Saturday, December 12, 2009

Snatch (2000)


நீங்கள் Gangsters படப் பிரியரா, இதோ உங்களுக்கு ஒரு விருந்து Guy Ritchie யின் Snatch.

ஜேசன் ஸ்டேதம் மூலமாக கதை ஆரம்பிக்கிறது. ஒரு வாரம் முன்னாள் வரை boxing promoter ஆக இருந்தவர் அதன் பிறகு நடந்த விஷயங்களை கூறுவதாக செல்கிறது படம். எடுத்தவுடனேயே ஒரு சிம்பிளான வைரக் கொள்ளை. பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட லண்டன் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கே அந்த வைரத்தை கொள்ளையடிக்க ஒரு லோக்கல் கும்பல். மேலும் லண்டனில் ஒரு boxing சூதாட்ட கும்பல், அதன் தலைவராய் வில்லன். அதற்கு உதவுபவராய் ஜேசன் ஸ்டேதம். குழுவாக வசிக்கும் Irish இனத்தவராக பிராட் பிட். சூதாட்டம் நடக்கும்முன் வேறு ஒரு விஷயமாக ஸ்டேதம் பிராட் பிட்டை சந்திக்க அங்கே ஒரு பிரச்சனை. பின்னர் சூதாட்டம் நடந்ததா, வைரத்திற்கும் சூதாட்ட கும்பலுக்கும் என்ன தொடர்பு, கடைசியில் வைரம் என்ன ஆனது, லோக்கல் கும்பலின் காமெடி, பிராட் பிட்டின் அதிரடி இவை அனைத்தும் படத்தில் பல திருப்பங்களுடன்

து Guy Ritchie யின் இரண்டாவது படம். இவர் மடோனாவின் மாஜி கணவர் . இவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், நான் பார்த்த முதல் படம் இதுவே. திரைக்கதை, வசனங்கள், மேக்கிங் என அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம், இசை. Turkish, Doug The Head, Boris The Blade, Frankie "Four-Fingers", Bullet Tooth Tony, Brick Top Polford என படத்தில் கேரக்டர்களின் பெயர்களைக்கூட வித்தியாசமாய் அமைத்துள்ளார். ஒரே ஒரு கடினமான விஷயம் படத்தில் வரும் ஸ்லாங்குகள், குறிப்பாக பிராட் பிட் & கோ. Empire magazine 2008-இல் வெளியிட்ட சிறந்த 500 ஆல் டைம் பேவரிட் படங்கள் லிஸ்டில் இதற்கு 466 வது இடம்.

Turkish-ஆக ஜேசன் ஸ்டேதம், Mickey ஆக பிராட் பிட். இவர்கள் தவிர போரிஸ் ஆக Rade Šerbedžija, ஸ்டேதமின் உதவியாளராக Stephen Graham, சூதாட்ட கும்பல் தலைவர் Brick Top Polford ஆக Alan Ford, Bullet Tooth Tony ஆக Mid night meet train புகழ் Vinnie Jones. இவர்கள் அனைவரின் நடிப்பும் அருமை. மேலும் இப்படத்தின் பாதிப்பை நாம் நிறைய தமிழ் படங்களில் பார்க்கமுடியும். உதாரணமாக, ஓரம்போ, கில்லி, சுள்ளான், etc. உங்களை சற்றும் ஏமாற்றாத ஒரு Gangsters மூவி இது.


Snatch : நிறைய தமிழ் டைரக்டர்கள் பார்த்த நல்ல படம்..?!!
IMDB Rating : 8.2/10வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

5 comments:

பேநா மூடி said...

அறிமுக படுத்தியமைக்கு நன்றி..,

ஹாலிவுட் பாலா said...

கொஞ்சம். கேப் கொடுத்தா... எல்லாரும்.. ஆங்கிலப் படத்தை பத்தி எழுத ஆரம்பிச்சிட்டீங்க. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? ஹா??? :) :)

இதைப் பத்தி ஏற்கனவே எழுதிட்டேன் அறிவு. போஸ்ட் பண்ணாம வச்சிருந்தேன். ஹாலிவுட் ராப்ரி சீரிஸ்க்காக. அது இல்லாம ரெண்டு வாரத்தில்.. இவரின் ஷெர்லக்ஹோம்ஸ் வேற வருதா. அதான்.

கலக்குங்க! :)

pappu said...

lock,load and two smoking barrels-இவரோட முதல் படமும் இது மாதிரி தான். படம் முழுக்க காமெடி பஅண்ணிருப்பாங்க

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஒரு நல்ல ஜாலியான படம் . . .:) அதுலேயும், நம்ம பிராட் பிட் பண்ணுற லொள்ளு பயங்கர சிரிப்பா இருக்கும் . .

@ பாலா - ஷெர்லாக் ஹோம்ஸ் பயங்கரமா இருக்கும்னு நெனைக்குறேன் . . அதுக்குதான் வெய்ட்டிங் . .:)

அறிவு GV said...

@ பேநா மூடி : படம் பாருங்க, கண்டிப்பா பிடிக்கும்.

@ பாலா : தல, என் விமர்சனத்துக்கு லிங்க் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி. என் ரொம்ப நாள் ஆசை இது. :)
உங்களோட review'வையும் பாக்கணும். நீங்களும் போடுங்களேன். அதுல 10% வது என்னுது இருக்கானு பாக்குறேன். waiting for அவதார், வேட்டைக்காரன், ஷெர்லக்ஹோம்ஸ். :))

@ பப்பு : முதல் வருகைக்கு நன்றி பப்பு. lock,stock and two smoking barrels பாத்தாச்சு. அதுவும் அருமை. சீக்கிரமா விமர்சனம் போடுறேன்.

@ கருந்தேள் : வாங்க கருந்தேள், உங்க விமர்சனங்கள் அருமையா இருக்கு. பிராட் பிட் எப்போதுமே கலக்கல் தான். நன்றி.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails