Tuesday, December 15, 2009

நானும், நம் நாட்டுப் பிரச்சனையும்



ந்த தெலுங்கானா பிரச்சனை ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது, ஆளாளுக்கு உண்ணாவிரதம், தனி மாநிலம், போராட்டம்னு அவங்க அவங்க லெவலுக்கு ஏத்தமாதிரி யோசிக்க ஆரம்பிச்சுடாங்க. ரெண்டா பிரிங்கங்குறாங்க, பிரிக்காதீங்கங்குறாங்க, பிரிச்சா ஹைதராபாத் ரெண்டுபேருக்கும் வேணுங்கறாங்க. அங்க ஆரம்பிச்ச பிரச்சனை இப்போ தமிழ்நாடு, மேற்கு வங்காளம், உ.பி, ம.பி ன்னு பல ஏரியால பத்திகிட்டு எரியுது. இது பத்தாதுன்னு காரைக்கால தனி யூனியனா அறிவிக்கணும்னு ஒரு போராட்டம். என்னடா நடக்குது நம்ம நாட்டுல அப்படின்னு மத்திய அரசு யோசிக்கரதுக்குள்ள புதுசா ஒரு மாநிலத்துலேர்ந்து, எங்களையும் காசு வெட்டிபோட்டு பிரிச்சுவிட்டுடுங்க, ஒண்ணா நின்னு பொழப்பு நடத்த முடியாதுன்னு பஞ்சாயத்த கூட்டிடுறாங்க.

ரி, நம்மளும் இந்நாட்டு குடிமகன் தானே, நாட்டுக்கு ஒரு பிரச்சனைன்னா அது நமக்கும்தானேன்னு எண்ணி களத்துல எறங்க முடிவுபண்ணிட்டேங்க. ரூம் போட்டு யோசிக்கிற அளவுக்கு வசதி இல்லாததுனால, நம்ம ரூமுலயே உக்காந்து, நின்னு, படுத்து, நடந்து, பொறண்டு யோசிச்சதுல ஒரு சில ஐடியா கெடச்சுது. அதபத்தி இங்கே சொல்றேன். படிச்சுட்டு நீங்களும் உங்களோட ஐடியாவ என் கிட்ட பகிர்ந்துக்குங்க.

ஐடியா : 1
ஆந்திரா, தெலுங்கானா ரெண்டையும் பிரிச்சுட்டு அந்த ஹைதராபாத்தை நம்ம தமிழ்நாடு கூட சேர்த்திடலாம்.

ஐடியா : 2
தனி மாநிலம் கேக்காத மாநிலங்கள தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 'நல்ல பிள்ளை' பட்டம் கொடுக்கலாம். கூடவே சில கோடிகளையும்.

ஐடியா : 3
தனி மாநிலம் கேக்குற கட்சிக்கும் I.S.I., அல் கொய்தாவுக்கும் தொடர்பு இருக்குன்னு ச்சும்மா கெளப்பி விடலாம். அப்புடியே சி.பி.ஐ., விசாரணை, ரேயடுன்னு ட்ராக் மாத்திவிட்டுடலாம்.

ஐடியா : 4
ஐரோப்பாவுல மக்கள் தொகை கம்மியா இருக்கேன்னு பீல் பண்ணுற நாடுகளுக்கு, ப்ராஜெக்ட் அவுட்சோர்ஸ் பண்ற மாதிரி நம்ம நாட்டுல பிரச்சனை பண்ற கட்சிகள், அவங்க சொந்தாக்காரங்க, உடன்பிறப்புகள், 'தொண்டர்கள்' அப்படி இப்படின்னு ஒரு சில கோடி பெற அங்க அனுப்பிடலாம். அங்கே போயும் அரசியல் செஞ்சு போழச்சுக்குவாங்க. (அது அவங்க திறமைய பொறுத்தது).

ஐடியா : 5
அப்பறம், ஒரு படத்துல வடிவேலு தமிழ்நாட்ட அப்டியே கொண்டுபோய் டெல்லி பக்கத்துல வைக்க சொல்லுவாரே, அந்த மாதிரி எங்க ஊரை மட்டும் (அதே காரைக்கால் தான்) தனியா பிரிச்சு அமெரிக்கா கூட செர்த்துவிட்டுடலாம்.
(அப்படியாவது, நான் பக்கத்து ஊருக்கு போய் I'm from America-ன்னு காலர் தூக்கி விட்டுக்குவேன். அமெரிக்கா மாப்பிள்ளைன்னு நிறைய பேர் பொண்ணு குடுப்பாங்க).


ப்போதைக்கு இவ்ளோதாங்க. இனி, உங்களோட ஐடியாவ கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க. எல்லாத்தையும் சேர்த்து மனுவா எழுதி கொடுத்துட்டு சட்டு புட்டுன்னு உண்ணாவிரதத்த ஆரம்பிக்கணும்...! நான் பொய் ரெண்டு ஸ்ப்ளிட் ஏசி ஆர்டர் பண்ணிட்டுவர்றேன்.



---------------------------------------------------------------
பிரிவினையே வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வடக்கே பாகிஸ்தான், கிழக்கே சீனா இந்த இரு நாடுகளும் நம் நாட்டைக் கூறுபோடத் துடிப்பது போதாதென்று நாமே நம்மைக் கூறுபோட்டுக்கொள்ளத் துடிக்கிறோம். பாவம் மத்திய அரசு. வாழ்க ஜனநாயகம்.
---------------------------------------------------------------


வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

No comments:

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails