
உள்ளிழுத்து மீண்டும்
வெளித்தள்ளுவதில்
கடலலையை மிஞ்சுகிறது
என் கம்பெனி..!
திசை தெரியாமல்
சுற்றித்திரியும் காற்றில்,
உதிர்ந்துவிட்ட ஒரு
பறவையின் சிறகாய்..,
கண்ணாமூச்சி விளையாட்டில்
எப்போதும் தொடப்படும்
சிறுவனாய்..,
மழை வரும் என்று நம்பி
வெடித்த நிலத்தில் நின்று
வானம் பார்க்கும்
விவசாயியாய்..,
இலக்கில்லா மைதானத்தில்,
அங்கும் இங்குமாக
அனைவராலும் உதைபடும்
பந்தாய்..,
தன் கைக்கு வரும்போது
ஐஸ்கிரீம் உருகிவிட,
கரத்திலிருக்கும் குச்சியை வெறிக்கும்
குழந்தையாய்..,
- நான் இங்கே துடிக்க..!
பார்ப்போருக்கு நல்ல கேளிக்கை தான்,
நடிகன் வீட்டு
நாய்க்குட்டி அல்லவா அவர்கள்..!
வெளியிலிருந்து வீசப்படும்
விமர்சனங்கள் மட்டுமே
அவர்களுடையது..!
அவையனைத்தையும்
புன்னகையுடன் ஏற்று,
பனிவிலக
பகலவனுக்காக காத்திருக்கும்
எனக்குமட்டும் - ஏன்
இருளே நீண்டுகொண்டு போகிறது...?
டிஸ்கி : ஆபீசில் என் தற்போதைய ப்ராஜெக்ட்(உம்), ஆரம்பிக்கும்முன்பே மூடப்பட்டுவிட்டது. அதன் வெளிப்பாடே இந்த கவிதை.
அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!
5 comments:
//ஆரம்பிக்கும்முன்பே மூடப்பட்டுவிட்டது. அதன் வெளிப்பாடே இந்த கவிதை///
என்ன கொடுமை சார் இது... இதுக்கும் கவிதையா?... ம்ம்ம்ம்ம்
Aapu vachiangala?
But unga nearma enakku romba pidichirukku..
விடு மச்சி..வா சரக்கடிக்க போலாம்..!!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
காதல் ரசம் அருமை.
அடுத்த கவிதை எப்போ ?
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!