
(வலைச்சரத்தில் எனது கவிதைகளை அறிமுகப் படுத்திய நண்பர் 'இரும்புத்திரை' அரவிந்துக்கு என் நன்றி.)
நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம A.R ரஹ்மான் இசையமைத்து தமிழில் வெளிவந்திருக்கும் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கடைசியாக 2008-இல் வெளிவந்த தமிழ் படம் சக்கரகட்டி. இதில் பாடல்கள் ஹிட் என்றாலும், அனைத்தும் ரஹ்மானின் பழைய டியூன்கள். 2007-இல் சூப்பர் ஸ்டாரின் 'சிவாஜி' க்கு அடுத்து வந்த இளைய தளபதியின் 'அழகிய தமிழ் மகன்' தான் ரஹ்மான் கடைசியாக இசையமைத்த தமிழ் படம். பிறகு ஹிந்தி, ஹாலிவுட் என பிஸியாகிவிட்டார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் அவரை தமிழுக்கு கொண்டுவந்திருப்பவர் கௌதம் மேனன். இவரின் இசை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. தான் ஒரு இசைப் புயல் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் ரஹ்மான். இப்புயலில் சிக்கி மற்ற படப் பாடல்கள் காணாமல் போவதை நீங்களே அறிவீர்கள்.
இப்போது படத்தின் பாடல்களுக்கு வருவோம். எனக்கு பிடித்தபடி வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
1. அன்பில் அவன் : தேவன் ஏகாம்பரம், சின்மயிநீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம A.R ரஹ்மான் இசையமைத்து தமிழில் வெளிவந்திருக்கும் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கடைசியாக 2008-இல் வெளிவந்த தமிழ் படம் சக்கரகட்டி. இதில் பாடல்கள் ஹிட் என்றாலும், அனைத்தும் ரஹ்மானின் பழைய டியூன்கள். 2007-இல் சூப்பர் ஸ்டாரின் 'சிவாஜி' க்கு அடுத்து வந்த இளைய தளபதியின் 'அழகிய தமிழ் மகன்' தான் ரஹ்மான் கடைசியாக இசையமைத்த தமிழ் படம். பிறகு ஹிந்தி, ஹாலிவுட் என பிஸியாகிவிட்டார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் அவரை தமிழுக்கு கொண்டுவந்திருப்பவர் கௌதம் மேனன். இவரின் இசை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. தான் ஒரு இசைப் புயல் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் ரஹ்மான். இப்புயலில் சிக்கி மற்ற படப் பாடல்கள் காணாமல் போவதை நீங்களே அறிவீர்கள்.
இப்போது படத்தின் பாடல்களுக்கு வருவோம். எனக்கு பிடித்தபடி வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
இது ஒரு ஜாலி டூயட் பாடல். வார்த்தைகள் தெளிவாக புரியும்படி இசை அமைந்துள்ளதால் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறது. இரண்டாம் முறை கேட்கும்போது நம்மை அறியாமலே நாமும் பாட ஆரம்பித்துவிடுகிறோம். சற்று கவனித்தால் கிருஸ்துவ இசை மற்றும் இந்து மங்கள இசை இரண்டும் கலந்து வருவதை உணரலாம்.
2. ஹொசன்னா : விஜய் பிரகாஷ், சுசானே, ப்ளாசீ
ஆரம்பமே சொல்லிவிடுகிறது இது காதல் தோல்வி/பிரிவு பாடல் என்பதை. நடுவில் வரும் ஹம்மிங் நம் மனதை என்னவோ செய்கிறது. பலரும் முனுமுனுக்கக்கூடிய பாடலாக இது அமையும். ஆங்கில ராப் கலக்கல். சோக பாட்டு இப்படியும் இருக்குமா..?
3. மன்னிப்பாயா : A.R.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல்
காதலனைத் தவிக்கவிட்டுச் செல்லும் காதலியின் பாடல். அருமையான சோக கீதம். கண்டிப்பாக இது உங்கள் பழைய நினைவுகளைக் கிளறிவிடும். ரஹ்மான் பாடியிருப்பது தனிச்சிறப்பு. இடையில் சேர்க்கப்பட்டுள்ள திருக்குறள், ரஹ்மானிடமிருந்து முழு திருக்குறளும் பாடலாக வராதா எனும் ஏக்கத்தை தருகிறது. எதிர்பார்க்கிறோம் இசைப் புயலே...!!!
4. ஓமனப் பெண்ணே : பென்னி தயாள், கல்யாணி மேனன்
காதலியின் புகழ் பாடும் பாடல். அனைத்துக் காதலனுக்கும் பிடிக்கும் என்றாலும், கேரளத்துக் கண்மணிகளை ரசிப்பவர்கள் கட்டாயம் ரசித்துப் பாடுவார்கள். (என்னை மாதிரி..., ஹி ஹி ஹி..!).
5. ஆரோமலே : அல்போன்ஸ்
அருமையான கிட்டார் இசையுடன் ஆரம்பிக்கும் இது ஒரு மலையாளப் பாடல். அர்த்தம் முழுமையாகப் புரியாவிட்டாலும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. 'ஆரோமலே' எனும் வார்த்தை பாடல் முழுக்க பின்னணியில் உச்சரிக்கப்படுவது அருமை. 'ஆரோமலே' என்றால் 'செல்லம்' என்று அர்த்தமாம். (அப்ப அது த்ரிஷா தான்...!).
6. விண்ணைத்தாண்டி வருவாயா : கார்த்திக்
காதலிக்காக ஒரு ஏக்க பாடல். கிட்டார்+பியானோ மட்டுமே பின்னணி இசை. பின்னியிருக்கிறார் இசைப் புயல். அமைதியாக வரும் இப்பாடல் படத்தில் bit / background song ஆக வரும் என யூகிக்கிறேன்.
7. கண்ணுக்குள் : நரேஷ் ஐயர்
ஒருதலைக் காதல் / காதல் வேண்டி பாடும் பாடல். இதுமட்டுமே கொஞ்சம் பாஸ்ட் பீட், ரஹ்மானின் வழக்கமான இசை. மற்றபடி புதிதாக ஏதும் இல்லையென்றாலும், பாடல் ஓகே.

ஒரு சில படங்களின் பாடல்களை கேட்கும்போதே அது எந்த இடத்தில், எந்த சூழ்நிலையில் வரும் என்பதை கூறிவிடலாம். உதாரணம் சொல்லி கலகம் விளைவிக்க விரும்பவில்லை. இப்படத்தின் பாடல்களை கேட்கும்போது கண்டிப்பாக இது 100% இளமை துள்ளும் காதல் கதை என்பதை தவிர மேலொன்றும் யூகிக்க முடியவில்லை. ஆனால் இப்பாடல்களைவைத்து நான் செய்த ஆராய்ச்சியில், 'என் செல்லம்' த்ரிஷா மலையாளப் பெண்ணாக வருகிறார் என்று கண்டுபிடித்துள்ளேன். ..! பட ஸ்டில்களில் வேறு அருமையாக இருக்கிறார். ஹ்ம்ம்..., படம் எப்போ வருமோ..?!
- காதுகளை பதம் பார்க்காமல், இதம் சேர்க்கும் இசைக்காக ரஹ்மானுக்கு பெருசாய் ஜே...!
- A.R ரஹ்மானிடமிருந்து இப்படிப்பட்ட பாடல்களை வாங்கியதற்காக கெளதம் மேனனுக்கு ஒரு ஜே..!
----------------------------------------------------
டிஸ்கி 1 : மேலும் ராவணா, சுல்தான், இந்திரன் என பல படங்கள் ரஹ்மான் இசையில் இந்த வருடமே வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.
டிஸ்கி 2 : பொங்கல் கழித்து மீண்டும் சந்திப்போம். அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!
----------------------------------------------------
சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
7 comments:
அருமையான விமர்சனம்...
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
இனிமேதாங்க கேக்கணும்..
பொங்கல் வாழ்த்துக்கள் அறிவு.. :))
Yesterday i downloaded and listened to Goa and Vinnaithaadi vaaraayo. frankly saying, not even a single song impressed me. Mediocre songs. A.R.Rehman was very good once upon a time but not now.
I feel Harris Jeyaraj and Yuvan are great compared to A.R.R.
ஓமனப் பெண்ணே : பென்னி தயாள், கல்யாணி மேனன்
பாடகர்கள் இருவரும் மலையாளிகள் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
அருமையான விமர்சனம்...
@ anony1 : தங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரஹ்மான் இப்படத்தில் வித்தியாசமான/நல்ல இசையைக் கொடுத்துள்ளார். மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட இருவருமே திறமைசாலிகள் தான்.
நன்றி பிரபு, வெற்றி, anony2.
nice comments on VTV songs, thanks
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!