எனக்கு ப்ராஜெக்ட் போன கதைய போன பதிவுல படிச்சிருப்பீங்க. 2 வாரம் முன்னாடி ஒருநாள் RMG'லேர்ந்து கால் வந்துது. ஆஹா, நமக்கு ஒரு அடிமை சிக்கப்போறான் போல இருக்கேன்னு ஆவலோட போய் அவர பாத்தா, 'நம்ம எம்ப்ளாயீ ஒருத்தருக்கு திடீர்னு ஒடம்பு சரியில்லாததால ICU'ல சேர்த்திருக்கோம், நாளைக்கு நீங்க ப்ரீயா இருந்தா கொஞ்சம் போய் பாத்துக்க முடியுமா'னு கேட்டார். அதாவது, 'நீ வெட்டியா தான இருக்க, இங்க வந்து தேய்க்க வேண்டிய சீட்ட ஹாஸ்பிட்டல்ல போய் தேய்'னு சொன்னார். இந்த மாதிரி சமூக சேவையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு அவர்கிட்ட சொல்லி சமாளிச்சுட்டு, மறுநாள் அந்த ஹாஸ்பிட்டலுக்கு போனேன். அது ஒரு மொக்கை இடம். பில்டிங் தான் பெருசா இருக்கே தவிர, ஒரு நர்ஸ் கூட நல்லா இல்ல. சத்திய சோதனைடா ஜீவின்னு தலைல அடிச்சுகிட்டே வெளிய வந்து வேடிக்கை பாக்கும்போது என் ஆபீஸ் நண்பன் போன் பண்ணினான்.
சும்மா இருந்த சிங்கத்த சொரிஞ்சுவிட்ட கதையா, 'வாடா மச்சான், இந்த வீக்கென்ட் ஒரு இண்டர்வியு போலாம், பெரிய கம்பெனி, நல்ல பேக்கேஜ் கேக்கலாம்'னு கூப்பிட்டான். A,B,C,D'ல எட்டாவது எழுத்து என்னன்னு கேட்டாலே நான் அஞ்சு நிமிஷம் யோசிப்பேன். நமக்கு எண்டா இந்த வம்புனு யோசிக்கும்போது, அவனுக்கு போன் பண்ணின அதே கன்சல்டன்சிலேர்ந்து ஒரு புள்ள போன் பண்ணி 'நீங்க கண்டிப்பா சண்டே வந்து இன்டர்வியு அட்டென்ட் பண்ணனும், இல்லன்னா நான் கோவிச்சுப்பென்'னு ஆசையா கேட்டதினால என் கல் நெஞ்சம் கரைஞ்சுடுச்சு. ஊருக்கு போறதா இருந்த ப்ளான மாத்தி, இண்டர்வியு போக முடிவு பண்ணி, ப்ரிபேர் பண்ண ஆரம்பிச்சேன். கஜினி சூர்யா மாதிரி, படிக்கிறதெல்லாம் பத்து நிமிஷத்துல மறந்து போக, இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, நேரடியா களத்துல சந்திச்சுக்கலாம்னு விட்டுட்டேன். அந்த ஞாயித்துக் கிழமையும் வந்துச்சு. ஏதாவது அதிசயம் நடக்காதான்னு நானும் ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளை வேண்டிகிட்டு நண்பனோட அந்த ஆபீசுக்கு போனேன்.
ஆபீஸ் சுமாரா தான் இருந்துது. எங்க ஆபீஸ் பரவாயில்ல. அங்க நமக்கு முன்னாடியே ஆறு, ஏழு ஜீவிங்க வந்திருந்தாங்க. எங்கள பாத்த உடனே, 'உங்க பிகர நான் உஷார் பண்ணிக்கிட்டு போயிட்டேன்னா உங்க மூஞ்சி எப்டி இருக்கும்?', அந்த மாதிரி வெச்சிகிட்டாங்க. இண்டர்வியு தொடங்குச்சு. 'வெளக்கி வெச்ச அலுமினிய குண்டா' மாதிரி தலையோட ஒருத்தன் இண்டர்வியு பண்ணிக்கிட்டு இருந்தான். அத பாத்து நாங்க காமெடி பண்ண, அதை அவன் பாத்துட்டான். அப்பவே எழுந்து போய்டலாம்னு சொன்னேன், என் நண்பன் கேக்கல. நல்ல வேளையா எங்களுக்கு வேற ஒரு தாய்க்குலம் தான் வந்தாங்க. மொதல்ல என் நண்பன் போனான். நானும் அங்கே இருந்த லைட்டு, சேர், போஸ்டர் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆர்வமா போன நண்பன் 20 நிமிஷம் கழிச்சு காத்துபோன பலூன் மாதிரி தலைய சொறிஞ்சுகிட்டு வரும்போதே என்னோட முடிவும் சேந்து தெரிஞ்சுது. இருந்தாலும், கேள்வி கேக்குறவன் மனுஷன், பதில் தெரிஞ்சவன் வீரன், தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவன் மாவீரன்.., நீ மாவீரன்டா அறிவு GV'னு பெரியவங்க என்னைப்பத்தி சொல்லியிருந்ததால தைரியமா போனேன்.
இந்த அறிவு GV க்கு தற்பெருமை பிடிக்காதுன்னு தெரியாம அவங்க "Tell Me About Yourself"னு கேட்டுட்டாங்க. அதுக்கு நான் சொன்ன பதில வெச்சே அந்தம்மா முடிவு பண்ணிட்டாங்க, இந்த Blog பேர் மாதிரிதான் நானும்னு. அப்பறம் ஒரு கேள்வி கேட்டாங்க. அப்டின்னா என்னான்னு பதிலுக்கு நான் கேக்க, அதே கேள்விய வேற மாதிரி கேட்டாங்க. 'ஓ, அதுவா..!'னு கேட்டு நானும் ஒரு பதில் சொன்னேன். அத கேட்ட உடனே, பாக்கியராஜ் படத்துல ஒரு ஹிந்தி வாத்தியார் வருவாரே, 'ஏக் காவ் மே, ஏக் கிசான் ரஹா தாத்தா'னு சொல்லிக்கிட்டு, அவர மாதிரி அவங்க மூஞ்சி மாறிடுச்சு. திரும்பவும் அதே கேள்விய வேற மாதிரி மாத்தி கேக்க, நானும் நமக்கு தெரிஞ்ச மாதிரியே, 'is, was, that' மாத்திபோட்டு முன்னாடி சொன்ன அதே பதிலை சொன்னேன். அதை கேட்டுட்டு அவங்க கைல வெச்சிருந்த என் ரெஸ்யூம கசக்க ஆரம்பிச்சாங்க. சரி இதுக்கு மேல இங்க இருந்தா, அவங்க கொலை கேஸ்ல உள்ள போக வேண்டியிருக்கும்'னு நெனச்சு 'Thanks for the wonderful opportunity'னு சொல்லிட்டு அங்கேயிருந்து கம்பி நீட்டிட்டேன். வெளிய வந்தபிறகுதான் தெரிஞ்சுது என் நண்பனுக்கும் அதே கேள்வி தான்னு. அவன் என்ன பதில் சொன்னானோ...!!!
டிஸ்கி : இதுலேர்ந்து நம்ம கத்துக்க வேண்டியது என்னன்னா.., கேள்வி கேக்குறது ஈசி. ஆனா, அதுக்கு நம்ம சொல்ற பதில கேக்குறது தான் ரொம்ப கஷ்டம்...!
அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

9 comments:
நல்ல இருக்கு அறிவு ஜீவி.. இயல்பான நடையில் கமெடி கலந்து..
அருமை அறிவு ஜீவி நிங்க மாவீரன்னு புரிஞ்சுகிட்டேன்
ஆனா.. அது என்னக் கேள்வின்னு சொல்லலையே ராசா??
போட்டாச்சு..ஓட்டு போட்டாச்சு..
சரி.. அப்படி என்னதான் கேள்வி கேட்டாங்க?..
நன்றி நாடோடி..!
...........................
இப்பவாவது புரிஞ்சுதே தேனம்மை. நன்றி.
...................................
தல, ப்ளீஸ் அத மட்டும் கேக்காதீங்க. இன்னும் அதுக்கு பதில் தெரியாது. :-)
............................
நன்றி பட்டாபட்டி. அத சொன்னா, நம்ம வெளியூரு சங்கத்துல வெச்சு அவமானபடுத்திடுவீங்களே. பதில கத்துகிட்டு அப்புறம் அந்த கேள்விய சொல்றேன்.
நெஜமாவே நீங்க மாவீரன்தாங்க.
// 'உங்க பிகர நான் உஷார் பண்ணிக்கிட்டு போயிட்டேன்னா உங்க மூஞ்சி எப்டி இருக்கும்?', அந்த மாதிரி வெச்சிகிட்டாங்க. இண்டர்வியு தொடங்குச்சு. 'வெளக்கி வெச்ச அலுமினிய குண்டா' மாதிரி தலையோட ஒருத்தன் இண்டர்வியு பண்ணிக்கிட்டு இருந்தான்.//
hahahahhahaa
naan paditathil rasithadhu ungala parattun pola irundhadhu ....
@ வரதராஜுலு : மெய்யாலுமே சொல்றீங்களா...! இன்னொருதடவ சத்தமா சொல்லுங்க. இங்க நெறைய பேர் ஒத்துக்க மாட்டீங்குறாங்க..! :) நன்றி, அடிக்கடி வாங்க..!
@ சச்சனா : ஹையா, உங்கள சிரிக்க வெச்சுட்டேன். :) திரும்ப வாங்க..!
@ பாபு : எதோ, நம்ம கஷ்டத்த நாலுபேர் கிட்ட சொன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்குமேன்னு சொன்னேன். ரொம்ப நன்றி பாபு.
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!