காற்றில் மிதக்கும் என் காதல்
உன் கண்கள் இன்னும் திறக்காமல்
அதற்கொரு வழி சொல்லடி
இதயத்தை திறந்து வையடி
அதற்கொரு வழி சொல்லடி
உன் இதயத்தை திறந்து வையடி...!
நேசிக்கும் மனமொன்று தவிக்குது இங்கே
உனை சுவாசிக்க தானே துடிக்குது அன்பே
நேசிக்கும் மனமொன்று தவிக்குது இங்கே
உனை சுவாசிக்க தானே துடிக்குது அன்பே
நான்காண்டு காலம் நடந்திடும் நாடகம்
நாளொன்று பார்த்து முடித்திடு நீயே
உன் கையில் நான்
என் கையில் நீ
வரும் நாள் வருமோ விடை நீயே சொல்லடி...!
(காற்றில் மிதக்கும்...)
பார்வைகள் இடம் மாற பாதைகள் வேண்டுமா
வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா
பார்வைகள் இடம் மாற பாதைகள் வேண்டுமா
வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா
இதழ்களை நீ குவித்தால் குழல் நூறு பாடுமே
எரிமலை கூட அன்று என் தாகம் தீர்க்குமே
ஒரு கேள்வி உன்னிடம்
உனை தருவாயா என்னிடம்
தந்தால் தருவேன் என் உயிரையே உன்னிடம்...!
காதல் சிறிதும் குறையாமல்
விழிகள் ஒருநொடி இமைக்காமல்
உன் முகமே தேடுதடி
என்னுயிர் முழுதுமே நீயடி
அதற்கொரு வழி சொல்லடி
உன் இதயத்தை திறந்து வையடி...!
டிஸ்கி :
சென்ற வருடம் நான் 'ஈஷா யோகா' வகுப்பிற்கு சென்றிருந்தேன். அங்கே பயிற்சிகள் ஆரம்பிக்கும் முன் மனதை ஒருநிலைப்படுத்த சில நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டியிருக்கும். அப்போது ஒரு இசை ஒளிபரப்பப்படும். அவ்வகுப்பிற்கு நீங்கள் சென்றிருந்தால் கட்டாயம் இதன் அருமை தெரிந்திருக்கும். என்னை மிகவும் கவர்ந்துவிட்ட அந்த அருமையான இசையை வரிகளாக்க முயற்சித்து நான் எழுதிய பாடல் இது.
அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!
6 comments:
இது புனைவு-கவிதை என்ற கட்டுமானத்தில், பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது என்று... நாட்டாமையை தீர்ப்பு கூற அழைக்கிறேன்.
அண்ணே.. நாங்கள்ளாம்.. கொஞ்சம் பொழச்சி போய்க்கிறோமே?? :)
//காதல் சிறிதும் குறையாமல்
விழிகள் ஒருநொடி இமைக்காமல்
உன் முகமே தேடுதடி
என்னுயிர் முழுதுமே நீயடி
அதற்கொரு வழி சொல்லடி
உன் இதயத்தை திறந்து வையடி...!//
தியானம் அருமை.வாழ்த்துக்கள்
என்னா அறிவு... ரெம்ப வேலையா?.. இப்ப எல்லாம் போஸ்ட் ரெம்ப கம்மியாடுச்சு.. பாடல் நல்லா இருக்கு..
அட அருமை அறீவு ஜீவி
s i too agree i already heard that vibration
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!