Tuesday, March 2, 2010

பக்கோடா பாக்கெட் - 1


ணக்கங்க...! யார பாத்தாலும் வாரா வாரம் அவங்கள பாதிச்ச விஷயங்கள ஒரு பதிவா போட்டுடுறாங்க. தலைப்ப கூட கொத்துபரோட்டா, மசால் தோசை, துவையல், கெட்டி சட்னின்னு சாப்பிடுற ஐட்டமா வெச்சுகிறாங்க. அட நம்ம தானை தலைவர் ஹாலிவுட் பாலா கூட 'பிட்ஸ் அண்ட் பைட்ஸ்'னு ஆரம்பிச்சுட்டார். (ஒழுங்கா இருந்த அவரையும் யாரோ கெடுத்துப்புட்டாங்க, பாவி பசங்க. ஹ்ம்ம், நல்லாயிருங்க..!). அதனால நானும் 'பக்கோடா பாக்கெட்' ங்கற பேர்ல உங்ககிட்ட மொக்க போட முடிவு பண்ணியிருக்கேன். அதை படிச்சுட்டு பீல் பண்ணுவீங்களோ.., இல்ல காரி துப்புவீங்களோ, அது உங்க இஷ்டம்...!

2010 நல்லபடியா ஆரம்பிச்சுதுங்க. ஜனவரி மாசம் ரொம்ப நல்லா போச்சு. புது வருஷம், புது ப்ராஜெக்ட், புது மொபைல், 'பொங்கல்' சாகசங்கள் அப்டி இப்டின்னு நானும் சந்தோஷமா இருந்தேன். இது புடிக்காம யார் செய்வினை வெச்சாங்களோ தெரியல, திடீர்னு நியூட்டனோட மூன்றாம் விதி வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு.

கொறஞ்சது ரெண்டு நாளைக்கு ஒரு படமாவது என் சிஸ்டம்ல பார்த்திடுவேன். (அப்ப தான் பாலா, கருந்தேள் எல்லாரையும் ப்பாலோ பண்ண முடியும்). ஆபீஸ கட் அடிச்சிட்டேல்லாம் வந்து படம் படம் பார்த்திருக்கேன்னா பாத்துக்கோங்க. கொஞ்ச நாளா என் CPU பக்கத்துல ஏதாவது சாப்பிடற பொருள் கிடந்துகிட்டே இருந்துது. நானும் என் ரூம்மேட்ஸ திட்டிட்டு விட்டுட்டேன். அப்பறம் அந்த CPU'வ தொறந்து பாத்தா, உள்ள ஒரு எலி..! அப்பப்போ வந்து போகும்னு நெனச்சு விட்டிருந்தா, அது குடும்பம் நடத்தி குட்டியே போட்டிருந்துச்சு. வந்த கோவத்துல அத குடும்பத்தோட அடிச்சி காலி பண்ணிட்டேன். அது பத்தினி எலி போல, அந்த சாபம், ஒரு வாரம் கழிச்சு என் ஹார்ட் டிஸ்க் காலி. பேக்கப் எதுவுமே இல்ல. இத்தன வருஷ போட்டோஸ், மூவீஸ், டாகுமென்ட்ஸ், சாப்ட்வேர்ஸ் எல்லாம் போச்சு. படம் பாக்க முடியாம, பாட்டு கேக்க முடியாம, சாட் பண்ண முடியாம, ரூமுக்கு போனா கடுப்பா வருது.

சின் கல்யாணத்துக்காக ரெண்டு வாரம் முன்னாடி ஊருக்கு போயிருந்தேன். அவருக்கடுத்து கல்யாணத்துக்கு ரெடியா இருக்க மைனர் நான் தான். சீக்கிரமா அதுக்குண்டான வேலைய பாத்திடலாம்னு சந்தோஷமா 'அன்பில் அவன் சேர்த்த இதை'னு பாட்டு பாடிக்கிட்டே, சார்ஜ் போட்டு வெச்சிருந்த என் புது Sony Ericsson மொபைல எடுத்தேன். 'டமால்'னு கீழ விழுததுல டிஸ்ப்ளே காலி.. !அந்த குருட்டு போன வெச்சு ஒரு வாரம் ஓட்டிட்டு, போன வாரம் தான் சர்வீசுக்கு கொடுத்திருக்கேன். அவன் எவ்ளோ தீட்ட போறான்னு தெரியல...!

ரொம்ப நாள் கழிச்சு நம்மள நம்பி(விதி வலியது) ஒரு ப்ரொஜெக்ட்ல போட்டாங்க. அதுலயாவது நம்ம ஒழுங்கா வொர்க் பண்ணி, நானும் 'கில்லி' தான்னு எல்லாருக்கும் நிரூபிக்க கொஞ்சம் 'கஷ்டப்பட்டு(!?)' வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா அந்த அமெரிக்காக்காரன் (client தான்) இத எப்டி கண்டுபுடிச்சானோ தெரியல, திடீர்னு டெமோ குடுக்க சொல்லிட்டான். நானும் என் டீமோட உக்காந்து ஒருவழியா அத ரெடி பண்ணி அவனுக்கு டெமோ குடுத்தோம். அந்த மாங்கொட்டை தலையனுக்கு என்ன புரிஞ்சுதோ, "இனிமே இத நாங்களே பாத்துக்குறோம், உங்க அறிவுக்கும் தெறமைக்கும் எங்க கம்பெனிலையே ப்ராஜெக்ட் இல்ல"னு சொல்லி கதவ சாத்திபுட்டான். 'விடுங்க பாஸ், இந்த அமெரிக்காக்காரனுங்களே இப்படி தான், சீக்கிரமா வேற ஒருத்தன் சிக்குவான்னு' அனுபவஸ்தர்கள் சொன்னதுனால திரும்பவும் வேற ப்ரொஜெக்ட்ல நம்மள போடுவாங்கன்னு நம்பி, 'கதவ திறந்து வெச்சுட்டு காத்திருக்கேன்.., காத்து கூட வரமாட்டீங்குது'..!

'பொங்கல்' சாகசம் பத்தி தனியாவே ஒரு பதிவு போடலாம். அவ்ளோ பெரிய பல்ப் வாங்கிட்டேன். அந்த பதிவு விரைவில்.



அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

7 comments:

Prasanna said...

//இத்தன வருஷ போட்டோஸ், மூவீஸ், டாகுமென்ட்ஸ், சாப்ட்வேர்ஸ் எல்லாம் போச்சு//

உங்கள் வலி எனக்கு புரிகிறது.. Me formatted bcz of a virus..

சிவாஜி சங்கர் said...

hmm..

Unknown said...

வாழ்க்கைல பக்அப் வேனும்பாருங்க ஒரு பொண்ட்டடி இல்லாம எல்லாம் ரெண்டு இருக்கு நீங்க உங்க மசினுக்கு இல்லாம

பாலா said...

உங்க நிலைமை என்னைவிட மோசம் போல இருக்கே?? :) :)

சீக்கிரம்.. உங்க வாழ்க்கையில் ரஞ்சிதா வர.. நித்யாவை பிராத்திப்போம்..!! :) :)

நாடோடி said...

விதி ரெம்ப‌ விளையாடிட்டு போல..

Prathi said...

ச்ச என்ன கொடும சார் இது.....

வரதராஜலு .பூ said...

நல்லா இருக்குங்க. வாரம் ஒருமுறையாவது பக்கோடா போட்டு எங்க (பதிவு) பசிய ஆத்துங்க.
:)

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails