சென்ற வருடம் டிசம்பர் மாத இறுதியில் எனது நண்பர்களுடன் ஒகேனக்கல் சென்றிருந்தேன். நான் ஒகேனக்கல் செல்வது இதுவே முதல் முறை என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனேயே சென்றிருந்தேன். அதுமட்டுமின்றி பல நாட்கள் கழித்து என் கல்லூரி நண்பர்களுடனான இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது மட்டுமன்றி என் கல்லூரி நாட்களை கண்முன் கொண்டுவந்தது. இதைப்பற்றி வேறு பதிவில் கூறுகிறேன்.
இப்போது ஒக்கேனக்கல் பற்றி,
- ஒகேனக்கல் சென்றடையும் வழி நன்றாக இருக்கிறது.
- ரோட்டோரத்திலோ, ஹோட்டல் வாசலிலோ நாம் நிறுத்தப் போகும் காருக்கு, ஊருக்குள் நுழைந்தவுடனே பார்க்கிங் சார்ஜ் 20-25 வாங்கிக்கொள்கின்றனர்.
- கார் கதவை திறந்து காலை கீழே வைக்கும்முன்பே நம்ம சுற்றி 7-8 பேர் சூழ்ந்துவிடுவர். சாப்பாடு, ஹோட்டல், ஆயில் மசாஜ் மற்றும் போட்டிங் இவற்றிற்கு விலை பெசத்தொடங்கிவிடுவர்.
- சுமாரான ஹோட்டல்கள் தான் இருக்கின்றன. முன்பே முயற்சித்தால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஹோட்டலில் இடம் கிடைக்கலாம்.
- நல்ல சாப்பாடு கொஞ்சம் கஷ்டம் தான். தமிழ்நாடு ஹோட்டலில் ஓரளவு பரவாயில்லை. ஆனால் முன்பே ஆர்டர் சொல்லிவிடவேண்டும்.
- நாம் எங்கு சென்றாலும் கூடவே ஒருவர் அல்லது இருவர் வந்து போட்டிங்காக வந்து நச்சரிப்பார். (அரை நாள் முழுதும் எங்கள் கூடவே ஒருவர் வந்து பிராண்டினார். 1200 இல் ஆரம்பித்து 500 இல் முடித்தோம், நாங்கள் மொத்தம் 6 பேர்)
- 5 ரூபாய் கட்டணம் கொடுத்து தொங்கு பாலம் வழியே சென்றால் சின்ன சின்னதாக நிறைய பால்ஸ் பார்க்கலாம்.
- 'சினி பால்ஸ்' என்ற இடத்தில் மட்டுமே குளிக்க முடியும். ஆயில் மசாஜ் என்றால் இன்னும் அருமை. ஆனால் நம்மை விட மசாஜ் செய்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- அதை தாண்டி சென்றால் ஒரு view point. அதற்கு தனி கட்டணம், 2 ரூபாய். ஒகேனக்கலின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.
- பிறகு நாம் விரும்பினால் பரிசில் பயணம். ('முதல் மரியாதை' ராதா போல் யாரும் இருக்க மாட்டார்கள்..!). கொடுக்கும் காசிற்கு பரவாயில்லை.
- பாறை உச்சியிலிருந்து சிறுவர்கள் தண்ணீருக்குள் குதித்து நம்மிடம் 5-10௦ வாங்கிக்கொள்வார்கள். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்..! (தனியே அவர்களுடன் பேசிய பிறகுதான் தெரிந்தது அவர்கள் கஷ்டம்..!)
- ஆற்றிலேயே, பிஸ்கட், தண்ணீர் பாட்டில், சிப்ஸ் என அனைத்தையும் சுமந்துகொண்டு, சில பரிசில்கள் இங்குமங்கும் சென்றுகொண்டிருக்கும். வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்.
- 'சந்தன கடத்தல்' வீரப்பன் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம். அவர் சுற்றித்திரிந்த பகுதி இதுதான் என்பதால்.
- இறுதியாக 'மணல் தீவு' பகுதியில் இறக்கிவிடுவார்கள். கடைகள் மட்டுமே அங்கு உண்டு, வறுத்த மீன்களோடு சேர்த்து சாதமும் கிடைக்கும்.
- ஆற்றின் இந்த பக்கம் தமிழ்நாடு, அந்தப்பக்கம் கர்நாடகா மாநிலம். பிரச்சனைக்குரிய பகுதியும் இதுதான்...!
- அங்கிருந்து கிளம்பி மீண்டும் நம்மை ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிட்டுவிடுவார்கள்.
- பிறகு நாம் வந்த வழியிலேயே ஹோட்டலுக்கு நடையை கட்டவேண்டியதுதான்...!
இதுவே பெரிய பதிவாகிவிட்டதால், ஒகேனக்கல் படங்கள் அடுத்த பதிவில்.
நண்பர்களுடன் ஒருநாள் கொண்டாட்டமென்றால் அதற்கேற்ற இடம்...!
சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
2 comments:
தகவல் பகிர்வுக்கு நன்றி....
நல்ல தகவல்...அடுத்தப் பதிவை படத்துடன் எழுதவும்..
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!