Thursday, December 17, 2009

Lock, Stock and Two Smoking Barrels - விமர்சனம்


து தான் Guy Ritchie-யின் முதல் படம். நம் தலையை சுத்தவைப்பதில், இரண்டாவது படமான Snatch ஐ விட இது ஒருபடி மேல். முதல் படமே இப்படியா , என்று கண்டிப்பாக வியந்துவிடுவீர்கள் படம் பார்த்த பிறகு.

Bacon, Soap, Tom and Eddie நால்வரும் நண்பர்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையில், சீட்டு விளையாட்டில் சூரப்புலியான Eddie அந்த ஊர் தாதா Harry யிடம் மோதி, அவரின் மர்ம வலையில் சிக்கிவிடுகிறார். ஒரு வாரத்துக்குள் தோற்ற பணம் 500,000 பவுண்டுகளை திருப்பித் தராவிட்டால் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு விரல் வெட்டப்படும், மேலும் Eddie-யின் தந்தையின் Bar அபகரிக்கப்படும். அதை தடுக்க இந்த நால்வர் கூட்டணி என்ன செய்கிறது..?

Barry, இவர் Harry-யின் உதவியாளர். Harry ஒரு வீட்டில் உள்ள பெட்டியை திருடிக்கொண்டு வரச்சொல்ல, அவர் அந்த பொறுப்பை இரண்டு சிறிய திருடர்களிடம் ஒப்படைக்கிறார். பெட்டிக்குள் இருக்கும் பொருள்கள் Barry-க்கு, மற்றவை அவர்களுக்கே. இதுதான் டீல். அதில் சின்ன குளறுபடி நடக்க, பிறகுதான் தெரிகிறது அவர்கள் இருவரும் Harry-க்காகத்தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்பது. இருவரும் Harry-யால் மிரட்டப்பட, இழந்த பொருளை மீட்டுக் கொண்டுவர இந்த இருவரும் என்ன செய்கிறார்கள்..?

Charles, Willie, Winston Gloriya இவர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே கைத்தொழில் ஒன்றை செய்து வெளியே விற்கும் கும்பல். அதாவது கஞ்சா செடியை தங்கள் வீட்டுக்குள்ளேயே வளர்த்து, அதன் மூலம் போதை பொருள் தயாரித்து வெளியே விற்கின்றனர். தற்காப்பாக, வீட்டுக்குள்ளே புதிதாக வருபவர்களுக்கு கூண்டு கட்டி வைத்திருக்கொண்டு, தங்கள் சேவையை தொடர்கின்றனர். அந்த கூண்டுக்குள் வந்து சிக்கும் எலி யார்...?

Rory, அந்த ஊரின் மற்றொரு தாதா. Eddie & Co வின் தேவைக்காக அவர்களின் நண்பர் Nick இந்த கும்பலிடம் உதவி கோர, அவரும் சம்மதிக்கிறார். பிறகுதான் தெரிகிறது அது தன் செலவில் தனக்கே சூனியம் வைத்துக்கொள்ளும் வேலை என்று. இதனால் கோபமடைந்த Rory, Eddie & Co-வை என்ன செய்கிறார்..?

Big Chris, இவர் Harry-யின் ஆஸ்த்தான அடியாள். பணம் கட்ட வேண்டிய நாள் தாண்டிவிட்டால் அதை எப்படியாவது வசூல் செய்து வந்து தர வேண்டியது இவரின் பொறுப்பு. Eddie-யின் அப்பாவை கூட மிரட்டுகிறார். தன் ஒவ்வொரு வசூலுக்கும் தன் மகனையும் அழைத்துச் செல்பவர். Eddie-யிடமிருந்து எப்படி பணம் வசூல் செய்யப் போகிறார்..?

டுத்தது Dog. இவர் தன் திருட்டு கும்பலுடன் Eddie & Co தங்கியிருக்கும் ப்ளாட்டுக்கு அடுத்த பிளாட்டில் தங்கியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நாளில் மேலே சொன்னவர்களில் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள். அதன் முடிவில் என்ன ஆனது..?

றுதியாக Harry. இவர் அந்த ஊரின் Porn King. மற்றவர்களுக்கு பணம் கொடுத்து, பின் வலையில் விழவைப்பது இவரின் திறமை. அதன் பிறகு அதை வேறு விதமாக வசூல் செய்துகொள்ளுவார். இவர் ஆசைப்பட்ட அந்த பொருள் என்ன, ஏன் ஆசைப்பட்டார், இறுதியாக அப்பொருள் சென்று சேர்ந்த இடம் எது...?

தையெல்லாம் விட ஒரு பெரிய கேள்வி, மேலே குறிப்பிட்டுள்ள அனைவரும் ஒரு கட்டத்தில் தங்களுக்குள் மோதிக்கொண்டால் என்ன ஆகும்..?

ந்த கேள்விகள் அனைத்திற்கும் விடைதான் Lock, Stock and Two Smoking Barrels. படத்தின் முதல் பாதியில் என்ன நடக்கிறது என்று நமக்கு புரியாது. இரண்டாவது பாதியில் என்ன நடக்கிறது என்று படத்தில் நடிப்பவர்களுக்கு புரியாது. ஆனால், அடுத்தடுத்த திருப்பங்களை நாம் உணர்ந்து 'அட' போடும்போது படம் நம்மை விறுவிறுப்பின் உச்சத்தில் 'தொங்கவிட்டு' முடிகிறது.

1998 ஆகஸ்டில் இங்கிலாந்திலும், 1999 மார்ச்சில் அமெரிக்காவிலும் இப்படம் வெளியானது. Bacon ஆக Jason Stathom மற்றும் Big Chris ஆக Vinnie Jones, இருவருக்கும் இதுவே முதல் படம். Eddie ஆக Nick Moran, Harry ஆக P. H. Moriarty. Rory Breaker ஆக Vas Blackwood மற்றும் Diamond Dog ஆக Frank Harper.

டம் முழுக்க நடக்கும் விபரீதங்களுக்கு காரணம் விதி என்றால், அந்த விதிக்கு இன்னொரு பெயர் Guy Ritchie-யின் மூளை. நம்மால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத திரைக்கதை. மற்றபடி வசனங்கள், இசை, நடிப்பு , காமெடி என அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. இரண்டாம் முறை பார்த்தால் மிகத் தெளிவாக புரியும் கதை என்பதால் தான் இப்படி ஒரு விளக்கமான விமர்சனம். கண்டிப்பாக பாருங்கள், இப்படம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.


Lock, Stock and Two Smoking Barrels : நாம் ஒன்று நினைக்க Guy Ritchie ஒன்று நினைப்பார்.
IMDB Rating : 8.1/10வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

2 comments:

Ganesh said...

Nice Review machi !
Keep Going :)

பேநா மூடி said...

very nice..., keep writing...,

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails