Friday, November 13, 2009

ராதா கானம்

ராதை தானே கிருஷ்ணருக்காக உருகினாங்க. ஒருவேளை கிருஷ்ணர் ராதைக்காக ஏங்கி ஒரு கவிதை எழுதியிருந்தா எப்படி இருந்திருக்கும்..?(நல்லா தான் இருந்திருக்கும்). ஆனா அவர் எழுதினாரான்னு தெரியல. அதனால அவருக்காக நான் எழுதிய ஒரு கவிதை(?!).

ராதையே அடி ராதையே 
உன் கிருஷ்ணன் நானடி

கோதையே பூங்கோதையே
என் உயிரே நீயடி
வெளியே இன்னும் வெளியே
எனைத் தேடுவதேனடி
அருகினில் மிக அருகினில்
நான் வாழ்கிறேன் பாரடி...!

வெண்ணையும் மண்ணையும் விரும்பி உண்டேன்
கோபியர் ஆடை திருடிவைத்து ஆனந்தம் கண்டேன்
அண்ணனோ நல்ல பிள்ளையென பெயரெடுக்க
நானோ அன்னையர்க்கு கள்ளப் பிள்ளையானேன்
கள்வன் தான் நானும் உன்னை காணும்வரை
உள்ளம் களவு போகும்வரை...!

கொன்றையில் குவளை பூத்துவிட்டால்
அதை அதிசயம் என்று ஊர்சொல்லும்
உன் பொன்னிற மேனியும் புன்னகையும்
சேர்ந்துநின்று அதை வெல்லும்
கரிய விழிகளும் கூந்தலும் காற்றிநிலாடி
மயில்தனை மயங்கி ஆடச்செய்யும்...!

தரையினில் களவு புரிந்த எனை
மனச் சிறையினில் கைது செய்தாய்

கரையினில் காதல் புரிந்த எனை
காதலில் கரை புரளவைத்தாய்
கடைக்கண் பார்வையில் இரு கருவிழி போர்வையில்
கண்ணனாய் இருந்த எனை கிருஷ்ணனாய் மாற்றிவிட்டாய்....!

ராதையே அடி ராதையே
உன் கிருஷ்ணன் நானடி
கோதையே பூங்கோதையே
என் உயிரே நீயடி
வெளியே இன்னும் வெளியே
எனைத் தேடுவதேனடி
அருகினில் மிக அருகினில்
நான் வாழ்கிறேன் பாரடி...!

எனக்கு பிடித்த கிருஷ்ணருக்காக நான் எழுதினது. ஏன் பிடிக்கும்னு கேள்விலாம் கேக்கபடாது. கவிதைய(ஒத்துக்கோங்க ப்ளீஸ்) படிச்சுட்டு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களா..?


என்னைக் கவர்ந்த பதிவர்கள் - விரைவில்.

Next மீட் பண்றேன்.
அறிவுGV.

6 comments:

Karthik Sabapathy said...

Is this your first poem? If it is, then it is quite good for a beginner... and you are not alone... I have also written few poems... you can read them in my blog( but I feel that I'm not good enough to write poems in tamil..)

அறிவு GV said...

வாங்க ருத்ரன் சார். கவிதை எப்டின்னு சொல்லலியே..!

கா.பழனியப்பன் said...

அழகான கவிதை.
அனைத்து வரிகளும் அருமை.

அறிவு GV said...

ரொம்ப நன்றி பழனியப்பன். உங்க ஏரியாக்கு வர்றேன் இருங்க...

கமலேஷ் said...

தல சினிமாவுக்கு பாட்டு எழுத போகலாம், அந்த
அளவுக்கு ரொம்ப நல்லா இருக்கு...

அறிவு GV said...

ஆஹா கமலேஷ், ஆரம்பத்துலையே இப்படி அப்பு வைக்குறீங்களே. நன்றிங்க.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails