Saturday, December 5, 2009

மடிந்து போன வீரம்


உங்களுக்கு
ஒரு கேள்வி :
நீங்க கடைசியா உங்கள் வீரத்தைக் காட்டியது எப்போது?

கோபப்பட்டு கத்துவதை கணக்கில் சேர்க்காதீர்கள். அப்படியே அதை வீரம் என்று எடுத்துக்கொண்டாலும் அது அதிக பட்சம் நம் நண்பர்கள், அம்மா, அப்பா, மனைவி அல்லது குழந்தைகள் இவர்களுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. உற்சாக பானம் அருந்தும்போது வரும் வீரம் என்பது வேறு. அது கூட, அருந்தும் பானத்தின் அளவைப் பொறுத்து 'அடங்கிவிடுகிறது'. இதை ஏன் கேட்கிறேன் என்றால், சங்க காலத்திலிருந்தே வீரம் என்பது ஆண், பெண் பாகுபாடின்றி தமிழர்களின் ஒரு பண்பாகக் கருதப்பட்டது. ரத்தத்திலே ஊறியது என்றெல்லாம் கூட இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இன்றளவில் அது நீடிக்கிறதா இல்லை எந்த அளவு உள்ளது என்பதை உணரவே இந்த கேள்வி.

சிறு வயதில் நான் என் கிராமத்தில் சாலையின் குறுக்கே நின்றுகொண்டு லாரி, பஸ் என எதுவந்தாலும் மறிப்பேனாம். அப்பா சொல்லுவார். எனக்கு நினைவில் இல்லை. நினைவு தெரிந்து பள்ளியில் பலருடன் சண்டை போட்டிருக்கிறேன், என்னைவிட சின்னவன், பெரியவன் என்றெல்லாம் யோசிக்காமல். யார் ரொம்ப அடி வாங்குவார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் பயப்படாமல் சண்டையிட்டிருக்கிறேன். அதற்காக பின்னர் அப்பாவிடமும் அடி வாங்க வேண்டும். கொஞ்சம் வளர்ந்தபின் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது நண்பனுக்காக மூன்றாம் ஆண்டு மாணவனை எதிர்த்திருக்கிறேன். பின்னால் இறுதி ஆண்டில் சேர்மன் எலக்க்ஷனின் போது எதிர்பார்த்த அளவு பிரச்சனை வரவில்லை. உயர் கல்வி படிக்கும்போது என்னுடைய ஆர்வம் வேறு பக்கம் சென்றுவிட்டது (கண்டிப்பா படிப்பு இல்லீங்ணா). அப்படியும் கடைசி நாளில் நண்பன்(?) ஒருவன் சம்பந்தமே இல்லாமல் ஒரு பிரச்னைக்கு என்னை வம்பிழுக்க, சண்டைபோட்டோம். என்னைப் பொறுத்தவரை இதுதான் நான் என் வீரத்தைக்( :)) ) காட்டிய கடைசி தினம்..!

எனக்குத் தெரிந்து, சிறு வயதில் மட்டுமே வீரம் நம்மைச் சார்ந்து உள்ளது. கல்லூரிகளில் வீரத்தின் அளவுகோல் சற்று மாறுகிறது/கூடுகிறது. அது, கூட வரும் ஆட்களின் எண்ணிக்கை. முதல் அடி கோபத்தில் அடித்துவிட்டாலும் இரண்டாவது அடிக்கு முன் இதைப்பற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது. இதெல்லாம் கூட கடைசி பெஞ்ச் மாணவர்களின் செய்கைகள் என்று வீரத்தை தரம் பிரித்துவிடுகிறார்கள். ஏன், முதல் பெஞ்ச் மாணவர்கள் சண்டை போட மாட்டார்களா?(ஏனோ, போடுவதில்லை..!). நமக்கெல்லாம் பின்னாளில் வரும் அடக்கமும், பொறுமையும்(?!!) அவர்களுக்கு அப்போதே வந்துவிடும் போல. சரி விடுங்க. கல்லூரிக்குப் பிறகு பெரும்பாலானோர் குடும்பம், வேலை என்று சென்றுவிடுவதால் வீரத்தைக்காட்ட சந்தர்ப்பம் அமையாது போய்விடுகிறது. அப்படியே அமைந்தாலும் அதைத் தவிர்த்துவிடுகின்றார்கள். காரணம் அதேதான், குடும்பம் மற்றும் வேலை. இந்நாட்களில் உடலின் வீரம் அனைத்தும் வாயில் வந்து குவிந்துவிடுகிறது. பேசியே சமாளித்துவிடுகிறோம். திருமணத்திற்குப் பிறகு அந்த வீரமும் குறைந்துவிடுகிறது. சிலர் மட்டுமே வீரர்களாக இருக்க மற்றவர்கள் வீரன் போல் நடிக்கக் கற்றுக்கொள்கின்றனர். அதன் பிறகு அவர்களின் வாரிசுகள் வீரத்தைக் காட்டத்துவங்க, வாழ்க்கையின் சுழற்சியில் இவர்கள் அனைவருமே காணாமல் போய்விடுகின்றனர்.

பிறரை அடிப்பதுதான் வீரமா என்று நீங்கள் கேட்கலாம். அனால் அதுவும் வீரம் தானே. நாம் அடிக்காவிட்டாலும், நம்மை அடிக்க வருபவரைத் தடுக்கும் அளவிற்காவது வீரம் வேண்டுமல்லவா. அதுவே நம்மால் முடியாது என்றால், பழம்பெருமை பேசி என்ன பயன்? சட்டம், தற்காப்பு என்னும் கலை வியாபாரமானது, பயம், ஆர்வமின்மை இவைகள் தான் காரணங்களா..? எது எப்படியோ, மறு கன்னத்தைக் காட்டச்சொல்லி இயேசு சொன்னார். அதிலும் அறைந்தால் என்னிடம் வா என்று சட்டம் சொல்கிறது. திருப்பி அடி என்று யாருமே சொல்லவில்லை. அங்குதான் ஆரம்பித்தோம் நாம் கோழைகளாக மாற...!


டிஸ்கி :

நான் வீரம் என்று குறிப்பிடுவதை தைரியம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
சீரியசா ஒரு பதிவு போடலாம்னு யோசிச்சதன் பலன் இது. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.



6 comments:

பாலா said...

வீரங்கறது.. பயமில்லாத மாறி நடிக்கிறதுங்க!!

பாலா said...

நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லீங்க. நீங்க சொன்ன மாதிரிதான்.. வயசாக..ஆக.. இதெல்லாம் குறைஞ்சிடும்.

எப்பவாவது குங்ஃபு படம் பார்க்கும் போது மட்டும்.. கொஞ்சம் எட்டிப் பார்க்கும்.... வீட்டுக்கு வந்து பொண்டாட்டியை பார்க்கும் வரைக்கு!!

அஹோரி said...

எலக்ஷன் சமயத்துல பிரியாணி பொட்டலம் மிஸ் ஆயிட கூடாதுன்னு அடிச்சி பிடிச்சி அல்லகையிங்க திங்கறது இந்த பட்டியல்ல வருமா தல.

கமலேஷ் said...

ரொம்ப அழகான பதிவு....
அதுவும் நீங்கள் செலக்ட் பண்ணி போட்ட
முதல் படம் சரியான பொருத்தம்..
ஸ்பர்டன்ஸ் பற்றி சொல்லும் ஒரு வீரமிக்க படம்..
எனக்கு மிக பிடித்ததும் கூட....

தமிழ் உதயம் said...

மிகச்சரியாக சொல்லி இருக்கிறிர்கள். மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான்"

அறிவு GV said...

@ பாலா : ஹா ஹா ஹா..! ரொம்ப கரெக்ட் தல.
///வீட்டுக்கு வந்து பொண்டாட்டியை பார்க்கும் வரைக்கு///
நான் இன்னும் இந்த வலைல சிக்கலியே...!

@ அஹோரி : ஆஹா, வரும் ஆனா வராது :) (நான் பிரியாணி திங்க முடியாம பண்ணிடுவீங்க போல இருக்கே)

@ கமலேஷ் : நன்றி கமலேஷ். எனக்கும் அது ரொம்ப பிடித்த படம். வசனங்கள், இசை, நடிப்பு, மேக்கிங் - அசத்தல்.

@ தமிழ்உதயம் : ஆமாங்க தமிழ். ஆனா, அந்த கட்டெறும்பும் தேஞ்சு போச்சுன்னா என்ன ஆகும்..?

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails