Sunday, January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன் : திரைப்பட விமர்சனம்



ணக்கம்...! அனைவரும் பொங்கல் கொண்டாட்டங்களை இந்நேரம் முடித்துவிட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். நாளை முதல் மீண்டும் பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் என வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்புவதை எண்ணினால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. இந்தமுறைபொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன் , குட்டி, நாணயம் மற்றும் போர்க்களம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் முதல் படத்தைப்பற்றி இங்கே பார்ப்போம். முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டாலும் அன்றே பதிவு போட இயலாததால் இன்று போடுகிறேன்.

டத்தின் ட்ரைலர் வந்ததிலிருந்தே நமது B.P எகிறியிருந்தாலும், வழக்கம்போலவே இயக்குனர் செல்வராகவனின் இந்தப்படமும் கால தாமதமாகத்தான் வெளிவந்திருக்கிறது. படத்தின் முதல் பாதி சில ஆங்கிலப்படங்களில் பார்த்தைப்போலிருந்தாலும், தீபாவளி ராக்கெட்டாய் சீறிச்சென்று இரண்டாம் பாதியில் மீண்டும் கீழே இறங்கிவிடுகிறது. இதுதான் படம் பார்த்த பலரின் விமர்சனம். ஆனால் என்னைக்கேட்டால் தமிழ் சினிமாவின் இன்றைய காலகட்டத்தில் இப்படம் மிகவும் வித்தியாசமான முயற்சி என்பேன். அதற்காகவே இப்படத்தினை நான் ஆதரிக்கிறேன்.

கதைச்சுருக்கம் :

சுமார் 800 வருடங்களுக்கு முன் பாண்டியர்களிடமிருந்து அவர்களின் குலதெய்வ சிலையை அபகரித்து வருகின்றனர் சோழர்கள். அதை சோழர்குல கடைசி இளவரசனிடம் கொடுத்து பாதுகாக்கச்சொல்லி, அவரை நாடுகடத்திவிடுகின்றனர். எவ்வளவு போராடியும் பாண்டியர்களால் சோழ இளவரசனையும், அந்த சிலையையும் கண்டுபிடிக்க இயலவில்லை. இன்றைய தினம் அதைப்பற்றிய தகவல்களுடன் ஆராய்ச்சி செய்ய கிளம்பிச்சென்ற ஆண்ட்ரியாவின் தந்தை பிரதாப் பொத்தான் திரும்பி வராமல் போகவே, அவரைக் கண்டுபிடிக்க ரீமா சென் தலைமையில், ஆண்ட்ரியாவின் துணையுடன் வியட்நாம் அருகே உள்ள தீவிற்கு கிளம்புகிறது ஒரு படை. அவர்களுடன் செல்லும் உதவிக்குழுவின் தலைவன் கார்த்தி. காட்டுவாசிகள், காவல் படை, சர்ப்பம், புதைகுழி, தாகம், பசி மற்றும் கிராமம், இப்படி சோழர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏழு ஆபத்துக்களையும் தாண்டினால் சோழர்கள் வாழ்ந்த இடத்தை அடையலாம் என ஒரு குறிப்பு சொல்ல, அங்கு கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா மூவரும் எப்படி செல்கின்றனர், கிராமத்தை அடைய அவர்கள் படும் கஷ்டங்கள், அடைந்தபின் அவர்கள் அடையும் மாற்றம் இவற்றோடுவிறுவிறுப்பாக முடிகிறது படத்தின் முதல் பாதி.

ரண்டாம் பாதியில் தான் இருக்கிறது தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத ஒரு முயற்சி. இடைவேளையின்போது நீங்கள் என்னதான் கற்பனை செய்திருந்தாலும் அது செல்வராகவனின் கற்பனையை ஈடு செய்யாது. அது, அந்த சோழ பரம்பரை இன்னும் அங்கே வாழ்வதுதான். அதன் தற்போதைய மன்னனாக பார்த்திபன். அவன் ஆட்சியில் பஞ்சத்தின் உச்சத்தில் வாழும் சோழ நாட்டு பிரஜைகள். ஒரு பெண் தன் வறுமையை மன்னனுக்கு உணர்த்தும் காட்சியை என்னவென்று விவரிப்பது...! தூதுவன் எப்போது வருவான், தன் மக்களை திரும்ப சோழ நாட்டிற்கு எப்போது அழைத்துச் செல்வது என துடிக்கும் அரசனுக்கும், அவனையே நம்பியிருக்கும் மக்களுக்கும் ரீமா சென் ரூபத்தில் வருகிறது முடிவிற்கான ஆரம்பம். தான் தான் அந்த தூதுவன், இன்னும் சில தினங்களில் நாம் அனைவரும் சோழ நாட்டிற்கு திரும்ப சென்றுவிடலாம் என்று அனைவரையும் நம்பவைக்கும் ரீமா சென் உண்மையில் பாண்டிய இளவரசி. சோழ வம்சத்தை முற்றிலும் ஒழித்துவிட துடிக்கும் ரீமா, இன்னும் பிற பாண்டிய வம்சாவழியினரின் உதவியோடு சொழப்படையை தாக்க, உண்மையான தூதுவனான கார்த்தி பார்த்திபன் பக்கம் சேர்ந்து போராட, முடிவு, இந்த உலகமே அறிந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை கண்முன் காட்டுகிறது. அதைப் பற்றி இங்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நீங்களே திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். முடிவில் நம் மனதை பாரமாக்கிவிட்டு இன்னும் தொடரும் என்று முடிகிறது.

செல்வராகவன் படம் என்றாலே கிளுகிளுப்பு தான் என்றாலும் இந்த முறை அதையும் தாண்டி தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய வாசலை திறந்துவிட்டிருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். முதல் பாதி வேண்டுமானால் நீங்கள் ஏற்கனவே பார்த்தது போலிருக்கலாம். ஆனால் இரண்டாம் பாதி, முற்றிலும் நமக்கு புதியது. இயக்குனரின் உழைப்பு இங்கே தான். பலர் சொல்வதுபோல் சில லாஜிக் மீறல்கள், நீளமான காட்சிகள் இருந்தாலும் இப்படிப்பட்ட முயற்சி கட்டாயம் பாராட்டப்பட/ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. நான் எதிர்பார்த்தபடியே சில காட்சிகள் அதன் ஆழம் மற்றும் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்டுவிட்டன.

டிப்பில் பார்த்திபன் மற்றும் ரீமா சென் இருவருக்குமே நல்ல வாய்ப்பு. சிறப்பாக செய்திருக்கின்றனர். பார்த்திபன், இவரின் நடிப்பு, உணர்ச்சிகளின் வெளிப்பாடு அனைத்தும் அருமை. அதிலும் இவரின் அறிமுக காட்சி, தூள்...! ரீமா, முதல் பாதியில் அதிரடி, கவர்ச்சி, பின் பாதியில் நயவஞ்சகம் என தன் நடிப்பில் முத்திரை பதித்துவிட்டார். கார்த்தி ஆரம்பத்தில் கலக்கினாலும் இறுதியில் நெஞ்சில் நிற்பது இந்த இருவர் மட்டுமே. முன் பாதியில் கார்த்தி பல இடங்களில் சிரிக்கவைக்கிறார். ஓரிடத்தில் மட்டும் நம் அனைவரின் வயிற்றிலும் நெருப்பை அள்ளி கொட்டுகிறார். புரியும்னு நினைக்கிறேன். பின் பாதியில் இவருக்கு அதிகம் வேலை இல்லை. ஆண்ட்ரியா, சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

சையமைப்பாளர் G.V பிரகாஷ். ஆயிரத்தில் ஒருவன் ரீமிக்ஸ் பாடல், மற்ற இரண்டு பாடல்களின் காட்சியமைப்பு, பார்த்திபன் பாடும் பாடல் அனைத்தும் அருமை. பின்னணி இசையில் இரைச்சல் கொஞ்சம் ஜாஸ்தி என தோன்றுகிறது. மேலும் படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, கலை இயக்குனர் சந்தானம் மற்றும் கிராபிக்ஸ் குழு.

டம் சுமார் தான் கதை சரியில்லை, கிராபிக்ஸ் சரியில்லை, லாஜிக்கே இல்லை என்று நீங்கள் சொன்னால், அவதாரும் ஒரு மொக்கை படம் தான். கிடைத்த பணத்தில் என்ன செய்யமுடியுமோ அதைத்தான் செல்வராகவன் செய்துள்ளார். இதை ஆதரியுங்கள், விரைவில் ஹாலிவுட் தரத்தில், உலக சினிமாக்கள் நம் தமிழ் மொழியிலே உருவாகும். அதை விட்டுவிட்டு, இதையும் ஆதரிக்க மாட்டேன், மசாலா படங்களையும் ஓடவிடமாட்டேன் என்று சொல்பவர்கள் தாங்களே ஒரு நல்ல படம் எடுத்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்டாயம் என் ஆதரவு அதற்கும்இருக்கும்...!



ஆயிரத்தில் ஒருவன் : செல்வராகவன்...!
இன்னும் கொஞ்சம் கவனமாக தீட்டியிருந்தால் வைரம் நன்றாக ஜொலித்திருக்கும்.



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

5 comments:

வெற்றி said...

//அவதாரும் ஒரு மொக்கை படம் தான்//

சரிதான்..நடுவுல பத்து நிமிஷம் தூங்கிட்டேன்..ஆனா அந்த படத்த ஆஹா ஓஹோ ன்னு சொல்லிட்டு ஆ.ஒருவன குறை சொல்லிட்டு இருக்காங்க.:))

//இதையும் ஆதரிக்க மாட்டேன், மசாலா படங்களையும் ஓடவிடமாட்டேன் என்று சொல்பவர்கள் தாங்களே ஒரு நல்ல படம் எடுத்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

:)))

Anonymous said...

good review. i liked the movie very much. i dont know still some craps are saying its not good. for them "vettaikaaran" would be the best movie for ever. nonsense.
Sundar.

நாடோடி said...

நல்ல விமர்சனம்........நண்பா

Unknown said...

nalla pathivu...., paarattukkal..,

அறிவு GV said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி வெற்றி, சுந்தர், நாடோடி மற்றும் பேநா மூடி..!
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வேட்டப்பட்டுவிட்டதாம் இரண்டாம் பாதியில்...!

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails