Tuesday, March 2, 2010
கோமாளி
மற்றவரை மகிழ்விக்கும்
கோமாளி நான்...!
என் துயரம் கேட்கும் செவிகள் இல்லை,
கண்ணீர் துடைக்கும் கரமும் இங்கில்லை,
சாய்ந்து அழ தோளும் இல்லை,
சேர்ந்து நடக்கும் கால்களும் இங்கில்லை,
மீண்டும் வேகிறேன் தனிமைத் தீயில்...!
பசி தீர்க்க பணமும்,
கவலை தீர்க்க கவிதைகளும்
காதல் தீர்க்க கனவுகளும்,
மட்டுமே என்வசம்..!
அணைக்குள் அடைந்திருக்கும்
ஆற்று வெள்ளமென
விழித்திரைக்குள் தடுத்துவிட்ட
என் கண்ணீர்த் துளிகளோடு,
எல்லோரும் ரசிக்கும் ஒரு புன்னகையை
முகத்தில் மாட்டிக்கொண்டு,
மற்றவரை மட்டும் மகிழ்விக்கும்
கோமாளி நான்...!
என்னை நானே ஏமாற்றிக்கொள்ளும்
ஏமாளி நான்...!
அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நெசமாவே ரிவிட்டுதான் வைக்கணும்.
அங்க வந்து.. வாங்க.. வாங்க.. வரலையேன்னு கம்பெள்ய்ண்ட் பண்ணிட்டு... இங்க கவிதை எழுதி வச்சா??? :)
அணைக்குள் அடைத்திருக்கும்// :)
//பசி தீர்க்க பணமும்,
கவலை தீர்க்க கவிதைகளும்
காதல் தீர்க்க கனவுகளும்,
மட்டுமே என்வசம்..!//
ஓன்னு அழணும் போல இருக்கு அட போப்பா...
சூப்பர்...
@ பாலா : சாரி தல, உங்களுக்கு கவிதை புடிக்காதுன்னு தெரியும். ஆனா உங்க பேர நம்ம ஏரியால பாக்கும்போது ஒரே பெருமை/சந்தோஷம். அதான் அப்டி சொன்னேன் :)
@ சிவாஜி : வருகைக்கு நன்றி.
@ வசந்த் : ரொம்ப நன்றி வசந்த்.
///அழணும் போல இருக்கு அட போப்பா/// அவ்ளோ மொக்கையாவா இருக்கு...? :)
நல்லா இருக்கு..தொடரட்டும்..
//மற்றவரை மட்டும் மகிழ்விக்கும்
கோமாளி நான்...!
என்னை நானே ஏமாற்றிக்கொள்ளும்
ஏமாளி நான்...!//
அட உண்மைதான் அறிவு ஜீவி இது எல்லோருக்கும் பொருந்தும்
என் துயரம் கேட்கும் செவிகள் இல்லை,
கண்ணீர் துடைக்கும் கரமும் இங்கில்லை,
சாய்ந்து அழ தோளும் இல்லை,
சேர்ந்து நடக்கும் கால்களும் இங்கில்லை,
மீண்டும் வேகிறேன் தனிமைத் தீயில்...!
ரொம்ப ரொம்ப பிடித்த வரிகள்.
மொத்தமாய்ச் சொன்னால் கவிதையே சுப்பர்.
தொடருங்கள்.........
!!என்ன நம்ம பக்கத்துக்கு காண கிடைகேல்ல...........!!
மத்தவங்களையும் சந்தோஷ படுத்தி தானும் சந்தோஷ படறது தான் வுலகதுல பெரிய விஷயம். keep it up:-)
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!