' வில்லன், ஒன்னும் எடுபடவில்லை. யூகி சேது, சில இடங்களில் சிரிக்கிறார், பல இடங்களில் கடிக்கிறார். இவருடைய கேரக்டரை விவேக் மட்டும் வடிவேலு பல படங்களில் கிழித்து தொங்கவிட்டுவிட்டதால் இவரை பார்க்கும்போது அவர்களில் ஒருவர் தான் கண்முன் தெரிகின்றனர், குறிப்பாக 'படிக்காதவன்' விவேக்.

பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்தின் எடிட்டர் ஆண்ட்டனி, ஒளிப்பதிவாளர் பிரசாந்த் மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் மூவரும் தான். பிரான்சின் அழகு, சேசிங், சண்டை காட்சிகளின் தரம், வேகம் அனைத்தையும் அருமையாக திரையில் கொண்டுவந்துள்ளனர். இசை (மீண்டும்) பரத்வாஜ். பாடல்கள் சுமார், பின்னணிஓகே.

'மோதி விளையாடு' என்ற மிகப்பெரும் மொக்கை படத்திற்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இயக்கி இருக்கிறார் சரண். ஸ்டைலாகத்தான் வந்திருக்கிறது. ஆனால், முதல் பாதியிலேயே முக்கியமான வில்லனை (கெல்லி) போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் யாரும் சிக்காததால் கத்தியை நம் கழுத்தில் வைத்துவிட்டார். அவ்ளோ பெரிய வில்லனை பொசுக்குன்னு முடிச்சிடீங்களே சார். இரண்டாம் பாதியில் எங்களை மிரட்ட ஆளில்லாமல் போய்விட்டதே. அப்பா அஜித்துக்கு ஒரு பிளாஷ்பேக் போட்டுவிடுவார்களோ என பயமாக இருந்தது, நல்லவேளை இல்லை.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு, ஆக்க்ஷன், ஸ்டைல் அனைத்தும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அப்போதே வந்திருந்தால் கொடுத்த காசிற்கு கொஞ்சம் திருப்தி இருந்திருக்கும்...! நீங்கள் அஜித் ரசிகரை இருந்தால், கட்டாயம் பார்க்கலாம். இல்லையென்றால் அஜீத்துக்காக ஒருமுறை பார்க்கலாம்...!டிஸ்கி : யாருப்பா சொன்னது, 'தல'க்கு படத்துல பில்ட்-அப்பே கிடையாதுன்னு...? போங்கப்பா, பொய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க...!
சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

4 comments:

thenammailakshmanan said...

//வில்லனை (கெல்லி) போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் யாரும் சிக்காததால் கத்தியை நம் கழுத்தில் வைத்துவிட்டார்.//

superb arivu GV
hahaha i like it ....

நாடோடி said...

நல்ல பார்வை....வாழ்த்துக்கள்.

பேநா மூடி said...

ஹா ஹா

அறிவு GV said...

நன்றி தேனம்மை அக்கா, நாடோடி, பேநா மூடி...!

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails