Monday, November 23, 2009

என்னைக் கவர்ந்த பதிவர்கள்

நான் இந்த உலகத்துக்கு புதுசு, கொழந்த மாதிரி. அதனால நான் என்ன பேசினாலும் சும்மா கத்துற மாதிரி தான் இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க, சீக்கிரமா வளர்ந்திடுரேன்(complan, horlicks எல்லாம் வாங்கி வெச்சுட்டேன்..!). So, என்னைப்பத்தி சொல்றதுக்கு எதுவும் இல்லாததுனால, எனக்கு புடிச்ச சில பதிவர்கள் பத்தி இங்க சொல்லியிருக்கேன்.

ஹாலிவுட் பாலா :

முழுக்க முழுக்க ஆங்கில திரைப்படங்கள் பத்தின விமர்சனங்கள் மட்டுமே. என்னுடைய ஆங்கில (சினிமா) அறிவை வளர்த்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவரின் முதல் பதிவு வெளியான நாளிலிருந்து இவரின் தீவிர விசிறி நான். இவருடையஎழத்து நடையும், கதையின் கருவை மட்டும் சொல்லி படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவதும், அதிலுள்ள டெக்னிகல் விஷயங்களை பிரித்து மேய்வதும் இவரிடம் மட்டுமே உள்ள திறமை. பாரத மாதா கவிதையும், pixar வரலாறும் என்னைக் கவர்ந்தவை.

கேபிள் ஷங்கர் :

இவர் சினிமா துறையிலேயே உள்ளவர். அதனால் அந்த துறையைப் பற்றிய பல விஷயங்களை இவர் பதிவுகள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். விமர்சனம் என்று வந்துவிட்டால் இவருக்கு மொழி பாகுபாடு கிடையாது. தமிழ், தெலுங்கு,ஹிந்தி, ஆங்கிலம் என பழமொழி விமர்சனங்களைக் காணலாம். இவருடைய விமர்சனம் படித்த பிறகுதான் அந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்பவர்கள் பலர். சமூக கருத்துக்களுக்கும் இவரிடம் பஞ்சம் இருக்காது. கொத்து பரோட்டாவும், நிதர்சன கதைகளும் என்னைக் கவர்ந்தவை. (சமீபத்தில் தனது தந்தையை இழந்து வாடும் கேபிள் ஷங்கருக்கு இப்பதிவின் மூலம் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்).

இரும்புத்திரை :

"எழுதுவதெல்லாம் நக்கல், நக்கலைத்தவிர வேறொன்றுமில்லை". மிக மிக இயல்பாக வரும் நக்கல் அரவிந்தோட ஸ்பெஷாலிட்டி. யாரையாவது வம்பிளுக்கலன்னா இவருக்கு தூக்கமே வராது போல. இவருடைய சினிமா விமர்சனங்கள் சற்று வித்தியாசமான பார்வையில்இருக்கும். வேற என்ன சொல்றது இவரபத்தி. நம்ம எப்படிப்பட்ட மூட்ல இருந்தாலும் சரி, இவர் ப்ளாக் பக்கம் வந்தோம்னா ஒரே மூடோட தான் திரும்பி போவோம், அது .....! நீங்களே ட்ரை பண்ணி பாருங்க.

வெட்டிப்பயல் :

பெயரிலேயே இருக்கு இவருடைய ப்ளாக்கின் சிறப்பு. சிறந்த பொழுதுபோக்கு வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இவருடைய பதிவுகளில் வெட்டிப்பேச்சு மட்டுமின்றி அழகிய கருத்துக்களும் இருக்கும். உங்களுக்கு தமிழ் சிறுகதைகள் மெயிலில் வந்திருந்தால் அது 80% இவருடையதாகத்தான் இருக்கும். இவருடைய மிக அருமையான சிறுகதைகளுக்கென்று தனி ரசிகர் வட்டாரமே உண்டு. கொல்ட்டி, கல்லூரிப்பயணம், தூறல் என அனைத்தும் என்னைக் கவர்ந்தவை. மகளின் சுட்டித்தனத்தில் பிசியாக இருக்கும் இவருக்கு என் வாழ்த்துக்கள். உங்க ப்ளாக்கும் ஒரு குழந்தை மாதிரி தான் வெட்டிப்பயல் சார், அப்பப்போவந்துபோங்க.

ஜொள்ளுப்பேட்டை :

வாயிலிருந்து வரும் வாட்டர் பால்சை ஒரு சொட்டு கூட வேஸ்ட் பண்ணாமல் இவர் ப்ளாக்கில் கொட்டிவிடுகிறார். இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள், அறிவுரைகள், டிப்ஸ்கள் என அனைத்தும் ஜொள்ளும் ஜொள்ளு சார்ந்தவையுமே. இந்த ஒரு சொல் மட்டுமே இவரின் அனைத்து பதிவுகளின் கருவும். ஆனால் ஆபாசம் இல்லாமல் எழுதுவது இவரின் சிறப்பு. எப்பவாச்சும் தான் ப்ளாக் பக்கம் வந்துபோறார். கொஞ்சம் அடிக்கடி பேட்டை வாங்க 'ஜொள்ளு' சார். உங்கள் சேவை எங்களுக்கு ரொம்ப தேவை.

கவிதைகளைப் பொறுத்தவரை பிரியன், நிலா ரசிகன், யாத்ரா, வெண்ணிறஇரவுகள் , மண்குதிரை, நந்தாவிளக்கு, நேசமித்ரன் என ஒரு பட்டியலே என்னிடம் உண்டு. அனைவரின் கவிதைகளும் ஒவ்வொரு வகையில் சிறந்தவை.

இவர்கள் தவிர, உண்மைத்தமிழன், வண்ணத்துப்பூச்சியார், அகநாழிகை, சர்வேசன், போஸ்டன் ஸ்ரீராம், அதிஷா, ஐந்தறைப்பெட்டி, கீதப்பிரியன், மச்சான்ஸ் இன்னும் பெயர் குறிப்பிடப்படாத பலருடைய வாசகன் நான். நீண்ட நாட்களாக வலைப்பூ வாசகனாக இருந்தும் இதுவரை யாருக்கும் பின்னூட்டம் இட்டதில்லை (முடியாம தாங்க). இனி கண்டிப்பாக உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என உறுதி கூறுகிறேன். அனைவரைப்பற்றியும் எழுத ஆவல் இருந்தாலும், நீளம் கருதி இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

டிஸ்கி :

இவங்க எல்லாருமே என்ன ஏகலைவன் ஆக்கின(இன்னும் ஆகுலீங்கன்னா..!) துரோணருங்க. அதனால இந்த பதிவு இவங்க அனைவருக்கும் சமர்ப்பணம்.


நான் ரசித்த பாடல்கள் 2009 - விரைவில்.

4 comments:

பாலா said...

/////இவருடையஎழத்து நடையும்/////

இதுல.. எந்த உள்குத்தும் இல்லியே?? :) :)

வாழ்த்துகள்!!! :) எல்லா பதிவையும் படிச்சிட்டேன். கண்ணன் பாட்டைத் தவிர! :)

----

அப்புறம்... வேர்ட் வெரிஃபிகேஷனை ஆப்ஷனில் இருந்து எடுத்து விடுங்க தல! :)

------

அறிவு GV said...

வருகைக்கு மிக்க நன்றி தல. நீங்க தலன்னு கூப்பிடுற அளவுக்கெல்லாம் நான் ஆளில்லை. அப்பறம், நான் சொன்னது உண்மையா பொய்யான்னு மத்த பதிவர்கள் யாரை வேணும்னாலும் கேட்டு பாருங்க. :-)

கா.கி said...

@GV
my favs too.. irumbutthirai ippadhan theriyum.... will padichify...

அறிவு GV said...

வருகைக்கு நன்றி கார்த்திக். கண்டிப்பா இரும்புத்திரை உங்களுக்கு பிடிக்கும். அடிக்கடி வாங்க.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails