Tuesday, February 16, 2010

மரணம் சுவைத்த நண்பன்


வீழ்ந்து கிடந்த நண்பனைப் பார்த்து
வீரிட்டு அழ முடியவில்லை என்னால்..!
மனம் மகிழ்ச்சியில் இருக்கும்போது
எத்தனைமுறை மிதித்திருக்கிறேன் அவனை..,
மன வேதனையில் இருக்கும்போது
எத்தனைமுறை உதைத்திருக்கிறேன் அவனை..,
துயரத்தில் இருக்கும்போது தோள் கொடுத்தானே..,
துவண்டு விழும்போது தூக்கி நிறுத்தும்
எண்ணங்களை வளர்த்தானே..,
இல்லத்திலேயே இருந்து - என்
இன்ப துன்பங்களைப் பகிர்ந்தானே..!
எத்தனை முறை என்
கண்ணீர்த்துளிகள் அவனை முத்தமிட்டிருக்கும்..,
அத்தனைக்கும் தோள் கொடுத்த அவனுக்கு
எவரும் தோள் கொடுக்காததால்
துவண்டு விழுந்துவிட்டானே..!
துண்டு துண்டாய் பிரிந்துவிட்டானே..!
அவனிடத்தில் வேறொருவன் வரலாம்,
ஆனால்
அவன்போல் வருவானா..?
அவன்..,
அன்று பெய்த கடும் மழையில்
இன்று மாண்டுகிடக்கும்
என் வீடு பின் மதில்சுவர்..!



டிஸ்கி :

2005-ம் வருட மழைக்காலத்தில் எங்கள் வீட்டு back compound சுவர் இடிந்து விழுந்துவிட்டது. நெஜமாவே அது எனக்கு நல்ல ப்ரண்டுங்க...! இடிஞ்சு கிடந்தத பாக்கும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது. அப்போ எழுதின கவிதை(?!) இது...!



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

10 comments:

Thenammai Lakshmanan said...

நிஜமான நண்பந்தான் அறிவு ஜீவி

நாடோடி said...

என்ன இப்ப இல்லாம் கவிதையாய் கொட்டுகிறது..என்ன விசயம்?

அறிவு GV said...

நெஜமாவே....! நன்றி அக்கா..! :)

அறிவு GV said...

@ நாடோடி : அதுக்கு தாங்க நான் ப்ளாக் ஆரம்பிச்சதே. கூட சினிமா விமர்சனம், மற்ற விஷயங்கள் சிலதுன்னு சேத்துகுறேன். முடிஞ்ச அளவு எல்லா விஷயங்களையும் விவாதிக்கனும்னு ஆசை, ஆனா நேரம் கிடைக்க மாட்டீங்குது. வருகைக்கு நன்றி...! :)

Unknown said...

நானும் ரொம்ம்ப பதறிபோட்டன்

Anonymous said...

instrasting

Gayathri said...

really nice and ur way of comment is good

Unknown said...

ஹம்ம்.., நல்லா இருக்கு..,

vidivelli said...

மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

அறிவு GV said...

@சங்கர் : புரிதலுக்கும், வருகைக்கும் நன்றி. :)
@ Anony : நன்றி..!
@ காயத்ரி : மிக்க நன்றி தோழி, வருகைக்கும், வாழ்த்துக்கும்..! அடிக்கடி வாங்க.
@ பேநா & விடிவெள்ளி : நெசமாத்தான் சொல்றீங்களா...? :) நன்றி..! மீண்டும் வாங்க விடிவெள்ளி.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails