Friday, December 18, 2009

வேட்டைக்காரன் (2009) - விமர்சனம்



புடிக்குதோ புடிக்கலையோ, பலராலும் எதிர்பார்க்கப்பட்ட 'வேட்டைக்காரன்' பல தடைகளைக் கடந்து இன்று ஒரு வழியாக திரைக்கு வந்துவிட்டான். வெளி வரும் முன்பே பலர் வாய்க்கு அவலாக இருந்த இப்படம் இனியும் அவர்களால் சில நாட்கள் மெல்லப்படும், குறிப்பாக பல பதிவர்களுக்கு பதிவு போட உதவும்.

ழக்கம் போல் இதிலும் நம் இளைய தளபதி அக்கிரமம் செய்பவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குகிறார். பெரிய போலீஸ் ஆகும் கனவுடன் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருகிறார் 'போலீஸ்' ரவி என்று அழைக்கப்படும் விஜய். வழியில் ரயில்வே ஸ்டேஷனில் அனுஷ்காவை சந்திக்க, பத்திக்கொள்கிறது காதல். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அப்போதைய அசிஸ்டன்ட் கமிஷனர் தான் அவருடைய ரோல் மாடல். அதற்காக அவரைப்போலவே ஆட்டோ ஒட்டிக்கொண்டு அவர் படித்த கல்லூரியிலேயே படிக்கிறார். அங்கே அவருக்கு ஒரு தோழி அமைய, படித்துக்கொண்டே அனுஷ்கா மீதான தான் ஒருதலைக் காதலையும் காமெடியுடன் கண்டின்யு பண்ணுகிறார். காதல் கைகூடி ஒரு டூயட் முடிந்தவுடன், தன் தோழிக்கு வரும் பிரச்னையை தன் கையில் எடுக்கிறார் விஜய். தோழியை சீண்டிய செல்லா என்கிற தாதாவை அவர் ஏரியாவுகுள்ளேயே சென்று பந்தாட, ஆரம்பிக்கிறது பிரச்சனை. தற்போதைய A.C யான ஷாயாஜி ஷிண்டே செல்லாவின் கையால் என்பதால் விஜய் கைது செய்யப்பட்டு பிறகு போலி என்கவுன்ட்டர் செய்ய அழைத்துச்செல்லப்படுகிறார். அவரின் ரோல் மாடலான IPS அதிகாரியை அனுஷ்கா சந்தித்து உதவி கோர, அவர் மறுத்துவிடுகிறார். தன் போலீஸ் கனவு, படிப்பு அனைத்தும் கானல் நீராகப் போய்விட்டதால், வருத்தம் மற்றும் கோபத்துடன் அவர்களிடமிருந்து தப்பிக்கிறார் விஜய். இடைவேளை.

நேராக அவரின் ரோல் மாடல் IPS அதிகாரியை சென்று சந்திக்க, அவர் தன்னால் உதவ முடியாத நிலையை ஒரு பிளாஷ்பேக்கோடு விஜயிடம் சொல்லுகிறார். அதற்கு காரணம் செல்லாவின் தந்தையும், பெரிய தொழிலதிபருமான தேவநாயகம், இவர் வேறு யாருமல்ல 'சின்ன கவுண்டர்' வில்லன் தான். பின் விஜய் தேவநாயகத்தை சந்திக்க, அவர் விஜய்யை தன்னுடனேயே இருந்துகொல்லுமாறு கூறி, ஒரு சாதாரண டீ கடையில் வேலைசெய்த தான் தொழிலதிபராக மாறியதற்கான அந்த ஒற்றை மந்திரத்தைக் கூறுகிறார். அதையே கடைப்பிடித்து, போலீஸ் ஆசையுடன் இருந்த விஜய் வேட்டைக்காரனாக அவதாரமெடுத்து எதிரிகளை துவம்சம் செய்கிறார். ஒருவர் மாற்றி ஒருவர் பழிவாங்கிக்கொள்ள, இறுதியில் அந்தக் கூட்டத்தை எப்படி வேரோடு அழிக்கிறார் என்பது தான் மீதி படமும், கிளைமாக்ஸும்.

மிழ் சினிமாவிற்கும், விஜய்க்கும், நமக்கும் மிகவும் பழக்கப்பட்ட அதே கதை தான். முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி அதிரடியாகவும் செல்கிறது. விஜய்யின் நடிப்பு, நடனம், காமெடி, ஆக்க்ஷன் அனைத்தும் ஓகே. ஆங்காங்கே சிதறியிருக்கிறது கொஞ்சம் அதிகப்படியான வசனங்கள். ரஜினி போல் ஒரு ஸ்டைலும் செய்கிறார். அனுஷ்கா பற்றி சொல்ல 'அழகு' என்பதை தவிர வேறொன்றும் இல்லை. அங்கங்கே வந்து தலைகாட்டிவிட்டு, ஆடிவிட்டு, நான் தான் இப்படத்தின் ஹீரோயின் என்று நமக்கு நினைவூட்டிவிட்டு ஓடிவிடுகிறார். விஜய்ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது. 'நான் அடிச்சா' பாடலில் ஜூனியர் விஜய்யும் வந்து பாடி நடனமாடுகிறார். 'புலி உறுமுது' நல்ல டெம்போ. 'உச்சி மண்டையில்' நமக்கு விருந்து. பின்னணி இசை பற்றி நான் அதிகம் கவனிக்கவில்லை, ஆனால் பரவாயில்லை. காமெடிக்கு சத்யனும், தாம் தூம் படத்தில் 'சின்னது' வாக காமெடி செய்தவரும். அதிகம் வேலையில்லை. சண்டை காட்சிகள் சில இடங்களில் கொஞ்சம் ஓவராக இருந்தாலும், நன்றாக அமைத்துள்ளார் கனல் கண்ணன்.

தை பழையதாக இருந்தாலும் திரைக்கதையை விஜய்கென்றே விறுவிறுப்பாக அமைத்துள்ளார் இயக்குனர் பாபு சிவன். இன்னும் கொஞ்சம் விஷயம் இருந்தால் பீல்டில் நிலைக்கலாம். உலக சினிமா மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு விஜய்யின் 'வேட்டைக்காரன்' மேலும் ஒரு குப்பையாகத் தெரியலாம், ஆனால் விஜய் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. மற்றவர்களுக்கு என்னால் சொல்லமுடிந்தது 'வில்லு, குருவி' அளவிற்கெல்லாம் படம் மோசமில்லை.


டிஸ்கி : படம் உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, விஜய் என்கிற தனிமனிதனை மட்டும் காரணமாக்கி அவரையும் அவர் ரசிகர்களையும் வம்புக்கு இழுக்காதீர்கள்.



வேட்டைக்காரன் : புதிய டப்பாவில் அதே மசாலா...!



வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

13 comments:

Anonymous said...

the story like Vikram's film Thil


1.பெரிய போலீஸ் ஆகும் கனவு

2. போலி என்கவுன்ட்டர் செய்ய அழைத்துச்செல்லப்படுகிறார்.

3.ரோல் மாடலான IPS அதிகாரி Nazcer

4. ரயில்வே ஸ்டேஷனில் அனுஷ்காவை சந்திக்க
in thil vikram meet her lover in Busstand.

5.அவர் தன்னால் உதவ முடியாத நிலையை ஒரு பிளாஷ்பேக்கோடு it is same thil Nazcer character

Kottapakkam Gopalu
Light Man Enthiran unit XII.

Unknown said...

ayyo....ayyo nalla samalikuriganaa....apa ethu killi ella kuruvithan athana...

ஹாய் அரும்பாவூர் said...

படம் உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, விஜய் என்கிற தனிமனிதனை மட்டும் காரணமாக்கி அவரையும் அவர் ரசிகர்களையும் வம்புக்கு இழுக்காதீர்கள்."""
தில் படத்தை மீண்டும் பார்க்கக் என்ன இருக்கு
இதில் விஜய் தவறு 100%அவர் மாறினால் கதை மாறும்
ரசிகர் அவரிடம் நல்ல கதை தான் கேட்கின்றனர் தொடர் குப்பை இல்லை

பாலா said...

/////
விஜய்யை தன்னுடனேயே இருந்து”கொல்லுமாறு” கூறி
/////

இது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா... இல்ல உள்குத்துங்களா? ஏன்னா.. கடைசி பாராவுல வேற டெரர் காட்டுறீங்க! :) :)

Anonymous said...

Neenga Dr.Vijay FAN nu prove panreenga "Disky" la :) :)

- Ganesh

SShathiesh-சதீஷ். said...

நல்ல விமர்சனம்.விஜயின் மேல் கொண்ட காழ்ப்புணர்வு விமர்சனங்களுக்கு இது நல்ல பதிலடி.

Unknown said...

kuruvikkum villukkum nadula irukkunu kelvi patten

வெற்றி said...

உள்ளது உள்ளபடி உள்ள விமர்சனம்..
//வில்லு,குருவி அளவிற்கெல்லாம் படம் மோசமில்லை..//
நீங்கள் சொல்வதைத்தான் என் நண்பர்களும் சொல்கிறார்கள்...

Anonymous said...

Its really good review. not just praising but giving Idea of the movie. It is irritating to see many hopeless blogger already criticized the movie before its release. Stupid People!!!! Nithy

அறிவு GV said...

@ கோபால் : அம்மாங்க. கிட்டத்தட்ட அது மாதிரி தான் இருக்கு படம். ஆனா ஓவர் மசாலா. :))

@ ராஜன் : சமாளிக்கலை ராஜன், மற்ற இரண்டு படங்களை விட இது பரவாயில்லைன்னு தான் சொல்றேன். மற்றபடி வழக்கமான விஜய் படம். புதுசா ஏதும் இல்லை.

@ அரும்பாவூர் : உண்மை தான், விஜய் ஒருமுறை முயற்சி செய்தாவது பார்க்கலாம். அவர் ரசிகர்களே மாற்றம் எதிர்பார்க்கும்போது தளபதி கண்டிப்பாக மாற முயற்சிக்க வேண்டும். நல்லகருத்து.

@ பாலா : தல, அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் தல. கழுகு கண்ணு உங்களுக்கு. :) சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
கடைசி பாரா ஒரு விளபரத்துக்கு தான். :)

@ கணேஷ் : நான் விஜய் ரசிகரோ இல்லையோ, தனி மனித தாக்குதல் தவறு என்பதே என் எண்ணம். நன்றி கணேஷ்.

@ சதீஷ் : நன்றி சதீஷ். :))

@ பேநா : படம் பாத்துட்டு நீங்களே சொல்லுங்களேன். :)

@ வெற்றி : நன்றி வெற்றி. என் கருத்து தங்கள் நண்பர்களோடும் ஒத்துபோவது எனக்கும் மகிழ்ச்சி.

@ நித்தி : திரை விமர்சனம் என்பது படத்தைப் பற்றி மட்டும் தானே நித்தி. எனது கருத்தை மட்டுமே நான் இங்கே கூறியுள்ளேன். ஒருசிலர் விளம்பரத்துக்காக மட்டுமே அப்படி எழுதுகிறார்கள். போகட்டும் விடுங்கள்.

வந்துபோன அனைவருக்கும் நன்றி.

வெற்றி said...

http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_21.html

வேட்டைகாரனைப் பற்றிய எனது பதிவு.

அறிவு GV said...

பாத்தாச்சு வெற்றி. அருமை. பின்னூட்டமும் போட்டாச்சு.

Anonymous said...

copy

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails