Thursday, February 25, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 4


னி கிடைக்குமோ
கிடைக்காதோ என்றெண்ணி
முழுமையாய் சுவைத்துவிட
எத்தனித்த நேரம்,
முடிந்துவிட்டிருந்தது
அவளின் இறுதி முத்தம்...!

-----------------------------------------------------


ன்றோ
விட்டுவிட்டு போனவள் மீது
இன்றும்
குற்றம் கூறமுடியாமல் தவிக்கும்போது
உணர்கிறேன்,
இன்னும் அவள் மீதுள்ள (மீதமுள்ள) காதலை...!

-----------------------------------------------------


ண் விழித்து
கண்ணாடி பார்க்கும்போதெல்லாம்
என் காதோரம் நரைத்துள்ள
முடிகள் காட்டிக்கொடுக்கின்றன,
நான்
காதலில் தோற்றவன் என்று...!
-----------------------------------------------


ன் கனவுகளை
வேறோருவனிடத்தில் இழந்துவிட்டு
தவித்துக்கொண்டிருக்கும் நேரம்
அவளிடமிருந்து வந்தது
ஒரு குறுஞ்செய்தி,
'நான் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய்..?'
-----------------------------------------------
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!

15 comments:

நாடோடி said...

அனைத்தும் அருமை நன்பரே...வாழ்த்துக்கள்.

Ashok D said...

பிடிச்சுயிருந்தது.. மொத இரண்டு :)

Anonymous said...

The Last one was so good. i read that again and again..........

Kalaku da Machi :)


Ganesh

vidivelli said...

பிரமாதம் உங்கள் கவிதை கணைகள்.பிடிச்சிருக்குங்க..........

Unknown said...

நல்லா இருக்கு..., 3வது தான் சூப்பர்

கவிதை வீதி said...

காதலின் வெறுமை கவிதையில் தெரிகிறது.
இருந்தும் அருமை.

priyamudanprabu said...

என் கனவுகளை
வேறோருவனிடத்தில் இழந்துவிட்டு
தவித்துக்கொண்டிருக்கும் நேரம்
அவளிடமிருந்து வந்தது
ஒரு குறுஞ்செய்தி,
'நான் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய்..?'

priyamudanprabu said...

என் கனவுகளை
வேறோருவனிடத்தில் இழந்துவிட்டு
தவித்துக்கொண்டிருக்கும் நேரம்
அவளிடமிருந்து வந்தது
ஒரு குறுஞ்செய்தி,
'நான் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய்..?'
///

nice

சிவாஜி சங்கர் said...

:)

Anonymous said...

arumayana kavithaikal, vazhthukkal!

அறிவு GV said...

@ நாடோடி : நீங்க ரொம்ப நல்லவருங்க.
@ அசோக் : நன்றிங்க. இன்னும் நல்லா எழுத முயற்சி பண்றேன்.
@ கணேஷ் : ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ். நன்றி மச்சான். :)
@ விடிவெள்ளி : இப்பவே கண்ணா கட்டுதே..! ரொம்ப நன்றி. :)
@ பேநா : உங்களுக்கும் நரைச்சிடுச்சோ..?
@ கவிதை வீதி : ஒன்னே ஒன்னுனா பரவா இல்ல.., சரி விடுங்க. :) முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. மீண்டும் வாங்க.
@ பிரபு : நன்றி பிரபு. அடிக்கடி வாங்க.
@ சிவாஜி : கவிதை நாயகனே.., வாங்க வாங்க. வெறும் ஸ்மைலி மட்டும் தானா...?
@ அபாரசித்தன் : ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வாங்க, பழகலாம். :)

Thenammai Lakshmanan said...

நாலாவது ரொம்ப அருமை அறிவு ஜீவி

அறிவு GV said...

ரொம்ப நன்றிங்க..!
முதல் முறையா எனக்கு 20 ஒட்டு, அதுவும் உங்க கையால். Proud of it..! Spl thanx 4 that. :)

மங்குனி அமைச்சர் said...

//என் கனவுகளை
வேறோருவனிடத்தில் இழந்துவிட்டு
தவித்துக்கொண்டிருக்கும் நேரம்
அவளிடமிருந்து வந்தது
ஒரு குறுஞ்செய்தி,
'நான் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய்..?' //

இது தான் அதிர்ஷ்டம் என்பது. வெளியூரான் ப்ளாக் -ல ஒரு ஐயர் வேற அப்ப மொத்தம் ????????????

Prathi said...

கவிதை எல்லாம் ஒரு ரேஞ்சா தான் இருக்கு.....

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails