Saturday, January 30, 2010

கோவா : திரை விமர்சனம்


ன்லைனில் டிக்கெட் புக் பண்ணிவிட்டாலும் ஆபீசிலிருந்து கிளம்ப நேரமானதால் சற்று வேகமாகவே சென்று சரியான நேரத்தில் அடைந்துவிட்டேன் காசி தியேட்டரை. நண்பர்கள் யாரும் சிக்காததால் நான் மட்டும் தனியாகவே சென்றிருந்தேன்.

ரண்டுபடிகள் வெற்றிகரமாக ஏறிய வெங்கட் பிரபுவுக்கு இந்தமுறை சற்று தடுமாற்றம் வருமென்றே நினைக்கிறேன். முதல் இரண்டு படங்களான சென்னை 28, சரோஜா இரண்டிலும் இருந்த பல விஷயங்கள் இப்படத்தில் மிஸ்ஸிங். அவை கதை, திரைக்கதை வேகம், லாஜிக், பாடல்கள், இயல்பான நக்கல். இவை அனைத்தும் சேர்ந்து நம்மை படத்தில் ஒன்றவிடாமல் செய்துவிடுகின்றன. ஆரம்பத்திலிருந்தே ஒருவித சினிமாத்தனமான காட்சிகளுடனே நகர்கிறது படம். பல இடங்களில் நம்மை சிரிக்கவைத்தாலும் நம் மனதில் ஒட்டவில்லை. சென்னை 28 நான் மிகவும் ரசித்த படம். சரோஜாவும் கூட. அதிலிருக்கும் வசனங்கள், நகைச்சுவை காட்சிகள் பலவும் என் மனதில் பல நாட்கள் நீங்காமல் இருந்தவை. அதுபோல் இப்படம் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தை என்று சொல்ல எதுவுமே இல்லை. தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில், கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் வாழும் காளைகளாக மூன்று நண்பர்கள். முறையே பிரேம்ஜி, ஜெய் மற்றும் வைபவ். மதுரை செல்லும் மூவருக்கும் ஜெய்யின் நண்பர் மூலமாக வாழ்வில் ஒரு லட்சியம் வருகிறது. அந்த லட்சியம், கோவா சென்று வசதியான வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து வாழ்வில் செட்டில் ஆகவேண்டும் என்பது. மீண்டும் ஊர் திரும்பமுடியாத நிலையில், அந்த லட்சியத்தை நிறைவேற்ற மூவரும் கோவா கிளம்புகின்றனர். அங்கே அவர்களுக்கு கிடைக்கும் நண்பர்கள், எதிரிகள், பிகர்கள், பீர்கள் இவைதான் மொத்த படமே. அப்படி என்னதான் நடந்தது, இறுதியில் மீண்டும் தங்கள் கிராமத்திற்கு திரும்பினார்களா, அவர்கள் லட்சியம் என்னவாயிற்று என்பவற்றை திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது படத்தில். அது போதாதென்று ஒருவர் மட்டும் பல வேடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறார். காரணம் தெரியவில்லை. இறுதியாக 3 நடிகர்களின் சிறப்புத் தோற்றம் வேறு. பிரேம்ஜிக்கு கொஞ்சம் அதிக பொறுப்பு, சரியாகவே செய்துள்ளார். சில பெரிய நடிகர்களை இமிடேட் செய்துள்ளார். சம்பத்-அரவிந்தின் நட்பு(??!) நம் தமிழ் சினிமாவிற்கு புதிது. ரசிக்க முடியல்லை. ஆனால் சம்பத்தின் உடல் மொழி அருமை. பிறரின் நடிப்பு..., ஓகே...! அனைவராலும் ரசிக்கப்பட்ட இரண்டு படங்களை எடுத்த வெங்கட் பிரபு இம்முறை அதை செய்யவில்லை. கண்டிப்பாக பெரியவர்கள் மற்றும் பெண்களால் இப்படத்தை ரசிக்க முடியாது என்பது என் கருத்து.

சையை பொறுத்தவரை கிராமத்துப் பாடல்கள் நன்றாக உள்ளது. மற்ற பாடல்கள் அனைத்திலும் இசை மட்டுமே கேட்கிறது. இறுதியில் மிஞ்சுவது தலைவலிதான். என்ன ஆச்சு யுவன்..? கேமரா அருமை. கோவாவின் எழிலை செழிப்பாக நம் கண்முன் காட்டுகிறது. இரண்டரை மணி நேரம் பல இடங்களில் சிரிக்கவைத்து, பல இடங்களில் நெளிய வைத்து, யூத்துகளுக்காக மட்டுமே படம் எடுத்துள்ளார் வெங்கட் பிரபு. ஆனால் எங்களாலேயே ரசிக்கமுடியவில்லையே வெங்கட் சார்...!! (நம்புங்க, நான் நெசமாவே யூத்து தான்..!). உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம், கைவிட்டுவிடாதீர்கள்..!



கோவா : Just for Guys...!



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

2 comments:

வெற்றி said...

//கோவா : Just for Guys...!//

எழுத்து பிழை உள்ளது...Just for Gays என வர வேண்டும் :)

நாடோடி said...

//நண்பர்கள் யாரும் சிக்காததால் நான் மட்டும் தனியாகவே சென்றிருந்தேன்.//

இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திங்கோ.....விமர்சனம் அருமை..

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails