Thursday, December 17, 2009

AVATAR (2009) - விமர்சனம்


James Cameron னின் இயக்கத்தில், Aliens , Terminator , True Lies , Titanic வரிசையில் மீண்டும் ஒரு பிரமாண்டமான திரைப்படம். 12 வருடங்களுக்குப் பிறகு நம்மை மீண்டும் தனது திறமையான இயக்கத்தால் மிரட்டியுள்ளார். போன முறை மனிதர்களுக்குள் ஏற்பட்ட காதலின் விளைவைக் கூறியவர் இந்தமுறை மனிதனுக்கும், வேற்று கிரகவாசிப் பெண்ணுக்கும் ஏற்படும் காதலால் நிகழும் விளைவுகளை காட்டுகிறார்.

னிம வளத்திற்காக 'பண்டோரா' எனப்படும் கிரகத்தில் சென்றிறங்கும் மனிதர்கள் அங்கே வாழும் 'நவி' என்றழைக்கப்படும் அந்த கிரகவாசிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நவிக்களை பற்றி நடக்கும் ஆராய்ச்சியில் பங்கேற்க வருகிறார் ஹீரோ Jake. இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்ட நிலையில் Jake ஒரு நவியின் உடலில் புகுத்தப்படுகிறார். அதன் மூலம் அவரால் நவிகளின் கூட்டத்தில் கலக்க முடிகிறது. உண்மை தெரியாமல் அதற்கு உதவுபவர், நவிகள் தலைவரின் மகள் Neytiri. இறுதியில் இவர்களுக்குள் காதல் உருவாக, அப்போது வருகிறது ஒரு பிரச்சனை. மனிதர் படைகளின் தலைவர் Colonal Miles நவிக்களின் இருப்பிடத்தை தாக்க, அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலையில் Jake தவிக்கிறார். பிறகு Miles, நவிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு தடை விதித்து நவிகளை அழிக்க முடிவிடுக்கிறார். இந்நிலையில் Jake எடுக்கும் முடிவு என்ன..? மனிதர்களுக்கும் நவிக்களுக்குமான யுத்தத்தில் வென்றது யார்..? அதுவரை மனிதனாகவும், நவியாகவும் வாழ்ந்த Jake இறுதில் என்னவாக ஆகிறார் என்பதை பிரமாண்டமாக, அதாவது மிக பிரமாண்டமாக 3D திரையில் நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர்.

ங்கு சென்றாலும், அழிக்க மட்டுமே தெரிந்த மனிதர்களிடமிருந்து இயலாதவர்களை காக்கும் ஒரு மனிதனும், அவன் காதலும் தான் கதை என்றாலும், அதை நம் கண் முன்னே காட்டிய விதம் தான் மற்றவர்களுக்கும், James Cameron க்கும் உள்ள வித்தியாசம். ஒரு நொடி கூட பூமியைக் காட்டாமல் 'பண்டோரா' கிரகத்திலேயே ஆரம்பித்து, அங்கேயே முடிகிறது படம். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் நம்மால் பார்க்கமுடிவது பிரமாண்டம் மட்டுமே. அதன் பின்னணியில் இருப்பது இயக்குனரின் சிந்தனையும், அதை தொழில்நுட்பத்தில் புகுத்திய விஷுவல் எபெக்ட் டீமும் மட்டுமே.

விக்களின் உருவ அமைப்பு, மரங்களின் தன்மை, விலங்குகளின் அமைப்பு, வர்ண ஜாலங்கள், மனிதர்களின் விமானங்கள் என அனைத்திலும் இயக்குனரின் கற்பனை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. விலங்குகள் மற்றும் மரங்களுடன் நவிக்கள் வைத்துக்கொள்ளும் நேரடித் தொடர்பு மிக வித்தியாசமான சிந்தனை. காணும் இடமெங்கும் இருளில் ஒளிரும் மரங்கள், செடி கொடிகள், அதைச்சுற்றி மிதக்கும் மலைகள், உயரமான அழகான அருவிகள். அனைத்துமே கண்களுக்கு குளிர்ச்சியான விருந்து. நமது பூமியும் ஒருகாலத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று வியக்கத்தோன்றுகிறது. அதுபோல் அந்த காட்டில் வசிக்கும் வித்தியாசமான மிருகங்கள், பூச்சிகள், டிராகன்கள் என அத்தனையும் வித்தியாசமான வடிவமைப்பு. குறிப்பாக டிராகன்களின் வர்ணக்கலவை, மிக அருமை. நொடிக்கொருமுறை மாறும் நவிக்களின் முக பாவனைகளை மிகச்சரியாக நிகழ்த்திக்காட்டிய விஷுவல் எபெக்ட் டீமுக்கு ஒரு பெரிய அப்ளாஸ்.

கொடிய மிருகத்திடம் இருந்து Jake தப்பும் காட்சி, காட்டின் அழகு, டிராகனை அடக்கும் காட்சி, நவிக்களின் இருப்பிடம் அழிக்கப்படும் காட்சி, Jake டிராகனில் பறப்பது, மனிதர்களின் படைபலம், இறுதிப் போர் என அனைத்து இடங்களிலும் ஒளிப்பதிவு நம்மை மிரட்டுகிறது. இறுதி சண்டையில் நம்மையும் ஒரு நவியாகவே பாவித்து டிராகனில் பறக்க ஆரம்பித்துவிடுகிறோம் நம்மை அறியாமலே. இதுவே ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த வெற்றி. அதுபோல், பண்டோரா கிரகத்தின் அழகு, Jake மற்றும் Neytiri யின் காதல், நவிக்களின் எழுச்சி, வீழ்ச்சி, Miles மற்றும் படையினரின் அட்டகாசம் அனைத்தையும் தன் இசையால் உணர்த்துகிறார் இப்படத்தின் இசையமைப்பாளர் James Horner. நம் செவிகளை பதம் பார்க்காத இசைக்கோர்ப்பு.

டிப்பில் Jake Sully யாக வரும் Sam Worthington, Neytiri யாக வரும் Zoe Saldana, Miles ஆக வரும் Stephen Lang இவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு. தவறவிடவில்லை. டெக்னிக்கலாக இப்படத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பற்றி எனக்கு அவ்வளவாக எழுத தெரியாவிட்டாலும், படம் பார்க்கும்போது உணர முடிந்தவற்றை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். மற்றபடி அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஹாலிவுட்பாலா வின் பதிவிற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன். கண்டிப்பாக படம் பாருங்கள், முடிந்தால் 3D யில்.AVATAR : நாம் கொடுத்த காசிற்கு இரண்டு மடங்கு அதிசயம் திரையில்.
IMDB Rating : 8.3/10 (நாளைக்கு தான் படம் world wide ரிலீஸ். இப்போவே இவ்ளோ..!)வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

10 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

அப்படிப்போடு ! கரெக்டா உங்க விமரிசனம் வந்த நாலாவது நிமிஷம், என்னோட விமரிசனம் :) . .நல்ல ரிவியூ . . கலக்குங்க :)

அறிவு GV said...

நன்றி கருந்தேள். நான் evening show Serene ல தான் பாத்தேன். நீங்க..?

ஹாலிவுட் பாலா said...

எவ்ளோ அடிச்சாலும் இவன் தாங்குவான்னுதானே... இப்படி எல்லோரும்... இந்தப் படத்தை பிரிச்சி மேயறீங்க???! :( :( :(

இனிமே நான் என்னைத்தை எழுதறது? :( :( :(

===

எப்பவும் கதைய எழுதிட்டு.. எடிட்டிங் (அப்படின்னா என்னாங்க) சூப்பர், ஒளிப்பதிவு கலக்கல்னு எழுதிடுவேன். இப்ப அதுக்கும்.. எல்லாரும் சேர்ந்து ஆப்பு வச்சிட்டீங்களே!
====

இங்கு படம் வெளியாக இன்னும் 8 மணிநேரம் இருக்கு. படம் முடிய 11 மணி நேரம். பதிவெழுத 12-13 மணி நேரம்.

அதுக்குள்ள இன்னும் எத்தனை பேர்... தூள் கிளப்பப் போறாங்களோ?
==

கருந்தேளுக்கு போட்ட பின்னூட்டம். மாத்தவே தேவையில்லை...!!!!

ரெண்டு பேரும்... நாஸ்தி பண்ணியிருக்கீங்க.

அறிவு GV said...

ரொம்ப நன்றி தல, நெஜமாவே என் விமர்சனம் நல்லா இருக்கா..?
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு குரு, உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு வாழ்த்து கிடைக்க. :))
உங்களோட டெக்னிகலான விமர்சனம் படிக்க காத்திருக்கிறேன்.

rajeepan said...

சூப்பராயிருக்குது விமர்சனம் ..படம்பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தினை அதிகரிக்கவைத்திருக்கின்றது..காதல்காடச்சிகள் பிரதானமாக இருக்கும் என்று சொன்னார்கள்..அதைப்பற்றி பெரிதாக நீங்கள் ஒன்னும் சொல்லவில்லையே..

butterfly Surya said...

nice.

அறிவு GV said...

@ பாலா : இதுல உள்குத்து இருக்கு தல. உங்களுக்கு முன்னாடி நான் விமர்சனம் போடணும்னு முன்னாடியே பிளான் பண்ணிட்டேன். தப்புன்னா மன்னிச்சுகுங்க.

@ ராஜீபன் : நன்றி ராஜீபன். காதல் ஆரம்பிப்பதே தெரியாமல் அதுபாட்டுக்கு நடக்கும். அதுவும் அழகு தான்.

@ சூர்யா : ரொம்ப நன்றி வன்னத்துப்பூச்சியாரே. நீங்க வந்து போனது எனக்கு பெருமை. :)

சீனு said...

http://jeeno.blogspot.com/2009/12/v-t-r.html

raman said...

http://www.tamilhindu.com/2009/12/avatar_review/

KR said...

நன்று

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails